திவான் (பிரதம அமைச்சர்)
(திவான் (அமைச்சர்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
திவான் (dewan) என்பது இசுலாமிய அரசப் பதவிகளில் ஒன்றாகும். பொதுவாக திவான் பதவி அதிகாரமிக்க அரச உயர் அதிகாரி, அமைச்சர் அல்லது ஆட்சியாளரைக் குறிக்கும் சொல்லாகும். பின்னர் இந்தியத் துணைக்கண்டத்தின், சுதேச சமஸ்தானங்களின் அன்றாட நிர்வாகத்தை கவனித்துக் கொள்ளும் அமைச்சரைத் திவான் எனும் பெயரில் அழைத்தனர். ஒரு சில சமஸ்தான அதிபர்கள் தங்களை திவான் என்றே அழைத்துக் கொண்டனர்.
திவான் எனும், பாரசீக மொழிச் சொல்லை அரேபிய ஆட்சியாளர்களும் கையாண்டனர்.[1]
இந்தியாவில்
தொகுதிவான் பட்டம்
தொகு- மொகலாயப் பேரரசின் மாகாணங்களில் நிலவரி வசூலிக்கும் உயர் அதிகாரிகளை திவான் என்று அழைத்தனர்.
- பிரித்தானிய இந்தியாவில் மேட்டுக்குடி நிலக்கிழார்களுக்கு திவான் பகதூர் அல்லது திவான் சாகிப் போன்ற பட்டங்களை பிரித்தானிய இந்தியா அரசு வழங்கி கௌரவித்தது.
- கான் பகதூர் கலிபுல்லா ராவுத்தர் சாகிப் என்பவர் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் திவானாக இருந்தார்
- பஞ்சாப் பகுதிகளில் உயர்சாதி இந்து மற்றும் சீக்கியர்களில் சிலர் திவான் அல்லது திவான் சாகிப் எனும் குடும்பப் பெயர் கொண்டுள்ளனர்.
திவானி (நிலவரி வசூலிக்கும் உரிமை)
தொகு1757-இல் பிளாசி சண்டையில் கிழக்கிந்திய கம்பெனிப் படைகளிடம் தோல்வி அடைந்த வங்காள நவாப் சிராச் உத் தவ்லா, 1765-ஆம் ஆண்டு முதல் வங்காளம் மற்றும் பிகார் பகுதிகளில் திவானி எனும் நிலவரி வசூலிக்கும் உரிமையை கிழக்கிந்தியக் கம்பெனிக்கு வழங்கினார்.[2][3].
இதனையும் காண்க
தொகு- திவான் பகதூர் (கௌரவப் பட்டம்)
- திவான் பகதூர் (திரைப்படம்)
- திவான் (திரைப்படம்)
- சுதேச சமஸ்தானம்
ஆதாரங்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ http://www.etymonline.com/index.php?term=divan
- ↑ Robb 2004, ப. 116–147 "Chapter 5: Early Modern India II: Company Raj", Metcalf & Metcalf 2006, ப. 56–91 "Chapter 3: The East India Company Raj, 1772-1850," Bose & Jalal 2003, ப. 76–87 "Chapter 7: Company Raj and Indian Society 1757 to 1857, Reinvention and Reform of Tradition."
- ↑ Definition per James Mill (1826): "Dewan, Duan: place of assembly. Native minister of the revenue department; and chief justice, in civil causes, within his jurisdiction; receiver-general of a province. The term is also used, to designate the principal revenue servant under an European collector, and even of a Zemindar. By this title, the East India Company are receivers-general of the revenues of Bengal, under a grant from the Great Mogul"..."Dewanny, Duannee: the office, or jurisdiction of a Dewan" (Mill, James, The History of British India, Vol. 1 (of 6), 3rd Edition, London, 1826, Glossary [1])