இங்கிலாந்தின் மூன்றாம் ரிச்சர்டு

ரிச்சர்டு III (Richard III, 1452–1485) ஓர் ஆங்கில மன்னன். 1483 முதல் 1485 வரை இவர் ஆட்சி புரிந்தார்.

ரிச்சர்டு III
ரிச்சர்டு III இங்கிலாந்து மற்றும் பிரான்சின் மன்னர்,
அயர்லாந்தின் பிரபு
இங்கிலாந்து மன்னர்
ஆட்சிக்காலம்26 சூன் 1483 – 22 ஆகத்து 1485 (2 ஆண்டுகள், 57 நாட்கள்)
முடிசூட்டுதல்6 சூலை 1483
முன்னையவர்எட்வர்டு V
பின்னையவர்என்றி VII
பிறப்பு(1452-10-02)2 அக்டோபர் 1452
போதெரிங்கே கோட்டை மாளிகை, நார்த்தாம்டன்சையர்
இறப்பு22 ஆகத்து 1485(1485-08-22) (அகவை 32)
போசுவொர்த் களம், லீசெஸ்டர்சையர்
புதைத்த இடம்
கிரைபிரியர்சு (பிரான்சியன் பிரியரி), லீசெஸ்டர்[1]
துணைவர்ஆன் நெவில்
குழந்தைகளின்
பெயர்கள்
மிடில்ஹாமின் எட்வர்டு, வேல்சு இளவரசர்
மரபுயார்க் மாளிகை
தந்தைரிச்சர்டு பிளான்டஜெனட், யார்க் கோமகன்
தாய்செசிலி நெவில், யார்க் கோமகள்

ரிச்சர்டு, யார்க் கோமகன் ரிச்சர்டின் மிகவும் இளைய மகனாவார். இவருக்கு மூன்று அண்ணன்கள், எட்வர்டு, எட்மண்டு,ஜார்ஜ் இருந்தனர். இரோசாப்பூப் போர்களின் போது இவரது தந்தை ரிச்சர்டும் இரண்டாம் மகன் எட்மண்டும் போரில் கொல்லப்பட்டனர். மூத்தவர், எட்வர்டு, மிகச் சிறந்த போர்வீரராக போராடி இங்கிலாந்தின் அப்போதைய மன்னர் என்றி VIஐ வென்று இங்கிலாந்தின் முடியாட்சியை வென்றார். இங்கிலாந்தின் நான்காம் எட்வர்டு என முடிசூட்டிக் கொண்டார். இதன் பின்னர் இவரது இரு தம்பிகள் ஜார்ஜும் ரிச்சர்டும் செல்வாக்கு மிக்கவர்களாக விளங்கினர்.

ரிச்சர்டு தங்கள் குடும்ப நண்பரின் மகள் ஆன் நெவில்லை மணம் புரிந்தார். சிறு வயதிலேயே நன்றாக பழகியிருந்த ஆன் முன்னதாக பிரான்சு சென்று அங்கு வேல்சு இளவரசரான ஆறாம் என்றியின் மகனை திருமணம் புரிந்திருந்தார். போரில் இளவரசர் மரணமடைந்து விதவையாகியிருந்த ஆனை ரிச்சர்டு திருமணம் புரிந்து கொண்டார். இங்கிலாந்தின் வடக்கிலிருந்த மிடில்ஹாம் கோட்டை மாளிகையில் இருவரும் வசித்து வந்தனர். இவர்களுக்குப் பிறந்த மகனுக்கு மன்னரின் பெயரான எட்வர்டையே பெயராகச் சூட்டினர். ஆனின் சகோதரி இசபெல்லை மணந்திருந்த தனது அண்ணன் ஜார்ஜுடன் ரிச்சர்டு அடிக்கடி சண்டையிடலானார். மன்னர் எட்வர்டின் கோபத்திற்கும் ஆளான ஜார்ஜ் சிறையில் அடைக்கப்பட்டு அங்கேயே மடிந்தார்.

மன்னர் எட்வர்டு மணமான மற்றும் பல உறவுகளைக் கொண்டிருந்த எலிசபெத் வுட்வெல்லை திருமணம் புரிந்திருந்தார். திருமணத்திற்கு பின்னர் எலிசபெத்தின் உறவினர்கள் மிகவும் செல்வாக்குடன் செல்வந்தர்கள் ஆனது எட்வர்டின் முந்தைய நண்பர்களுக்கு பிடிக்கவில்லை. இருவருக்கும் பல குழந்தைகள் பிறந்தன.

மன்னர் எட்வர்டு இறந்தபோது, அவரது மூத்த மகன் எட்வர்டுதான் முடி சூடி இருக்க வேண்டும். ஆனால் மிகவும் சிறுவனாக இருந்த எட்வர்டின் மூலம் தனது மனைவியின் உறவினர்கள் ஆட்சி செலுத்துவர் என்று பயந்த மன்னர் தனது எட்வர்டு மற்றும் ரிச்சர்டு என்ற இரு மகன்களையும் வளர்த்துவரும் பொறுப்பை தனது தம்பி ரிச்சர்டு வளர்த்துவர வேண்டினார். ரிச்சர்டு தனது அண்ணன் மகன் எட்வர்டையும் ரிச்சர்டையும் சிறைக்கு அனுப்பி தாமே முடிசூட்டிக் கொண்டார். சிறையில் இருவரும் மடிந்ததாக நம்பப்படுகிறது. மன்னர் ரிச்சர்டு அவர்களை கொல்ல உத்தரவிட்டதாக பலர் நம்பினாலும் உண்மையில் என்ன நடந்தது என்பதைக் குறித்த சான்றுகள் இல்லை.

ரிச்சர்டு III நல்லமுறையில் ஆண்டாரா என்பது குறித்துத் தெளிவில்லை; இரண்டாண்டுகள் நடந்த அவரது ஆட்சி காலத்தில் நாட்டின் சில பகுதிகளில், குறிப்பாக வடக்கு இங்கிலாந்தில், அவருக்கு நல்ல பெயர் இருந்தது. இருப்பினும் அவருக்கு பல எதிரிகள் ஏற்பட்டு பெரிய படையைத் திரட்டி அவரை வீழ்த்தினர். 1485ஆம் ஆண்டில் போசுவொர்த் களத்தில் நடந்த போரில் அவர் கொல்லப்பட்டார். ஒரு போர்க்களத்தில் கொல்லப்பட்ட கடைசி இங்கிலாந்து மன்னர் இவரே ஆவார். அவருக்கு எதிரானப் படைகளை வழிநடத்திய என்றி டியூடர் இங்கிலாந்தின் ஏழாம் என்றியாக முடி சூடினார்.

வெளி இணைப்புகள் தொகு

சான்றுகோள்கள் தொகு

  1. Richard was originally buried in the Church of the Greyfriars, but his body was dug up and lost during the Dissolution of the Monasteries – nobody knows what happened to it afterwards.