அச்சிடல்
அச்சிடல் (Printing) என்பது முதலுரு அல்லது வார்ப்புருவில் இருந்து எழுத்துகளையும் படிமங்களையும் மீள்ளாக்கம் செய்யும் செயல்முறையாகும். மிகப்பழைய எடுத்துகாட்டுகளாக உருளை வார்ப்புருக்களையும் சைரசு உருளையையும் நபோனிடசு உருளைகளையும் கூறலாம். மிகப்பழைய மரக்கட்டைவழி அச்சிடல் கி.பி 220 ஆம் ஆண்டுக்கும் முன்பே சீனாவில் உருவாகைப் பரவியது.[1] பின்னர் சீனாவில் கி.பி 1040 அளவில் நகர் எழுத்து அச்சிடல் முறையை பி ஷெங் என்பார் உருவாக்கினார்.[2] 15 ஆம் நூற்றாண்டில் நகர் எழுத்து அச்சிடல் எந்திரத்தை யோகான்னசு கூட்டன்பர்கு ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தினார். இவரது அச்சகம் மறுமலர்ச்சி, சீர்திருத்தம், அறிவொளி அறிவியல் புரட்சிக் காலங்களில் முதன்மையான பாத்திரம் வகித்து, இக்கால அறிவுசார் பொருளியலுக்கு வழிவகுத்தது. இது கல்வியை மக்களிடம் கொண்டுசென்றது.[3]
இன்று பேரளவு அச்சிடுகள் அச்சகத்திலும் சிற்ரளவு அச்சிடுகள் எண்ணிம அச்சுப்பொறிகளிலும் மேற்கொள்ளப்படுகின்றன. பொது அச்சீட்டுப் பொருளாக தாள் பயன்பட்டாலும் அச்சிடலுக்கு பொன்மங்கள். நெகிழிகள், துணிகள், கூட்டுப்பொருள்கள் போன்றனவும் பயனில் உள்ளன. தாளில் அச்சிடல், பதிப்புத் துறையிலும் ஆய்விதழ்களை அச்சிடலிலும் பேரள்வில் நடைபெறுகிறது.
அச்சிடல் பேரளவிலான தொழில் செயற்பாடாக இருக்கின்ற போதிலும், சிறிய அளவிலும் அச்சிடல் நடைபெற்று வருகின்றது. அச்சிடல், பதிப்புத் தொழிலின் ஒரு முக்கிய பகுதியாகும். 2005 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, உலகில் எல்லா மொழிகளிலுமாகச் சேர்ந்து மொத்தம் 45 டிரில்லியன் பக்கங்கள் அச்சாகின்றன[4]. 2006 ஆம் ஆண்டு அமெரிக்காவில் மட்டுமே 30,700 அச்சடிப்பு நிறுவனங்கள் இருந்தன. இவை 112 பில்லியன் டாலர் வணிகமாக இருந்தது[5]. அச்சில் இருந்து இணையத்துக்கு நகர்ந்தவை அமெரிக்காவில் 12.5% ஆக இருந்தன.
வரலாறு
தொகுமர அச்சு முறை
தொகுஇது எழுத்துக்கள், படிமங்கள், வடிவுருக்கள் ஆகியவற்றை அச்சிடுவதற்காக கிழக்காசியப் பகுதிகளில் பரவலாகப் பயன்பட்ட ஒரு முறையாகும். இது மிகப் பழங்காலத்திலேயே சீனாவில் தொடங்கியது. துணிகளில் அச்சிடுவதற்குப் பயன்பட்ட இம்முறை பின்னர் தாள்களில் அச்சிடுவதற்கும் பயன்பட்டது. துணிகளில் அச்சிடும் ஒரு முறையாக இது பயன்பட்டதற்கான மிகப்பழைய சான்று சீனாவில் கிபி 220க்கு முந்தியது. எகிப்தில் இது கிபி நான்காம் நூற்றாண்டுக்கு உரியது.
கிழக்காசியா
தொகுமிகப்பழைய மரக்கட்டை அச்சடிப்புத் துண்டங்கள் சீனாவில் தான் கிடைக்கின்றன. அவை பட்டுத் துணியால் அச்சடித்த மூவண்ணப் பூக்களாக கி.பி 220 முதல் அதாவது ஏன் பேரரசு காலம் முதல் கிடைக்கின்றன. மிகப்பழமையான மரக்கட்டையால் தாளில் அச்சிட்ட வகைகள் சீனாவில் ஏழாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இருந்து கிடைக்கின்றன.
