தோப்புத்துறை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தோப்புத்துறை (ஆங்கிலம்: Thopputhurai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யம் வட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும்.
தோப்புத்துறை | |
— நகரம் — | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ் நாடு |
மாவட்டம் | நாகப்பட்டினம் |
ஆளுநர் | ஆர். என். ரவி |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின் |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
இணையதளம் | www.Thopputhurai.com/ |
தமிழக கிழக்கு கடற்கரையோரத்தில் இருக்கும் ஊர்களில் தோப்புத்துறை ஒரு பழைமையான துறைமுக நகரமாகும். பலதரப்பட்ட உள்நாட்டு வணிகம் மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி வணிபம் பெரிய அளவில் நடைப்பெற்ற தொன்மைமிக்க ஊர், கடலும் அதை சார்ந்த இடமும் இருப்பதால் சங்க கால தமிழர்கள் வழக்கப்படி தோப்புத்துறை நெய்தல் நிலம் என்று வகைப்படுத்தப்பட்டது.
விஜய ரகுநாத சோக்கலிங்கர் ஆட்சி காலத்தில் தோப்புத்துறை பகுதி அவர்களின் ஆட்சியின் கீழ் செயல்பட்ட காரணத்தால் வேதாரண்யம்-திருமறைகாடு சுற்றியுள்ள பல சாலைகளுக்கும், ஊர்களுக்கும், வழிபாடு தளங்களுக்கும் அவர்கள் ஆட்சிபகுதியில் இருந்த சமுத்திரத்திற்கு சேது என்ற பெயர் சேர்த்து அழைக்கப்பட்டது. தோப்புத்துறைக்கு சேதுமாதவபுரம் என்ற பெயரும் இருந்தாக சொல்லப்படுகிறது.
தோப்புத்துறை பகுதியும் சாலை மற்றும் வீதிகளின் அமைப்பு
தொகுதமிழ்நாடு தலைநகர் சென்னை மாநகத்திலிருந்து 365 கீ.மீ தூரத்தில் கிழக்கு கடற்கரை பகுதியில் இருக்கும் ஊர். தோப்புத்துறை 20 கீ.மீ கீழ் பகுதியில் Point calimere என்று அழைக்கப்படும் கோடிக்கரை/காடு உள்ளது. அக்கரைபள்ளி என்று சொல்லப்படும் கடல் பகுதியிலிருந்து தொடங்கும் அடப்பாறு தோப்புத்துறை வழியாக பல ஊர்களை கடந்து நாகப்பட்டினம் வரை ஓடுகிறது. ஒரு காலத்தில் இந்த ஆறுவழியாகவே விளைநிலங்களில் சாகுபடி செய்து நெல் மற்றும் தானியங்களை தோணி என்று சொல்லப்படும் பாய்மரசிறுபடகுகள் மூலம் கொண்டு வந்துள்ளார்கள். இந்த ஆறுவழியாக தான் மரகலங்களை செலுத்தி கடல்முகத்துவரத்து சென்று கடல்வழியாக பல்வேறு நாடுகளுக்கு சென்று வணிகம் செய்துள்ளார்கள்.
வேதாரண்யம்-நாகப்பட்டினம் பிரதான சாலை தொடங்கி ஒவ்வொரு தெரு முடிவும் அடப்பாறு சொல்லப்படும் ஆறு வரை சென்று அடையும். மழை காலங்களில் மழைநீர் அந்தந்த சாலை தெருவழியாக அடப்பாறு சென்று கலக்கும் இதனால் ஊரில் எந்த பகுதியிலும் தண்ணீர் தேங்கி இருக்கும் நிலை இருக்காது. தெருக்களின் அகலம் வசதியான வகையில் அமைக்கப்பட்டுள்ளது அத்துடன் ஊரின் மத்திய பகுதியில் பல நூற்றாண்டுகளுக்கு முன் அரபிய கட்டிடக் கலை அமைப்பில் 5 மண்டபம் கொண்ட ஜாமீய பெரிய பள்ளி மற்றும் அடக்கத்தலமும் ஊர் தெருகளின் மட்டத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட உயரம் உயர்த்தி நிறுவப்பட்டு உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- மணிச்சுடர் நாளிதழில் 16/7/2010 வெளியான கட்டுரை-தோப்புத்துறை ஜாமிய மஸ்ஜித் திறப்பு விழா சிறப்பு மலர்.