இராவுத்தர்
இராவுத்தர் அல்லது இராவுத்தம்மார்[1] (Rowther or Raguttar or Ravuthamar) என்பவர்கள் தமிழ்நாட்டில் வாழக்கூடிய முஸ்லிம் மக்களில் ஒரு பிரிவினர் ஆவர். முஸ்லிம் பிரிவை சேர்ந்த இவர்கள், ஹனபி வழிமுறையை பின்பற்றுகின்றனர். மேலும் இவர்கள் தென் இந்தியா மற்றும் தென் கிழக்கு ஆசிய முழுவதும் பரவியுள்ளனர்.
![]() | |
மொத்த மக்கள்தொகை | |
---|---|
தமிழ்நாடு, கேரளம் சிங்கப்பூர், மலேசியா, மத்திய கிழக்கு நாடுகள், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா | |
மொழி(கள்) | |
தமிழ் | |
சமயங்கள் | |
சன்னி இஸ்லாம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
தமிழர் |
பெயர் காரணம்
இராவுத்தர் என்பதற்கு குதிரை வீரன் என்று பொருள்.[2] குதிரை வணிகம் செய்ய வந்த வீரர்கள் 'இராவுத்தர்' என்று அழைக்கப்பட்டனர்[3]. மரைக்காயர் (மரக்கலம்+ஆயர்) என்றால் கப்பல் மூலம் வணிகம் செய்து வந்தவர்கள் என்று சொல்கிறார்கள். அரபி மொழியில் 'இராபித்து' என்றால் 'எதிரியை எதிர்க்க சித்தமாக இருப்பவன்' அதாவது போருக்கு சித்தமாக இருப்பவர் என்று பொருள்[4].
வரலாறு
கி.பி பத்தாம் நூற்றாண்டில் சோழ மன்னர்களின் உதவியுடன் செல்யூக் பேரரசை சேர்ந்த துருக்கிய குதிரை வியாபாரிகள் கூட்டம் ஒன்று தமிழ்நாட்டுக்கு வந்து சேர்ந்தது. அவர்களுடன் வந்த இஸ்லாமிய போதனை குழுக்கள் தமிழ்நாட்டின் சோழ நாடு பாண்டிய நாடு பகுதிகளில் அதிகமாக நாகப்பட்டினம், கூத்தாநல்லூர், இளையான்குடி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், தரங்கம்பாடி, பேட்டை, உத்தமபாளையம் மற்றும் பொதக்குடி ஆகிய ஊர்களில் தங்கி இஸ்லாம் மதத்தை பரப்பினர். பின்னர் மதுரை தஞ்சாவூர் வந்த இவர்கள் இஸ்லாமிய பிரச்சாரம் செய்யும் பொருட்டு அங்கேயே தங்கிவிட்டனர். இவர்களின் வம்சாவளிகளின் வழித்தோன்றல்களே இராவுத்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர் இன்று தமிழகம் முழுவதும் பரவி உள்ளனர் அனைத்து மாவட்டங்களிலும் இருக்கின்றனர் குறிப்பாக தென் தமிழகத்தில் கணிசமாக இருக்கின்றனர். மற்றும் தமிழகத்திலிருந்து தென்கேரள பகுதிகளுக்கு வணிகம் செய்ய சென்ற ராவுத்தர் அங்கேயே தங்கினர் இன்று அவர்கள் அங்கு முப்பது லட்சம் மக்கள் தொகை இருக்கின்றனர் அவர்கள் அதிகமாக கொல்லம், பாலக்காடு, திருவந்தபுரம், ஆலப்புழா, திருச்சூர், கோட்டயம் பத்தனம்திட்டா, இடுக்கி மற்றும் வயநாடு மாவட்டங்களில் அதிகம் இருக்கின்றனர்
மக்கள் தொகை
தமிழ்நாட்டில் மிகப்பெரிய இசுலாமிய சமூகம் இராவுத்தர்கள். இவர்கள் தமிழ்நாடு முழுவதும் மற்றும் மத்திய மற்றும் தெற்கு கேரளாவில் காணப்படுகின்றனர். இவர்களின் தாய்மொழி தமிழ் ஆகும்.[5] இவர்களில் பலர் பாரசீக-அரபு எழுத்துக்களை நன்கு அறிந்தவர்கள். இவர்கள் இஸ்லாத்தின் கொள்கைகளைப் பின்பற்றுகிறார்கள், அரபு மொழியில் குர்ஆன் மற்றும் பிற மத நூல்களைப் படிப்பதில் ஈடுபடுகிறார்கள். அதே நேரத்தில், அவர்களின் இஸ்லாமிய நம்பிக்கைக்கு அவர்கள் அர்ப்பணிப்புடன் இருந்தபோதிலும், அவர்கள் அனைத்து தமிழர்களுடனும் தங்கள் வளமான தமிழ் மொழி மற்றும் துடிப்பான கலாச்சார பாரம்பரியத்தில் ஒரு பொதுவான பெருமையைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.[6]
