1450கள்
1450கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1450ஆம் ஆண்டு துவங்கி 1459-இல் முடிவடைந்தது.
நிகழ்வுகள்
1450
- பெப்ரவரி 26 – பிரான்சிசுக்கோ சிபோர்சா மிலனைக் கைப்பற்றி, அதன் இளவரசனானான். இதன் மூலம் இவனது வம்சம் அடுத்த நூறாண்டுகளுக்கு மிலன் நகரை ஆட்சி செய்தது.
- மே 8 – இங்கிலாந்தின் ஆறாம் என்றிக்கு எதிராக கென்ட் நகரத்தினர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
- சூலை 6 – கன் பிரான்சிடம் வீழந்தது.
- ஆகத்து 12 – நார்மாண்டியின் கடைசி ஆங்கிலேயப் பகுதியான செர்போர்க் பிரான்சிடம் வீழ்ந்தது.
- அக்டோபர் 5 – யூதர்கள் கீழ் பவேரியாவில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
- நவம்பர் 3 – பார்செலோனா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.
- முன்-கொலம்பியக்கால இன்கா நகரமான மச்சு பிச்சு கடல்மட்டத்திலிருந்து 2,400 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டது.[1]
- குட்டன்பேர்க் தனது முதலாவது அச்சியந்திரத்தை செருமனியின் மாயின்சு நகரில் நிறுவினார்.[2]
- யாழ்ப்பாணத்தில் செண்பகப் பெருமாள் ஆட்சி ஆரம்பமானது.
1451
- பெப்ரவரி 3 – உதுமானியப் பேரரசர் இரண்டாம் முராது இறந்தார். அவரது மகன் இரண்டாம் முகமது பேரரசனானார்.
- ஏப்ரல் 19 – தில்லி சுல்தானகத்தில், ஆப்கானிய லெளதி வம்சத்தின் ஆட்சி முடிவுக்கு வந்து துருக்கிய சையிது வம்சம் ஆட்சியில் அமர்ந்தது.
- ஜூன் 30 – பிரெஞ்சுப் படையினர் பொர்தோவைக் கைப்பற்றினர்.
- கிளாஸ்கோ பல்கலைக்க்ழகம் அமைக்கப்பட்டது.
- கூசாவின் நிக்கொலாசு என்பவர் கிட்டப்பார்வைக்கான தீர்வாக மூக்குக் கண்ணாடியைக் கண்டுபிடித்தார்.
1452
- பெப்ரவரி 22 – ஸ்டர்லிங்கு அரண்மனையில் இசுக்கொட்லாந்தின் இரண்டாம் யேம்சு மன்னர் டகிளசின் 8வது பிரபு வில்லியம் டகிளசுவைக் கொலை செய்தான்.[3]
- சூன் 18 – திருத்தந்தை ஐந்தாம் நிக்கலாசு குடியேற்ற நாடுகளின் அடிமை வணிகத்தை சட்டபூர்வமாக்க ஆணை ஓலையை அறிவித்தார்.[4]
- வனுவாட்டுவில் குவாயே என்ற தெற்கு பசிபிக் எரிமலை வெடித்ததில், அதிகளவு சல்பேற்றுகளை வெளியேற்றியது.[5]
1453
- ஏப்ரல் 2–மே 29 – கான்சுடன்டினோப்பிளின் வீழ்ச்சி: உதுமானிய சுல்தான் இரண்டாம் முகமது பைசாந்திய (கிழக்கு உரோமைப்) பேரரசை முடிவுக்குக் கொண்டு வந்தார்.[6][7]
- பட்டுப் பாதை வழியே வணிகம் மேற்கொள்வது நிறுத்தப்பட்டது.
- மே 22 – பகுதி நிலா மறைப்பு நிகழ்ந்தது.
- அக்டோபர் 19 – நூறாண்டுப் போரின் இறுதிக் கட்டம். பிரான்சியர் பொர்தோவை மீளக் கைப்பற்றினர்.
- இங்கிலாந்தில் ரோசாப்பூப் போர்கள் ஆரம்பம்.
- கோட்டை இராச்சியத்தின் யாழ்ப்பாணப் படையெடுப்பு ஆரம்பமானது.
1454
- பெப்ரவரி 4 – புருசியக் கூட்டமைப்பு, போலந்து இராச்சியம் ஆகியவற்றுக்கிடையில் பதின்மூன்று ஆண்டுகள் (1454–66) ஆரம்பமானது.
- திருச்சபை வரலாற்றின் நடுக் காலம் ஆரம்பம்.
- குட்டன்பேர்க்கின் அச்சியந்திரசாலை முதலாவது அச்சுநூல்களை அச்சிட்டது.
