சோத்பூர் அல்லது ஜோத்பூர் (Jodhpur, About this soundஒலிப்பு  என்பது இந்திய மாநிலமான இராசத்தானின் இரண்டாவது பெரிய நகரமும், அதிகாரப்பூர்வமாக மாநிலத்தின் இரண்டாவது பெருநகரமும் ஆகும். இது முன்னர் ஜோத்பூர் சமஸ்தானத்தின் அமைவிடமாக இருந்தது. சோத்பூர் வரலாற்று ரீதியாக இப்போது ராஜஸ்தானின் ஒரு பகுதியாக இருக்கும் மார்வார் இராச்சியத்தின் தலைநகராக இருந்தது. சோத்பூர் ஒரு பிரபல சுற்றுலாத் தலமாகும். இங்கு பல அரண்மனைகள், கோட்டைகள், கோயில்கள், தார் பாலைவனத்தின் பரந்த நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளன. இது இராசத்தான் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள மக்கள் மத்தியில் "நீல நகரம்" என்று பிரபலமாக அறியப்படுகிறது. இது சோத்பூர் மாவட்டம் மற்றும் சோத்பூர் கோட்டத்தின் நிர்வாக தலைமையகமாகவும் இந்நகரம் செயல்படுகிறது.

சோத்பூர்
பெருநகரம்
மேலிருந்து கடிகாரச் சுற்றில்: மெஹ்ரான்கர் கோட்டை,, இராஜஸ்தான் உயர் நீதிமன்றம், காந்த கார், உமைத் பவான் அரண்மனை, மண்டோர் பூங்கா, ஜஸ்வந்த் தடா, ஜோத்பூர் தொடுவானம்
அடைபெயர்(கள்): நீல நகரம்[1]
சோத்பூர் is located in இராசத்தான்
சோத்பூர்
சோத்பூர்
சோத்பூர் is located in இந்தியா
சோத்பூர்
சோத்பூர்
ஆள்கூறுகள்: 26°17′N 73°01′E / 26.28°N 73.02°E / 26.28; 73.02
நாடு இந்தியா
மாநிலம்இராசத்தான்
கோட்டம்ஜோத்பூர்
மாவட்டம்ஜோத்பூர்[2]
Settled1459
தோற்றுவித்தவர்மான்டோரின் ஜோதா
பெயர்ச்சூட்டுமான்டோரின் ஜோதா
அரசு
 • வகைமாநகர மன்றம்
 • நிர்வாகம்சோத்மூர் மாநகர மன்றம்
 • மேயர், மாநகர மன்றம்குந்தி தியோரா பரிஹார் (ஜோத்பூர் வடக்கு)
Vanita Seth (Jodhpur South)
 • ஆட்சியர்ஹிமான்ஷு குப்தா, இஆப
 • ஜோத்பூர் காவல் ஆணையர்ஜோஸ் மோகன், இகாப[3]
பரப்பளவு[4][5]
 • பெருநகரம்233.5 km2 (90.2 sq mi)
 • Metro4,467.3 km2 (1,724.8 sq mi)
ஏற்றம்231 m (758 ft)
மக்கள்தொகை (2011 கணக்கெடுப்பு)[9]
 • பெருநகரம்1,056,191
 • தரவரிசை43வது
 • அடர்த்தி4,500/km2 (12,000/sq mi)
 • பெருநகர்[10]2,330,000[6][7][8]
இனங்கள்Jodhpuri, Marwari
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகஇந்தி, ஆங்கிலம்
 • பூர்வீக மொழிமார்வாரி, இராச்சசுத்தானி, சிந்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்342001
தொலைபேசி குறியீடு0291
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுRJ-IN
வாகனப் பதிவுRJ-19
இணையதளம்jodhpur.rajasthan.gov.in

சோத்பூரின் பழைய நகரம் மெக்ரான்கர் கோட்டையால் சூழப்பட்டதாகவும், மதிலால் சூழப்படதாகவும், பல வாயில்கள் கொண்டதாவும் உள்ளது. [11] கடந்த பல தசாப்தங்களாக, நகரம் மதில் சுவருக்கு வெளியே பெரிதும் விரிவடைந்துள்ளது. சோத்பூர் இராசத்தான் மாநிலத்தில் புவியியல் ரீதியாக மையத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இது சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் பகுதியில் பயணத்துக்கு ஏற்ற வசதியான தளமாக உள்ளது. த நியூயார்க் டைம்சின் "2020 இல் செல்ல வேண்டிய 52 இடங்கள்" இல் இந்த நகரம் இடம்பெற்றது. [12]