இராஜ்ஜியம் மற்றும் இராணுவம்
இராவுத்தர்கள் போர் மரபைக் கொண்டவர்கள். இவர்கள் பெரும்பாலும் தென் இந்தியா மற்றும் தமிழ் இராஜ்ஜியங்களில் குதிரைப்படை தளபதிகள், குதிரை வீரர்கள் , தன்னகத்தே சிலர் பெரும் குதிரை படைகளையும் வைத்திருந்தனர். 15ஆம் நூற்றாண்டில் பர்வத இராவுத்தர் என்னும் அரசர் கொங்கு நாட்டில் சிற்றசராக செய்தார். நாயக்கர்கள் ஆட்சிக்காலத்தில் மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் தமிழை தாய் மொழியாகக் கொண்ட இராவுத்தர்கள் சிற்றரசர்களாக இருந்துள்ளனர்[7]. 1730 ஆம் ஆண்டுகளில் சேதுபதி மன்னரின் குமார முத்து விஜய ரகுநாத சேதுபதி மகன் கடம்ப தேவரின் சிறந்த காவல் தலைமை தளபதியாக இருந்தவர் ராவுத்தன் சேர்வைகாரர் என்பவர் ஆவர்.[8]
தற்போது
தென்னிந்தியாவின் மிக முக்கியமான இசுலாமிய குழுக்களில் ஒன்று இராவுத்தர், நீதித்துறை முதல் பொழுதுபோக்கு வரை பல்வேறு துறைகளில் தங்கள் முத்திரையைப் பதித்து வருகின்றனர்.
இச்சமூகம் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. உலகமயமாக்கல் மற்றும் 1991 பொருளாதார சீர்திருத்தங்கள் காரணமாக, பல சமூக மற்றும் கலாச்சார மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதன் விளைவாக, பெண்கள் பணிக்குழுவில் அதிக சுறுசுறுப்பான பங்கேற்பாளர்களாகவும், உயர்கல்வி மற்றும் கல்வித்துறையில் அவர்களின் பங்கேற்பு அதிகரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.[9] பெண்கள் கல்வியை எளிதாகத் தேடவும் அணுகவும் உதவும் வகையில், ஏராளமான இசுலாமிய சிறுபான்மை நிறுவனங்கள், மானியங்கள் மற்றும் உதவித்தொகைகளை வழங்குகின்றனர். இதனால், இன்று பெண்கள் மதக் கல்வியில் சிறந்து விளங்க ஊக்குவிக்கப்படுவதுடன், மதச்சார்பற்ற கல்வியிலும் சிறந்து விளங்கவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
மத வளங்களை எளிதாகவும் சிறப்பாகவும் அணுகுவதற்கும், அதிக மத விழிப்புணர்வுக்கும், சமூகம் படிப்படியாக பெண்களை மசூதிகளில் பிரார்த்தனை செய்ய அனுமதிக்கத் தொடங்கியுள்ளது, குறிப்பாக பள்ளிவாசல் மற்றும் பெருநாள் தொழுகை செயலில் பங்கேற்பாளர்களாக மாற்றியுள்ளது. வரலாற்று ரீதியாக, இந்திய துணைக் கண்டத்தில், சமூக மற்றும் கலாச்சார காரணங்களால், எந்தவொரு மதக் கட்டளையையும் விட, பெண்கள் மசூதிகளில் கலந்து கொள்ளவும், பிரார்த்தனை செய்யவும், பங்கேற்கவும் ஊக்கமளிக்கப்படவில்லை.[10][11][12]
மேலும் சில தகவல்கள்
- இராவுத்தர்கள் தமிழ் மொழியை மட்டுமே பேசுகின்றனர், உருது பேசுவதில்லை.
