நகரும் அச்சு

நகரும் அச்சு (Movable type அல்லது moveable type ) அச்சுக்கலையிலும் அச்சிடலிலும் பயன்படுத்தப்படும் ஓர் தொழினுட்பம் ஆகும். இத்தொழில்நுட்பத்தில் நகர்த்தக்கூடிய அச்சுக்களைப் பயன்படுத்தி ஓர் ஆவணத்தின் கூறுகளை (பொதுவாக எழுத்துருக்களும் புள்ளிகளும்) ஊடகம் (பொதுவாக காகிதம்) ஒன்றின் மேல் அச்சிடுவதாகும்.

உலகில் முதன்முதலாக காகித நூல்களில் அச்சிட நகரும் அச்சுக்களைப் பயன்படுத்தியது சீனாவின் வடக்கு சோங் ஆட்சிப்பகுதியில் இருந்த பை செங் (990–1051) என்பவராகும்; இவர் கி.பி.1040இல் பீங்கான் அச்சுக்களைப் பயன்படுத்தியிருந்தார்.[1] தொடர்ந்து 1377இல் கொரியாவில் இந்த நுட்பத்தை வைத்து முதலில் அச்சிடப்பட்ட நூல் வெளியானது. இத்தொழில்நுட்பம் பெரும்பாலும் கிழக்காசியா பகுதிகளில் மட்டுமே பரவியிருந்தது. இங்கு வந்த கிறித்தவப் பாதிரிமார்களினால் இது ஐரோப்பாவிற்கு பின்னர் கொண்டு செல்லப்பட்டது. இவர்களது ஆவணங்களில் சில வாடிகன் நூலகத்திலும் ஆக்சுபோர்டின் போத்லியன் நூலகத்திலும் சேமிக்கப்பட்டுள்ளன.[2] ஏறத்தாழ 1450இல் யோகான்னசு கூட்டன்பர்கு நகரும் அச்சுக்களைக் கொண்ட அச்சு இயந்திரத்தை ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தினார்; இவரது அச்சுக்கள் அணிகளாகவும் கையால் வார்த்தவையாகவும் இருந்தன. ஐரோப்பிய மொழிகளுக்கு குறைந்த அகரவரிசை எழுத்துருக்களே தேவைப்பட்டது முதன்மை காரணமாக இருந்தது.[3] கூட்டன்பெர்கு தமது அச்சுக்களை ஈயம், வெள்ளீயம், அந்திமனி இவற்றின் கலவையால் செய்தார். இவை 550 ஆண்டுகளுக்கு மாற்றப்படாமல் சீர்தரமாக இருந்தன.[4]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நகரும்_அச்சு&oldid=3909215" இலிருந்து மீள்விக்கப்பட்டது