இந்த நகரில் பல கல்வி நிறுவனங்களின் இருப்பிடமாக உள்ளது. அதில் மிக முக்கியமானவை அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம், ஜோத்பூர், இந்திய தொழில்நுட்ப நிறுவனம் ஜோத்பூர், டாக்டர் சம்பூர்ணானந்த் மருத்துவக் கல்லூரி, டிஎஸ்ஆர்ஆர்யு ஜோத்பூர், தேசிய சட்டப் பல்கலைக்கழகம், மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களான இந்திய விண்வெளி ஆய்வு மையம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு, மத்திய வறண்ட மண்டல ஆராய்ச்சி நிறுவனம், வறண்ட வன ஆய்வு நிறுவனம், பாலைவன மருத்துவ ஆராய்ச்சி மையம் போன்றவை இந்த நகரத்தில் அமைந்துள்ளன.

வரலாறு தொகு

ஆரம்பகால வரலாறு தொகு

சோத்பூர் நகரம் 1459 இல் ராத்தோர் குலத்தின் ராஜபுத்திரத் தலைவரான மான்டோரின் ஜோதாவால் நிறுவப்பட்டது. ஜோதா மண்டோரை சுற்றியுள்ள பிரதேசங்களைக் கைப்பற்றுவதில் வெற்றி பெற்றார். இதனால் மார்வார் என்று அழைக்கப்படும் ஒரு இராசியத்தை நிறுவினார். ஜோதா அருகிலுள்ள நகரமான மாண்டோர் நகரத்தை ஆரம்பத்தில் தன் அரசின் தலைநகராகக் கொண்டிருந்தார். இருப்பினும், ஜோதாவின் வாழ்நாளிலேயே, ஜோத்பூர் விரைவில் நாட்டின் தலைநகராக ஆனது. இந்த நகரம் தில்லியை குசராத்துடன் இணைக்கும் மூலோபாய சாலையில் அமைந்துள்ளது. இது அபினி, செப்பு, பட்டு, சந்தனம், பேரீச்சை மற்றும் பிற வர்த்தகப் பொருட்களின் செழிப்பான வர்த்தகத்திலிருந்து இலாபம் ஈட்ட உதவியதாக இருந்தது. [13]

ஆரம்ப நவீன காலம் தொகு

1581 இல் ராவ் சந்திரசென் ரத்தோர் இறந்த பிறகு, முகலாய பேரரசர் அக்பரால் இந்த இராச்சியம் முகலாய பேரரசுடன் இணைக்கப்பட்டது. என்றாலும் மார்வார் உள் தன்னாட்சியை கொண்டிருந்தது. ஜோத்பூரும் அதன் மக்களும் இதன் மூலம் பயனடைந்தனர். ஏனெனில் கலை மற்றும் கட்டிடக்கலைகளில் புதிய பாணிகளில் தங்கள் தோற்றத்தை உருவாக்கிக்கொண்டனர். [13]

 
இராசத்தான் உயர்நீதிமன்றம், உமைத் பூங்காவில் உள்ள சர்தார் அருங்காட்சியகம் மற்றும் மேல் வலதுபுறத்தில் 1960 இல் ஜோத்பூர் கோட்டை உள்ளது.