1455
- ஜனவரி 8 – கிறித்தவர்கள் அல்லாதோரின் நிலங்களைக் கைப்பற்றவும், அவர்களை அடிமைகளாக்கவும் அனுமதியளிக்கும் ஆணையை திருத்தந்தை ஐந்தாம் நிக்கொலாசு போர்த்துக்கல் மன்னர் ஐந்தாம் அல்பொன்சோவிற்குப் பிறப்பித்தார்.[8]}}
- பெப்ரவரி 23 – நவீன அசையும் அச்சு மூலமாகத் தயாரிக்கப்பட்ட முதலாவது நூல் குட்டன்பேர்க் விவிலியம் நூல் வெளியிடப்பட்டது.
- ஏப்ரல் 8 – மூன்றாம் காலிக்டசு 209வது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- இங்கிலாந்தில் ரோசாப்பூப் போர்கள் ஆரம்பமாயின.
- மே 22 – யோர்க் குறுநில மன்னர் ரிச்சார்டு செயிண்ட் அல்பான்சில் இங்கிலாந்தின் ஆறாம் என்றி மன்னரைத் தோற்கடித்து சிறைப்பிடித்தார்.[9]
1456
- மே 18 – 15,000 படைகளுடன் உதுமானியர்கள் அல்பேனியாவைத் தாக்கினர். ஆனால் ஜியார்ச் காசுட்டியரின் சிறிய படைகளால் தோற்கடிக்கப்பட்டனர்.
- ஜூன் 9 – ஹேலியின் வால்வெள்ளி தோன்றியது.
- சூலை 7 – ஜோன் ஆஃப் ஆர்க் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டு 25 ஆண்டுகளின் பின்னர் அவர் குற்றமற்றவராக அறிவிக்கப்பட்டார்.[10]
- அல்வைசு கடமோஸ்டோ கேப் வர்டி தீவுகளைக் கண்டுபிடித்தார்.
- சியாம் மலாக்கா அரசின் மீது படை எடுத்தது.
1457
- பெப்ரவரி 11 – சீனாவின் செங்தொங் பேரரசர் தியான்சுன் பேரரசராக மீண்டும் நியமிக்கப்பட்டார்.
- பெப்ரவரி 24 – சுவீடனின் எட்டாம் சார்லசு மன்னர் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தென்மார்க்கின் முதலாம் கிறித்தியானுக்கு ஆட்சியைக் கொடுக்க உறுதிமொழி அளிக்கப்பட்டது.
- சூன் 23 – முதலாம் கிறித்தியான் சுவீடனின் மன்னராக முடி சூடினார்.
- சூலு சுல்தானகம் உருவானது.
1458
- சனவரி 24 – மத்தயாசு கோர்வீனசு அங்கேரியின் மன்னராக முடிசூடினார்.
- ஆகத்து 19 – இரண்டாம் பயசு 210வது திருத்தந்தையாகப் பதவியேற்றார்.
- அக்டோபர் 24 – போர்த்துகலின் ஐந்தாம் அல்போன்சோ வடக்கு ஆப்பிரிக்காவின் சார் எசு0செகீரைக் கைப்பற்றினார்.[11]
- லூயிசு கடமோசுட்டோ முதலாவது கேப் வர்டி தீவுகளைக் கண்டுபிடித்தார்.
- யூதர்கள் செருமனியின் எர்பூர்ட் நகரில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.[12]
1459
- செப்டம்பர் 23 – ரோசாப்பூப் போர்கள்: இங்கிலாந்தில் புளோர் ஈத் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் சலிசுபரி பிரபுவின் படைகள் இலங்காசுட்டர் படைகளைத் தோற்கடித்தன.
- அக்டோபர் 12 – ரோசாப்பூப் போர்கள்: மன்னரின் படைகள் லுத்லோவ் கோட்டையை நெருங்கியதை அடுத்து, யோர்க் பிரபு ரிச்சார்ட் பிளான்டசெனெட் அயர்லாந்துக்குத் தப்பி ஓடினார்.
- சோத்பூர் நகரம் உருவாக்கப்பட்டது.
