புளோரன்சு

(புளோரன்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

புளோரன்சு (Florence) [2] என்பது இத்தாலியில் அமைந்துள்ள துஸ்கனி பிராந்தியத்தினதும் புளோரன்சு மாகாணத்தினதும் தலைநகரம் ஆகும். துஸ்கனி பிராந்தியத்திலே மிகவும் பிரபல்யமான நகரம் இதுவாகும். அண்ணளவாக 382,000 மக்கள் இங்கு வசிந்து வருகின்றனர். வரலாற்று ரீதியாக இந்நகரம் அனைவராலும் அறியப்பட்டதாகும். மத்திய கால ஐரோப்பாவினது வணிக, வர்த்தக மத்திய நிலையமாக இது விளங்கியதோடு செல்வந்த நகரங்களில் ஒன்றாகவும் காணப்பட்டது.[3] அத்துடன் மறுமலர்ச்சியின் பிறப்பிடமாகவும் இந்நகரமே கருதப்படுகின்றது. அத்துடன் "மத்திய காலத்தின் ஏதென்ஸ்" எனவும் இது அழைக்கப்படுகின்றது.[4] இது பல ஆண்டுகளாக மெடிசி பரம்பரையினரால் ஆளப்பட்டு வந்தது.[5] அத்துடன் 1865 ஆம் ஆண்டில் இருந்து 1871 ஆம் ஆண்டு வரை இத்தாலி இராச்சியத்தின் தலைநகரமாக விளங்கியது. புளோரன்சு வர்த்தக நிலையத்தினை பர்வையிடுவதற்கா ஆண்டு தோறும் பல மில்லியன் கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருவதுண்டு. யூரோமொனிட்டர் இன்டெர்னசனல்ஸ் இனால் 2012 ஆம் ஆண்டில் பல மக்களால் தரிசிக்கப்பட்ட இடங்களுள் 89 ஆவதாக இந்நகரம் பட்டியலிடப்பட்டது.[6] 1982 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவினால் உலக பாரம்பரியக் களமாக இது பிரகடனப்படுத்தப்பட்டது.

புளோரன்சு
பிரென்சே
Comune di Firenze
A collage of Florence showing the Galleria degli Uffizi (top left), followed by the Palazzo Pitti, a sunset view of the city and the Fountain of Neptune in the Piazza della Signoria
A collage of Florence showing the Galleria degli Uffizi (top left), followed by the Palazzo Pitti, a sunset view of the city and the Fountain of Neptune in the Piazza della Signoria
புளோரன்சு-இன் கொடி
கொடி
புளோரன்சு-இன் சின்னம்
சின்னம்
நாடுஇத்தாலி
மண்டலம் டசுக்கனி
மாகாணம்புளோரன்சு மாகாணம் (FI)
அரசு
 • நகரத் தந்தைடார்டியோ நார்டெல்லா ([[List of political parties in Italy|PD]])
பரப்பளவு
 • மொத்தம்102.41 km2 (39.54 sq mi)
ஏற்றம்
50 m (160 ft)
மக்கள்தொகை
 (31 December 2014)[1]
 • மொத்தம்3,81,037
இனங்கள்Florentine, fiorentino
நேர வலயம்ஒசநே+1 (CET)
 • கோடை (பசேநே)ஒசநே+2 (CEST)
அஞ்சல் குறியீடு
50121–50145
Dialing code055
பாதுகாவல் புனிதர்திருமுழுக்கு யோவான்
புனிதர் நாள்24 June
இணையதளம்அதிகாரப்பூர்வ இணையதளம்

மேற்கோள்கள்

தொகு
  1. 'City' population (i.e., that of the comune or municipality) from demographic balance: January–April 2009[தொடர்பிழந்த இணைப்பு], ISTAT.
  2. Alternative obsolete form: Fiorenza [fjoˈrɛntsa]; இலத்தீன்: Florentia
  3. "Economy of Renaissance Florence, Richard A. Goldthwaite, Book – Barnes & Noble". Search.barnesandnoble.com. 23 April 2009. Archived from the original on 4 ஏப்ரல் 2010. பார்க்கப்பட்ட நாள் 22 January 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. Spencer Baynes, L.L.D., and W. Robertson Smith, L.L.D., Encyclopædia Britannica. Akron, Ohio: The Werner Company, 1907: p.675
  5. Brucker, Gene A. (1969). Renaissance Florence. New York: Wiley. p. 23. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0520046951.
  6. "Euromonitor International's top city destinations ranking". 27 January 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புளோரன்சு&oldid=3581474" இலிருந்து மீள்விக்கப்பட்டது