மகாராஜா ஜஸ்வந்த் சிங்கின் மரணத்திற்குப் பிறகு ஔரங்கசீப் ( சுமார் 1679) கைப்பற்றிவைத்திருந்தார். ஆனால் முந்தைய ஆட்சியாளர் மகாராஜா அஜித் சிங் 1707 இல் அவுரங்கசீப் இறந்த பிறகு 30 ஆண்டுகால பெரும் போராட்டத்திற்குப் பிறகு வீர் துர்காதாஸ் ரத்தோரால் மீண்டும் அரியணையில் அமர்த்தப்பட்டார். 1707க்குப் பிறகு முகலாயப் பேரரசு படிப்படியாக வீழ்ச்சியடைந்தது, ஆனால் சோத்பூர் அரசவை சூழ்ச்சியால் சூழப்பட்டது; உள்நாட்டுக் குழப்பங்கள் அதிகரித்தன. பல ஆண்டுகால போர்கள் மற்றும் ஒப்பந்தங்கள் அரசின் செல்வத்தை சிதறடித்தன. இறுதியில் சோத்பூர் ஆங்கிலேயர்களின் உதவியை நாடியது மற்றும் அவர்களின் துணைப்படை திட்டத்தில் சேர்ந்தது. 1857 ஆம் ஆண்டில் ஔவாவின் தாக்கூர் குஷால் சிங் தலைமையில் பாலியின் சில ரத்தோர் பிரபுக்களால் ஒரு பெரிய கிளர்ச்சி ஏற்பட்டது. ஆனால் கிளர்ச்சியாளர்கள் கர்னல் ஓம்சின் தலைமையிலான பிரித்தானிய இராணுவத்தால் தோற்கடிக்கப்பட்டனர். அதன்பிறகு அமைதி மீட்டெடுக்கப்பட்டது. [13] [14]

பிரித்தானிய காலனித்துவ காலம் தொகு

 
1906 இல் ஜோத்பூரின் தெருக் காட்சி

பிரித்தானிய இந்தியாவில், ஜோத்பூர் சமஸ்தானம் இராஜபுதானத்தில் மிகப்பெரிய நிலப்பரப்பைக் கொண்டிருந்தது. சமஸ்தானத்தின் நிலப்பரப்பு 93,424 km2 (36,071 sq mi) ஆகும். 1901 இல் அதன் மக்கள் தொகை 44,73,759. இது £ 3,529,000 என மதிப்பிடப்பட்ட வருவாயை கொண்டிருந்தது. அதன் வணிகர்களான, மார்வாடிகள், செழித்து, இந்தியா முழுவதும் வர்த்தகத்தில் ஆதிக்க நிலையை அடைந்து வந்தனர்.

விடுதலைக்குப் பிறகு தொகு

1947 இல், இந்தியா விடுதலை அடைந்தபோது, சமஸ்தானம் இந்திய ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது. மேலும் சோத்பூர் இராசத்தானின் இரண்டாவது பெரிய நகரமாக மாறியது. [13] [15] பிரிவினையின் போது, சோத்பூரின் ஆட்சியாளர் அன்வந்த் சிங், இந்தியாவுடன் சேர விரும்பவில்லை, ஆனால் இறுதியாக, அந்த நேரத்தில் வல்லபாய் படேலின் வற்புறுத்தலால், சோத்பூர் இராச்சியம் இந்தியக் குடியரசில் இணைக்கபட்டது. பின்னர் மாநில மறுசீரமைப்பு சட்டம், 1956 க்குப் பிறகு, அது இராசத்தான் மாநிலத்திற்குள் சேர்க்கப்பட்டது. [13]

மக்கள்தொகையியல் தொகு

மக்கள்தொகை வளர்ச்சி
ஆண்டும.தொ.±%
18651,50,000—    
18811,42,600−4.9%
189161,800−56.7%
190160,400−2.3%
191159,300−1.8%
192173,500+23.9%
193194,700+28.8%
19411,26,900+34.0%
19511,80,700+42.4%
19612,24,800+24.4%
19682,70,400+20.3%
19713,18,900+17.9%
19815,06,345+58.8%
19916,66,279+31.6%
20018,60,818+29.2%
201111,38,300+32.2%
202123,30,000+104.7%
ஆதாரம்: [16][17]