பிறப்புகள் தொகு
1450
- இப்ராகிம் லௌதி, தில்லி சுல்தானகத்தின் 31வது சுல்தான் மற்றும் லௌதி வம்சத்தின் 3வது சுல்தான் (இ. 1526)
- இரண்டாம் நரசிம்ம ராயன், விஜயநகரப் பேரரசின் சாளுவ மரபின் முதல் அரசனான சாளுவ நரசிம்ம தேவ ராயனின் இரண்டாவது மகன் (இ. 1505)
- இரானிமசு போசு, இடச்சு/நெதர்லாந்திய ஓவியர் (இ. 1516)
- சிக்கந்தர் லௌதி, லௌதி வம்சத்தின் 2வது சுல்தான் (இ. 1517)
- திம்ம பூபாலன், விஜயநகரப் பேரரசின் அரசன் (இ. 1491)
- பிரான்சிஸ் கோ டீ அல்மெய்டா, இந்தியாவில் போர்ச்சுகீசியர்களின் வாணிபத்தை கவனித்த முதல் ஆளுநர் (இ. 1510)
- பிரௌத ராயன், விஜயநகரப் பேரரசின் அரசன் (இ. 1401)
- ரவிதாசர், வட இந்திய துறவி (இ. 1520)
- வீரநரசிம்ம ராயன், விஜயநகரப் பேரரசின் அரசன் (இ. 1509)
- ஜான் கபோட், இத்தாலிய நாடுகாண் பயணி (இ. 1498)
1451
- ஏப்ரல் 22 – முதலாம் இசபெல்லா, காசுடைலின் அரசி (இ. 1504)
- கொலம்பசு, இத்தாலிய நாடுகாண் பயணி (இ. 1506)
- மே 9 – அமெரிகோ வெஸ்புச்சி, இத்தாலிய நாடுகாண் பயணி (இ. 1512)
1452
- ஏப்ரல் 15 – லியொனார்டோ டா வின்சி, இத்தாலிய ஓவியர், கண்டுபிடிப்பாளர் (இ. 1519)
- அக்டோபர் 2 – இங்கிலாந்தின் மூன்றாம் ரிச்சர்டு மன்னர் (இ. 1485)
1453
- அபோன்சோ டி அல்புகெர்க்கே, போர்த்துகல் நாட்டின் அரசியலாளர்; பெரும்படைத் தலைவர் (இ. 1515)
1454
- மார்ச் 9 – அமெரிகோ வெஸ்புச்சி, இத்தாலிய நாடுகாண் பயணி (இ. 1512)
1456
- உமர் ஷேக் மிர்ஸா II, பெர்கானா பள்ளத்தாக்கின் ஆட்சியாளராக இருந்தவர் (இ. 1494)
இறப்புகள் தொகு
1450
- செப்டம்பர் 2 - அகமது இப்னு அரபுசா, நடுக்காலத்தில் வாழ்ந்த ஒரு அரபு எழுத்தாளர் மற்றும் பயணி (பி. 1389)
- மே 18 - அப்துல் லத்தீப் மிர்சா, பால்கின் ஆளுநர் (பி. 1420)
1453
- அக்பர்சின், வடக்கு யுவான் அரசமரபின் அரியணைக்கு உரிமை கோரியவர்களில் ஒருவர் (பி. 1423)
- டக்கோலா, இத்தாலிய அரசு நிர்வாகி, கலைஞர், பொறியியலாளர் (பி. 1382)
1457
1459
- முதலாம் சாமராச உடையார், மைசூர் மன்னர்
மேற்கோள்கள் தொகு
- ↑ "Historic Sanctuary of Machu Picchu — UNESCO World Heritage Centre". யுனெசுக்கோ. 2006. http://whc.unesco.org/pg.cfm?cid=31&id_site=274. பார்த்த நாள்: 9 December 2006.
- ↑ Klooster, John W. (2009). Icons of invention: the makers of the modern world from Gutenberg to Gates. Santa Barbara, CA: ABC-CLIO. பக். 8. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-313-34745-0.
- ↑ Stewart Smith, J, The Grange of St.Giles, Edinburgh, 1898, p.228.
- ↑ Davenport, Frances Gardiner, and Paullin, Charles Oscar. 1917. European Treaties Bearing on the History of the United States and Its Dependencies to 1684. Carnegie Institution of Washington. p. 12.
- ↑ Gao, Chaochao; Robock, Alan; Self, Stephen; Witter, Jeffrey B.; J. P. Steffenson, Henrik Brink Clausen, Marie-Louise Siggaard-Andersen, Sigfus Johnsen, Paul A. Mayewski and Caspar Ammann (2006). "The 1452 or 1453 A.D. Kuwae eruption signal derived from multiple ice core records: Greatest volcanic sulfate event of the past 700 years". Journal of Geophysical Research 111 (D12107): 11. doi:10.1029/2005JD006710. Bibcode: 2006JGRD..11112107G. http://climate.envsci.rutgers.edu/pdf/Kuwae27.pdf.
- ↑ Crowley, Roger (2006). Constantinople: The Last Great Siege, 1453. Faber. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-571-22185-8.
- ↑ Foster, Charles (22 September 2006). "The Conquestof Constantinople and the end of empire". Contemporary Review. http://www.encyclopedia.com/doc/1G1-155920054.html. "It is the end of the Middle Ages")
- ↑ Pope Nicholas V, "Romanus Pontifex", January 8, 1455, Indigenous People
- ↑ Michael Hicks, The Wars of the Roses, (Yale University Press, 2010), 114.
- ↑ Nullification trial sentence rehabilitation. (Accessed 12 பெப்ரவரி 2006)
- ↑ Vasconcelos e Sousa, Bernardo. "História de Portugal" (in Portuguese) (4th ). p. 182.
- ↑ Lemaître, Frédéric (19 செப்டம்பர் 2011). "Erfurt, ses juifs et l'UNESCO" (in பிரெஞ்சு). Le Monde. http://www.lemonde.fr/europe/article/2011/09/19/erfurt-ses-juifs-et-l-unesco_1574328_3214.html. பார்த்த நாள்: 19 September 2011.