ஜோத்பூர் சமஸ்தானம்

ஜோத்பூர் சமஸ்தானம் அல்லது மார்வார் இராச்சியம் (Jodhpur State), தற்கால இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் மேற்கில் அமைந்த மார்வார் பிரதேசத்தின் நிலப்பரப்புகளைக் கொண்டது. இதன் தலைநகரம் ஜோத்பூர் நகரம் ஆகும். மார்வார் எனும் ஜோத்பூர் இராச்சியத்தை 1226-இல் நிறுவியவர். இராவ் சிகா ஆவார்.

ஜோத்பூர் சமஸ்தானம் (1818–1947)
மார்வார் இராச்சியம் (1226–1581; 1583–1818)
1226–1581 பொ.ச
1583–1947 பொ.ச
கொடி of Jodhpur
கொடி
சின்னம் of Jodhpur
சின்னம்
இந்தியாவின் தி இம்பீரியல் கெசட்டியரில் ஜோத்பூர் சமஸ்தானம்
இந்தியாவின் தி இம்பீரியல் கெசட்டியரில் ஜோத்பூர் சமஸ்தானம்
நிலை
தலைநகரம்சோத்பூர்
பேசப்படும் மொழிகள்மார்வாரி
இந்தி
சமயம்
இந்து சமயம்
மகாராஜா 
• 1226–1273 பொ.ச.
இராவ் சிகா (முதல்)
• 1947–1949 பொ.ச.
ஹன்வந்த் சிங்
வரலாறு 
• தொடக்கம்
1226–1581 பொ.ச
1583–1947 பொ.ச
முந்தையது
பின்னையது
[[கூர்ஜர-பிரதிகாரப் பேரரசு]]
India
தற்போதைய பகுதிகள்ராஜஸ்தான், இந்தியா
உமைத் பவன் அரண்மனை

ஜோத்பூர் சமஸ்தானம் கிபி 1226 முதல் 1818 வரை சுதந்திர முடியாட்சியுடனும்; 818 முதல் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டு வந்த இந்தியத் துணைப்படைத் திட்டத்தின் படி பிரித்தானியர்களுக்கு அடங்கி, கப்பம் செலுத்தும் சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். பிரித்தானிய இந்தியாவின் அரசு,, ஜோத்பூர் மன்னருக்கு 17 குண்டுகள் முழங்கி மரியாதை செய்தனர்

15 ஆகஸ்டு 1947 அன்று இந்திய விடுதலைக்குப் பின்னர் சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி 6 ஏப்ரல் 1949 இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. 1931-ஆம் மக்கள் தொகை கணக்கெடுப்பின் ப்டி, ஜோத்பூர் இராச்சியத்தின் பரப்பளவு 93,424 சதுர மைல் மற்றும் மக்கள் தொகை 21,25,000 ஆகும்.

மார்வார் ஆட்சியாளர்கள்

தொகு

இராஷ்டிரகூடர் வழித்தோன்றல்களன ரத்தோர் வம்ச இராஜபுத்திரர்கள் ஜோத்பூர் சமஸ்தானத்தை ஆண்டனர்.[1] இராஷ்டிரகூடர் வீழ்ச்சிக்குப் பின் அதன் அரச குடும்பத்தினர் வடக்கில் புலம் பெயர்ந்து கன்னோசியில் ஆட்சி அமைத்தனர். கன்னோசியின் இறுதி மன்னர் ஜெயச்சந்திரனின் மரணத்திற்குப் பின், அவரது வழித்தோன்றல்கள் இராஜஸ்தானின் மார்வார் பிரதேசத்தில் ரத்தோர் வம்சத்தினராக ஜோத்பூரில் இராச்சியம் அமைத்தனர்.[2][1]

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 India: The Peacock's Call by Aline Dobbie p.41
  2. Niyogi, Roma (1959). The History of the Gāhaḍavāla Dynasty.pg -30 Oriental. OCLC 5386449
  • Jodhpur, Published by [s.l.], 1933.
  • Maharaja Man Singh of Jodhpur and His Times (1803–1843 A.D.), by Padmaja Sharma. Published by Shiva Lal Agarwala, 1972.
  • The Administration of Jodhpur State, 1800–1947 A.D., by Nirmala M. Upadhyaya. International Publishers, 1973.
  • Marwar under Jaswant Singh, (1658–1678): Jodhpur hukumat ri bahi, by Satish Chandra, Raghubir Sinh, Ghanshyam Datt Sharma. Published by Meenakshi Prakashan, 1976.
  • Jodhpur, Bikaner, Jaisalmer: Desert Kingdoms, by Kishore Singh, Karoki Lewis. Lustre Press Ltd. 1992.
  • The House of Marwar: The Story of Jodhpur, by Dhananajaya Singh. Lotus Collection, Roli Books, 1994. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7436-002-6.
  • Modern Indian Kingship: Tradition, Legitimacy & Power in Jodhpur, by Marzia Balzani. Published by James Currey Limited, 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85255-931-3.
  • Jodhpur and the Later Mughals, AD 1707–1752, by R. S. Sangwan. Published by Pragati Publications, 2006.
  • Jodhpur's Umaid Bhawan: The Maharaja of Palaces, by Aman Nath. Published by India Book House, 2008.

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோத்பூர்_சமஸ்தானம்&oldid=3392265" இலிருந்து மீள்விக்கப்பட்டது