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் தற்காலிக அறிக்கைகளின்படி, [10] சோத்பூர் 2011 இல் 1,033,918 மக்கள் தொகை கொண்டிருந்தது. இதில் தோராயமாக 52.62 விழுக்காடு ஆண்களும், தோராயமாக 47.38 விழுக்காடு பெண்களும் உள்ளனர். சராசரி கல்வியறிவு விகிதம் 80.56 விழுக்காடு. இதில் ஆண்களின் கல்வியறிவு விகிதம் தோராயமாக 88.42 விழுக்காடு என்றும், பெண்களின் கல்வியறிவு 73.93 விழுக்காடு என்றும் உள்ளது. மக்கள் தொகையில் ஏறத்தாழ 12.24 விழுக்காட்டினர் ஆறு வயதுக்குட்பட்டவர்கள். ஜோத்பூர் நகரமானது ஜோத்பூர் புறநகர்களைக் கொண்ட மாநகராட்சியால் நிர்வகிக்கப்படுகிறது. ஜோத்பூர் நகர்ப்புற/பெருநகரப் பகுதியில் ஜோத்பூர், குரி பக்தசானி, மண்டோர் தொழில்துறை பகுதி, நந்த்ரி, பால் கிராமம், சங்கரியா ஆகியவை அடங்கும் . அதன் நகர்ப்புற/பெருநகர மக்கள் தொகை 1,137,815 ஆகும், இதில் 599,332 ஆண்கள் மற்றும் 538,483 பெண்கள் வசிக்கின்றனர். 2021 பெப்ரவரியில் ஜோத்பூரை ஒட்டிய 395 கிராமங்களை மாநகராட்சியின் எல்லைக்குள் சேர்த்ததன் மூலம், மாநகரத்தின் புதிய மக்கள்தொகை எண்ணிக்கை 2,330,000 ஆனது. மேலும் அடுத்த பத்தாண்டுகளில் மக்கள் தொகை 33.04% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2031 ஆம் ஆண்டில் ஜோத்பூர் நகரத்தின் மக்கள் தொகை 3.1 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. [16] [18]

ஜோத்பூரில் சமயங்கள் (2011)[10]
இந்து சமயம்
76.98%
இசுலாம்
19.30%
சைனம்
2.70%
பிறர்
1.0%
0.42% கிறிஸ்தவர் மற்றும் 0.33% சீக்கியர் சேர்த்து

புவியியல் மற்றும் காலநிலை தொகு

 
வெயில் சுட்டெரிக்கும் நாளில் ஜோத்பூரின் பரந்த காட்சி.

ஜோத்பூர் வெப்பமான வறண்ட காலநிலையைக் கொண்டுள்ளது ( கோப்பென் ), வெப்பமான அரை வறண்ட காலநிலைக்கு ( கோப்பேன் ) மிகக் குறைவான ஆவியாதல் காரணமாக உள்ளது. சராசரி மழையளவு சுமார் 362 மிமீ (14.3 அங்குலம்) என்றாலும், பெரும்பாலும் சூன் முதல் செப்டம்பர் வரை பொழியும், இது மிகவும் ஏற்ற இறக்கமாக இருக்கும். 1899 ஆம் ஆண்டு பஞ்சத்தில் ஜோத்பூர் 24 மிமீ (0.94 அங்குலம்) மட்டுமே மழை பெற்றது. ஆனால் 1917 ஆம் ஆண்டின் வெள்ளத்தில், அது 1,178 மிமீ (46.4 அங்குலம்) வரை மழை பெற்றது. லுனி ஆற்றின் துணை ஆறான ஜோஜாரி ஆறு, ஜோத்பூர் நகரப் பகுதியில் பனாட்டில் இருந்து சலாவாஸ் வரை பாய்கிறது. 2021 சனவரி முதல் ஜல் சக்தி அமைச்சகத்தின் நம்மி கங்கா திட்டத்தின் கீழ் ஜோத்பூர் நகர்ப்புறத்திற்குள் ஆறு பாயும் 35 கிமீ நீளத்திற்கு நதிக்கரை திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு திட்டமிடப்பட்டு வருகிறது, முன்னதாக இந்தத் திட்டம் ஜோத்பூர் மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இருந்தது. ஜோத்பூரின் அஞ்சல் குறியீடு 342001 ஆகும், இது ஜோத்பூர் அஞ்சல் கோட்டத்தின் (ஜோத்பூர் மண்டலம்) கீழ் வருகிறது. [19]

மார்ச் முதல் அக்டோபர் வரை வெப்பநிலை அதிகமாக இருக்கும், பருவமழைக்காக அடர்ந்த மேகங்கள் உருவாக்கும் போது தவிர வெபநிலை கூடுதலாகவே இருக்கும். ஏப்ரல், மே, சூன் மாதங்களில், அதிக வெப்பநிலை வழக்கமாக 40 °C. ஐ விட அதிகமாக இருக்கும் மழைக்காலத்தில், சராசரி வெப்பநிலை சிறிதளவு குறைகிறது. ஜோத்பூரில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை 25 மே 1932 அன்று 48.9 °C ஆக இருந்தது.