கிபி 593 ஆம் ஆண்டளவில் முதலாவது அச்சு இயந்திரம் சீனாவில் உருவாக்கப்பட்டது. முதல் செய்தித்தாள் பெய்ஜிங்கில் கிபி 700 இல் கிடைக்கிறது. இது மர அச்சுகளைப் பயன்படுத்தியது. மர அச்சு முறையில் அச்சிடப்பட்டதும் படங்களுடன் கூடிய காலத்தால் முந்தியதுமான முழுமையான நூல் சீனாவில் 9 ஆம் நூற்றாண்டில் அச்சிடப்பட்ட வைர சூத்திரம் எனப்படும் பௌத்த நூலாகும். இது கி.பி 868 இல் அச்சிடப்பட்டது. .[6] பத்தாம் நூற்றாண்டளவில் சில சூத்திரங்களும் படங்களும் 400,000 படிகள் அச்சிடப்பட்டுள்ளன. திறமை வாய்ந்த அச்சுப் பணியாளர் ஒருநாளில் 2000 படிகள் அச்சடித்துள்ளார் .[7]
சீன அச்சாளரான பி ஷெங் என்பவர் தனித்தனியான அச்சுக்களை 1041 ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார். இவர் களிமண்ணால் அச்சுக்களைச் செய்ததால் அவை இலகுவாக உடையக்கூடியனவாக இருந்தன. வாங் சென் என்பவர் 1298 இல், இவ்வாறான அச்சுக்களை மரத்தினால் செய்தார்.
அச்சிடல் முதலில் கொரியாவுக்கும் யப்பான் எனும் நிப்பானுக்கும் பரவியது. இங்கு சீன படஎழுத்துகள் பயன்பட்டன. இந்த நுட்பம் பின் துர்பானுக்கும் வியட்நாமுக்கும் பரவியது. இவை வேறு எழுத்துகளுக்கு இந்நுட்பத்தைப் பயன்படுத்தினர். பிறகு பாரசீகத்துக்கும் உருசியாவுக்கும் அச்சிடல் நுட்பம் பரவியது.[8] இசுலாமிய உலகம் வாயிலாக இம்முறை ஐரோப்பவுக்குப் பரவியுள்ளது. கி.பி 1400 ஆம் ஆண்டளவில் இது தாளில் அச்சிடப் பயன்பட்டது. சீட்டு விளையாட்டு அட்டைகளையும் முந்தைய முன்னச்சுப் படிவங்களையும் அச்சிட இம்முறை பயனாகியது.[9] என்றாலும், இசுலாமியக் கொள்கைக்காக, அராபியர் குரானை அச்சிட இம்முறையைப் பின்பற்றவில்லை.[8]
நடுவண் கிழக்குப் பகுதியில்
தொகுதார்ழ்சு என ராபிய மொழியில் வழங்கிய மரக்கட்டை அச்சடிப்பு முறை அராபிய எகுபதில் ஒன்பதாம் பத்தாம் நூற்றாண்டுகளில் வழிபாடுகளையும் அமுலெத்துகளையும் அச்சிட உருவாக்கப்பட்டுள்ளது. இவை மரம் தவிர, தகரம், ஈயம், களிமண் கொண்டும் செய்யப்பட்ட்தற்கான சில சான்றுகள் உள்ளன. இதற்குப் பயன்பட்ட நுட்பங்கள் பற்றியேதும் தெரியவில்லை என்பதோடு இம்முறை முசுலீம் உலகை விட்டு வெளியில் பரவியதாகவும் தெரியவில்லை.
ஐரோப்பாவில்
தொகுஅச்சீட்டுத் திறம்
தொகுபல்வேறு அச்சக வடிவமைப்புகளொரு மணியில் அச்சிடவல்ல பெருமப் பக்கங்களின் பட்டியல்.
