பி. கலிஃபுல்லா

கான் பகதூர் பி. கலிஃபுல்லா சாகிப் பகதூர், சென்னை மாகாணத்தைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி; முசுலிம் லீக் கட்சியைச் சேர்ந்தவர். 1937ல் ஏற்பட்ட கூர்ம வெங்கட ரெட்டி நாயுடுவின் இடைக்கால அரசில் பொதுப்பணித்துறை அமைச்சராகப் பணியாற்றினார். இவர் ஒரு இராவுத்தர். வழக்கறிஞராகப் பணியாற்றிய கலிஃபுல்லா 1930களில் சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். 1937 தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற கீழவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பெரியார் ஈ. வெ. ராமசாமியின் நண்பரான இவர் 1937-40ல் நடைபெற்றஇந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவளித்தார்.[1][2][3][4]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._கலிஃபுல்லா&oldid=2782224" இருந்து மீள்விக்கப்பட்டது