தட்பவெப்ப நிலைத் தகவல், ஜோத்பூர் (1971–2000, extremes 1968–1996)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 31.2
(88.2)
36.0
(96.8)
41.6
(106.9)
45.0
(113)
48.9
(120)
47.8
(118)
42.6
(108.7)
40.3
(104.5)
42.5
(108.5)
40.6
(105.1)
37.5
(99.5)
32.3
(90.1)
48.9
(120)
உயர் சராசரி °C (°F) 24.5
(76.1)
27.4
(81.3)
33.4
(92.1)
38.4
(101.1)
41.2
(106.2)
40.0
(104)
35.2
(95.4)
33.5
(92.3)
34.9
(94.8)
35.8
(96.4)
31.2
(88.2)
26.9
(80.4)
33.5
(92.3)
தாழ் சராசரி °C (°F) 9.6
(49.3)
11.7
(53.1)
17.3
(63.1)
22.6
(72.7)
26.5
(79.7)
27.8
(82)
26.4
(79.5)
25.4
(77.7)
23.9
(75)
20.1
(68.2)
14.7
(58.5)
11.2
(52.2)
19.8
(67.6)
பதியப்பட்ட தாழ் °C (°F) 1.8
(35.2)
0.7
(33.3)
4.4
(39.9)
15.6
(60.1)
15.4
(59.7)
20.0
(68)
21.0
(69.8)
21.2
(70.2)
18.4
(65.1)
12.5
(54.5)
5.8
(42.4)
1.7
(35.1)
0.7
(33.3)
மழைப்பொழிவுmm (inches) 4.0
(0.157)
4.0
(0.157)
1.3
(0.051)
4.8
(0.189)
17.4
(0.685)
40.0
(1.575)
120.5
(4.744)
111.8
(4.402)
49.9
(1.965)
6.9
(0.272)
1.9
(0.075)
0.5
(0.02)
362.9
(14.287)
ஈரப்பதம் 27 24 22 19 20 33 52 58 45 29 32 33 32
சராசரி மழை நாட்கள் 0.3 0.6 0.3 0.6 1.2 2.1 6.5 5.9 2.6 0.6 0.2 0.0 21.0
சூரியஒளி நேரம் 303.8 291.0 288.3 279.0 285.2 132.0 96.1 120.9 180.0 232.5 270.0 294.5 2,773.3
Source #1:
Source #2: Weather Atlas[25]