கை இயக்க முறை அச்சகங்கள் | நீராவி இயக்க அச்சகங்கள் | |||||
---|---|---|---|---|---|---|
கூட்டம்பர்கு-பாணி ca. 1600 |
சுட்டானோப் அச்சகம் கி.பி 1800 |
கோயெனிகு அச்சகம் 1812<!—பிரித்தானிய உரிம எண்கள் 3496 and 3725 --> |
கோயெனிகு அச்சகம் 1813 |
கோயெனிகு அச்சகம் 1814 |
கோயெனிகு அச்சகம் 1818 | |
ஒரு மணிக்கான அச்சடிப்புகள் | 200 [10] | 480 [11] | 800 [12] | 1,100 [13] | 2,000 [14] | 2,400 [14] |
அச்சிடல்முறைகளின் ஒப்பீடு
தொகுஅச்சிடும் செயல்முறை | பரிமாற்ற முறை | தரப்படும் அழுத்தம் | நீர்மத் துளியளவு | இயங்கியல் பிசுப்புமை | படலமீது மையின் தடிப்பு | குறிப்புகள் | செலவுச் சிக்கன ஓட்ட நீளம் |
---|---|---|---|---|---|---|---|
மறுதோன்றி அச்சிடல் | உருளிகள் | 1 MPa | 40–100 Pa•நொ | 0.5–1.5 µமீ | உயர் அச்சுத் தரம் | >5,000 (A3 கச்சித அளவு, தாள்-ஊட்டம்)[16]
>30,000 (A3 கச்சித அளவு, தொடர்வலை-ஊட்டம்)[16] | |
Rotogravure | உருளிகள் | 3 MPa | 50-200 mPa•நொ | 0.8–8 µமீ | தடிப்பான மையடுக்கு இயலும், மீத்தரப் படிம மீளாக்கம், எழுத்து, வரி விளிம்புகள் நீட்சி[17] |
>500,000[17] | |
Flexography | உருளிகள் | 0.3 MPa | 50–500 mPa•நொ | 0.8–2.5 µமீ | உயர்தரம் (இப்போது உயரடர்த்தி) | ||
எழுத்து அமுக்க அச்சிடல் | தட்டு | 10 MPa | 50–150 Pa•நொ | 0.5–1.5 µமீ | மெதுவாக உலர்தல் | ||
திரை-அச்சிடல் | திரைத் துளைகள் ஊடாக மையை அமுக்கல் | <12 µமீ | பொதுமுறை, தாழ்தரம் |
||||
மின் ஒளிப்படவியல் | மின் நிலைப்பியல் | 5–10 µமீ | தடிப்பு மை | ||||
நீர்ம மின் ஒளிப்படவியல் | மின் நிலைப்பியலாக படிமம் உருவாதல் பொருதுகையில் படிமப் பரிமாற்றம் | உயர் பட்த்தரம், மீத்தரப் படிம மீளாக்கம், அகல் ஊடக நெடுக்கம், மிக மெல்லிய படிமம், | |||||
மைத்தாரை அச்சுப்பொறி | வெப்பமுறை | 5–30 பிக்கோலிட்டர்கள் (pl) | 1–5 Pa•நொ[சான்று தேவை] | <0.5 µமீ | கசிவு தடுப்புச் சிறப்புத் தாள் | <350 (A3 கச்சித அளவு)[16] | |
மைத்தாரை அச்சுப்பொறி | அழுத்தமின்முறை | 4–30 பிக்கோலிட்டர்கள் ( pl) | 5–20 mPa நொ | <0.5 µமீ | கசிவு தடுப்புச் சிறப்புத் தாள் | <350 (A3 கச்சித அளவு)[16] | |
மைத்தாரை அச்சுப்பொறி | தொடர்முறை | 5–100 pl | 1–5 mPa•நொ | <0.5 µமீ | கசிவு தடுப்புச் சிறப்புத் தாள் | <350 (A3 கச்சித அளவு)[16] | |
பரிமாற்ற அச்சீடு | வெப்ப்ப் பரிமாற்றப் படலம் அல்லது நீர் விடுவித்தல் முறை | சீரற்ற அல்லது வளைவான பரப்பில் படிமம் உருவாக்கும் பெருவாரி அச்சீடு |
உசாத்துணை
தொகு- ↑ Shelagh Vainker in Anne Farrer (ed), "Caves of the Thousand Buddhas", 1990, British Museum publications, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7141-1447-2
- ↑ "Great Chinese Inventions". Minnesota-china.com. Archived from the original on டிசம்பர் 3, 2010. பார்க்கப்பட்ட நாள் July 29, 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Rees, Fran. Johannes Gutenberg: Inventor of the Printing Press
- ↑ "When 2% Leads to a Major Industry Shift பரணிடப்பட்டது 2008-02-16 at the வந்தவழி இயந்திரம்" Patrick Scaglia, August 30, 2007.
- ↑ பார்ன்சு அறிக்கைகள்
- ↑ "Oneline Gallery: Sacred Texts". British Library. பார்க்கப்பட்ட நாள் March 10, 2012.
- ↑ Tsuen-Hsuin, Tsien; Needham, Joseph (1985). Paper and Printing. Science and Civilisation in China. Vol. 5 part 1. Cambridge University Press. pp. 158, 201.