- இவர்களின் பெரும்பாலான பழக்கவழக்கங்கள், குறிப்பாக திருமணம் மற்றும் சுபவிழாக்கள் இந்து மதத்தினரின் சாயலை பெரும்பாலும் கொண்டுள்ளது.
- தற்போதும் இவர்கள் பெரும்பாலும் வணிகங்களிலேயே ஈடுபடுகின்றனர்.
- இவர்கள் பேசும் தமிழில் ஓரிரு வார்த்தைகள் சிறிது வேறுபட்டுள்ளன. எடுத்துக்காட்டாக:- அப்பா - அத்தா, குழம்பு - ஆணம்.
- இவர்கள் மற்ற தமிழ் முஸ்லிம் பிரிவுகளை போல் அல்லாமல் பெரும்பாலும் வெளிர் நிறத்திலேயே உள்ளனர்.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- ↑ தமிழ் அச்சுத்தந்தை அண்ட்ரிக் அடிகளார் Volume 453 of International Institute of Tamil Studies Publications Issue 453 of Publication (International Institute of Tamil Studies) Author ஆ சிவசுப்பிரமணியன் pg.no.81
- ↑ கி. வா. ஜகந்நாதன் (2003). கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள், பாகம் 3. அல்லயன்ஸ். p. 94. Retrieved 2020-08-15.
- ↑ சுகுமாரன் கே.(2014).பொது அறிவுக்களஞ்சியம், சென்னை: நர்மதா பதிப்பகம். ப.162
- ↑ "பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/54 - விக்கிமூலம்". ta.m.wikisource.org. Retrieved 2021-01-13.
- ↑ SUDHEER, NISHADA (12 September 2021). "The History of Ravuthers in Irinjalakuda: Life, Culture and History of Ravuthharangadi" (PDF).
- ↑ Singh, Ashok Pratap; Kumari, Patiraj (2007). Psychological implications in industrial performance (1st ed.). New Delhi, India: Global Vision Pub. House. p. 707. ISBN 978-81-8220-200-9. கணினி நூலகம் 295034951.
- ↑ Kan̲n̲ivāṭi Naraciṅkappa Nāyakkan̲ vaḷamaṭal Issue 228 of Publication (International Institute of Tamil Studies) Contributors Ka Kiruṭṭiṇa Mūrtti, International Institute of Tamil Studies
- ↑ THE HEIRS OF VIJAYANAGARA Court Politics in Early-Modern South India LENNART BES Radboud University Nijmegen 2018
- ↑ "More Muslim Women Enrolled in Higher Edu Institutes Than Muslim Men: AISHE Report". The Wire (in ஆங்கிலம்). Retrieved 2024-07-11.
- ↑ Staff Reporter (2019-01-08). "'No ban on women entering Vavar mosque'" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/kerala/no-ban-on-women-entering-vavar-mosque/article25941783.ece.
- ↑ "Juma Masjid to be opened for women" (in en-IN). The Hindu. 2016-04-19. https://www.thehindu.com/news/national/kerala/juma-masjid-to-be-opened-for-women/article8496761.ece.
- ↑ Aafaq, Zafar (2022-12-16). "For Muslim women in India, mosques remain largely out of bound – even without entry bans". Scroll.in (in ஆங்கிலம்). Retrieved 2024-07-11.