குறிப்புகள் தொகு

 1. "These Spectacular Shots of India's 'Blue City' Will Ignite Your Wanderlust". 27 April 2016. https://www.huffpost.com/entry/discover-the-blue-city-of-jodhpur-india_b_9780974. 
 2. "Jodhpur.nic.in" இம் மூலத்தில் இருந்து 19 February 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120219060828/http://jodhpur.nic.in/dp1.htm. 
 3. "जोधपुर में नए पुलिस कमिश्नर जोस मोहन ने संभाला पद, पहले ही दिन दी यह नसीहत" (in hi). Zee News. 8 July 2020. https://zeenews.india.com/hindi/india/rajasthan/new-police-commissioner-jose-mohan-takes-over-post-in-jodhpur/707936. 
 4. "Jodhpur District Census 2011 Handbook: VILLAGE AND TOWN WISE PRIMARY CENSUS ABSTRACT (PCA)". Censusofindia.gov.in. p. 33. http://www.censusindia.gov.in/2011census/dchb/0815_PART_B_DCHB_JODHPUR.pdf. 
 5. "Statical Information". Jodhpur Municipal Corporation இம் மூலத்தில் இருந்து 2019-10-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191011045803/http://jodhpurmc.org/Presentation/TopMenu/Statistical_Information.aspx. 
 6. "Execution of Jodhpur Master Plan 2021" (in hi). 18 February 2021. https://jda.urban.rajasthan.gov.in/content/raj/udh/jda--jodhpur/en/master-plan/master-plan-2031.html. 
 7. "जोधपुर के विकास का रास्ता साफ, Jda की तीसरे मास्टर प्लान को मंजूरी, बढ़ेगी शहर की सीमा, बनेंगी 4 स्पेशल सिटी". 18 February 2021. https://hindi.news18.com/news/rajasthan/jodhpur-paving-the-way-for-development-jda-approves-third-master-plan-rjsr-3472550.html. 
 8. https://jda.urban.rajasthan.gov.in/content/dam/raj/udh/development-authority/jda-jodhpur/pdf/Jodhpur%20MDP%20Report%202031.pdf[bare URL PDF]
 9. ORGI. "Census of India : Provisional Population Totals Paper 1 of 2011 : Rajasthan". http://www.censusindia.gov.in/2011-prov-results/prov_data_products__rajasthan.html. 
 10. 10.0 10.1 10.2 "Jodhpur City Population Census 2011 - Rajasthan". http://www.census2011.co.in/census/city/80-jodhpur.html. 
 11. Gopal, Madan (1990). K.S. Gautam. ed. India through the ages. Publication Division, Ministry of Information and Broadcasting, Government of India. பக். 178. https://archive.org/details/indiathroughages00mada. 
 12. "52 Places to go in 2020". https://www.nytimes.com/interactive/2020/travel/places-to-visit.html. 
 13. 13.0 13.1 13.2 13.3 13.4 Dhananajaya Singh (1994). The House of Marwar: The Story of Jodhpur. Lotus Collection. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788174360021. https://books.google.com/books?id=SktuAAAAMAAJ. 
 14. Political Awakening and Indian Freedom Movement with Special Reference to Rajasthan pg 28-35
 15. The Rajputs of Rajputana: A Glimpse of Medieval Rajasthan. https://books.google.com/books?id=lF0FvjG3GWEC. 
 16. 16.0 16.1 . https://urban.rajasthan.gov.in/content/raj/udh/jda--jodhpur/en/master-plan/master-plan-2031.html. 
 17. "INDIA : urban population" இம் மூலத்தில் இருந்து 2013-02-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130217053707/http://www.populstat.info/Asia/indiat.htm. 
 18. . https://jda.urban.rajasthan.gov.in/content/dam/raj/udh/development-authority/jda-jodhpur/pdf/Jodhpur%20MDP%20Report%202031.pdf. 
 19. "Pin Code Jodhpur City, Rajasthan Government". https://webconte.com/pin_code/place/jodhpur_city/4319. 
 20. "Station: Jodhpur RS/RW Climatological Table 1971–2000". Climatological Normals 1971–2000 (India Meteorological Department): pp. 365–366. October 2011 இம் மூலத்தில் இருந்து 15 February 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200215220604/http://imdpune.gov.in/library/public/Climatological%20Normals%20%281971-2000%29.pdf. 
 21. "Extremes of Temperature & Rainfall for Indian Stations (Up to 2012)". India Meteorological Department. December 2016. p. M183 இம் மூலத்தில் இருந்து 5 February 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200205042509/http://imdpune.gov.in/library/public/EXTREMES%20OF%20TEMPERATURE%20and%20RAINFALL%20upto%202012.pdf. 
 22. "Highest Maximum Temperature (°C) Ever Recorded". India Meteorological Department. http://amssdelhi.gov.in/MET_CENTRES/JAIPUR30/MAXTEMP.pdf. 
 23. "Table 3 Monthly mean duration of Sun Shine (hours) at different locations in India". Daily Normals of Global & Diffuse Radiation (1971–2000) (India Meteorological Department): p. M-3. December 2016 இம் மூலத்தில் இருந்து 5 February 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200205042602/http://imdpune.gov.in/library/public/Daily%20Normals%20of%20Global%20%26%20Diffused%20Radiations%20%201971_2000.pdf. 
 24. "Climate & Weather Averages in Jodhpur, Rajasthan, India". Time and Date. https://www.timeanddate.com/weather/india/jodhpur/climate. 
 25. "Climate and monthly weather forecast Jodhpur, India". Weather Atlas. https://www.weather-atlas.com/en/india/jodhpur-climate. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோத்பூர்&oldid=3620335" இருந்து மீள்விக்கப்பட்டது