- ↑ 8.0 8.1 Thomas Franklin Carter, The Invention of Printing in China and its Spread Westward, The Ronald Press, NY 2nd ed. 1955, pp. 176–178
- ↑ Mayor, A Hyatt. Prints and People. Vol. 5–18. Princeton: Metropolitan Museum of Art. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-691-00326-2.
- ↑ Pollak, Michael (1972). "The performance of the wooden printing press". The library quarterly 42 (2): 218-264.. http://www.jstor.org/stable/4306163. பார்த்த நாள்: 10 May 2017.
- ↑ Bolza 1967, ப. 80
- ↑ Bolza 1967, ப. 83
- ↑ Bolza 1967, ப. 87
- ↑ 14.0 14.1 Bolza 1967, ப. 88
- ↑ Kipphan, Helmut (2001). Handbook of print media: technologies and production methods (Illustrated ed.). Springer. pp. 130–144. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-540-67326-1.
- ↑ 16.0 16.1 16.2 16.3 16.4 Kipphan, Helmut (2001). Handbook of print media: technologies and production methods (Illustrated ed.). Springer. pp. 976–979. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-540-67326-1.
- ↑ 17.0 17.1 Kipphan, Helmut (2001). Handbook of print media: technologies and production methods (Illustrated ed.). Springer. pp. 48–52. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-540-67326-1.
இவற்றையும் காண்க
தொகுமேலும் படிக்க
தொகு- Saunders, Gill; Miles, Rosie (May 1, 2006). Prints Now: Directions and Definitions. Victoria and Albert Museum. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85177-480-7.
- Lafontaine, Gerard S. (1958). Dictionary of Terms Used in the Paper, Printing, and Allied Industries. Toronto: H. Smith Paper Mills. 110 p.
- Nesbitt, Alexander (1957). The History and Technique of Lettering. Dover Books.
- Steinberg, S.H. (1996). Five Hundred Years of Printing. London and Newcastle: The British Library and Oak Knoll Press.
- Gaskell, Philip (1995). A New Introduction to Bibliography. Winchester and Newcastle: St Paul's Bibliographies and Oak Knoll Press.
- Elizabeth L. Eisenstein, The Printing Press as an Agent of Change, Cambridge University Press, September 1980, Paperback, 832 pages, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-29955-1
- Marshall McLuhan, The Gutenberg Galaxy: The Making of Typographic Man (1962) Univ. of Toronto Press (1st ed.); reissued by Routledge & Kegan Paul பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7100-1818-5
- Tam, Pui-Wing The New Paper Trail, The Wall Street Journal Online, February 13, 2006 Pg.R8
- Tsien Tsuen-hsuin (1985). Paper and Printing. Joseph Needham, Science and Civilisation in China, Chemistry and Chemical Technology. 5 part 1. Cambridge University Press
- Woong-Jin-Wee-In-Jun-Gi No. 11 Jang Young Sil by Baek Sauk Gi. Copyright 1987 Woongjin Publishing Co., Ltd. Pg. 61.
கூட்டன்பர்கு அச்சிடலின் விளைவுகள்
தொடக்கநிலையில் கையால் அச்சடித்தவர் கையேடுகள்
- Moxon, Joseph (1962). Herbert, Davies; Carter, Harry. eds. Mechanick Exercises on the Whole Art of Printing (reprint ). New York: Dover Publications.
- A somewhat later one, showing 18th century developments is
- Stower, Caleb (1965). The Printer's Grammar (reprint ). London: Gregg Press.
வெளி இணைப்புகள்
தொகு- "Printing". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 22. (1911).
- Prints & People: A Social History of Printed Pictures, an exhibition catalog from The Metropolitan Museum of Art (fully available online as PDF)
- Centre for the History of the Book பரணிடப்பட்டது 2008-06-24 at the வந்தவழி இயந்திரம்
- Children of the Code – Online Video: The DNA of Science, The Alphabet and Printing
- Planet Typography – history of printing – selection of international sites dedicated to the history of printing
- Printing Industries of the Americas பரணிடப்பட்டது 2019-08-24 at the வந்தவழி இயந்திரம் – national trade association for printers and companies in the graphic arts
- Printwiki
- The development of book and printing. English website of the Gutenberg-Museum Mainz (Germany)
- BPSnet British Printing Society
- Taiwan Culture Portal: Ri Xing Type Foundry- preserving the true character of Chinese type பரணிடப்பட்டது 2011-05-24 at the வந்தவழி இயந்திரம்
- A collection of printing materials from the 19th Century – Documents printed by R. Mathison Jr., The Job Printer, in Vancouver, B.C. - UBC Library Digital Collections
- International Printing Museum, Carson, CA, Web site
- Museum of Printing, Andover, MA, Web site