முத்துப்பேட்டை (திருவாரூர் மாவட்டம்)

முத்துப்பேட்டை (Muthupet), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் முத்துப்பேட்டை வட்டத்தை சேர்ந்த ஒரு நகரம் மற்றும் தேர்வு நிலை பேரூராட்சி ஆகும். முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் முத்துப்பேட்டையில் உள்ளது. சதுப்புநிலக் காடுகளுக்காகப் முத்துப்பேட்டை புகழ்பெற்றது. முத்துப்பேட்டை நகரம் திருவாரூர் மாவட்டத்திலேயே மூன்றாவது பெரிய நகரமாக திகழ்கிறது பட்டுக்கோட்டை மற்றும் திருத்துறைப்பூண்டி நகரங்களுக்கு இடையே உள்ளது.

முத்துப்பேட்டை
—  தேர்வுநிலை பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவாரூர்
வட்டம் முத்துப்பேட்டை வட்டம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ, இ. ஆ. ப [3]
பேரூராட்சி தலைவர் திருமதி மும்தாஜ் நவாஸ் கான் (தி.மு.க.)
மக்களவைத் தொகுதி நாகப்பட்டினம்
மக்களவை உறுப்பினர்

மு.செல்வராசு

மக்கள் தொகை

அடர்த்தி

41,722 (2011)

5,349/km2 (13,854/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 7.80 சதுர கிலோமீட்டர்கள் (3.01 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/muthupettai

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 7102 வீடுகளும், 41722 மக்கள்தொகையும் கொண்டது.நகராட்சி அந்தஸ்து கொண்ட அடர்த்தியான நகரம்

அமைவிடம் தொகு

முத்துப்பேட்டை பேரூராட்சி, திருவாரூரிலிருந்து 55 கி. மீ. தொலைவில் உள்ளது. முத்துப்பேட்டையில் தொடருந்து நிலையம் உள்ளது. இதனைச்சுற்றி அமைந்த நகரங்கள் திருத்துறைப்பூண்டி 23 கிமீ நாகப்பட்டினம் 53 கிமீ; பட்டுக்கோட்டை 21 கி. மீ. மன்னார்குடி 36 கி. மீ. தொலைவில் உள்ளது.

தேர்வு நிலை பேரூராட்சியாக தொகு

12.80 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 108 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி திருத்துறைப்பூண்டி (சட்டமன்றத் தொகுதி)க்கும், நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

இங்குள்ள தெருக்கள்:

1 முகைதீன் பள்ளி தெரு 2 செக்கடி தெரு 3 புதுத்தெரு 4 புதுத்தெரு 2 5 புதுமனைத் தெரு 6 கண்ணார தெரு 7 ஆஸ்பத்திரி தெரு 8 கிட்டங்கி தெரு 9 கொய்யாத்தோப்பு 10 பட்டறை குளம் சந்து 11 சீதா வாடி சந்து 12 அரபித் தெரு 13 மீன் மார்க்கெட் தெரு 14 மரைக்காயர் வாடி தெரு 15 நெய்யக்கார தெரு 16 குட்டியார் பள்ளி சந்து 17 லப்பை சந்து 18 கல் கேணி தெரு 19 S.P.K.M. தெரு 20 ஓடக்கரை 21 குண்டான் குளத் தெரு 22 A.S.N. தெரு 23 தெற்குத் தெரு 24 திமிலத் தெரு 25 புது காளியம்மன் கோவில் தெரு 26 கால்நடை மருத்துவமனை தெரு 27 கோயிலாம் தோப்பு 28 மாதா கோவில் தெரு 29 பேட்டை முகைதீன் பள்ளி தெரு 30 பேட்டை சிவன் கோவில் தெரு 31 பேட்டை அக்ரஹாரத் தெரு 32 அங்காளம்மன் கோவில் தெரு 34 ஆசாத் நகர் 35 ரஹ்மத் நகர் 37 ரயிலடி தெரு 38 மருதங்காவலி தெரு 39 பிள்ளையார் கோவில் தெரு 40 துவான் தோட்ட வளாகம் 41 P.R.M. கொள்ளை 42 கொய்யாத்தோப்பு வடக்குத் தெரு 43 மஜிதிய தெரு 44 சீனா பானா தோப்பு 45 ஆலங்காடு 46 மங்களூரு 47 செம்படவன் காடு 48 தம்பிக்கோட்டை கீழ காடு 49 தம்பி கோட்டை மாரியம்மன் கோவில் தெரு 50 சிறிய கடைத்தெரு 51 பெரிய கடைத்தெரு 52 மன்னார்குடி சாலை தெரு 53 போஸ்ட் ஆபிஸ் தெரு 54 சித்தேரி குளத் தெரு 55 புதுக்குளம் தெரு 56 O.P.M சந்து 57 சித்தி விநாயகர் கோவில் தெரு 58 அரசகுல தெரு 59 ஆட்டப் சந்து 60 ஜமாலியா தெரு 61 தமானியா தெரு 62 ரஹமத் பள்ளிவாசல் தெரு 63 முத்துப்பேட்டை தர்கா தெரு 64 தீன் முஹம்மது காலனி தெரு 65 கோவிலூர் பெரியநாயகி தெரு 66 கோசாகுளம் தெரு 67 வாணக்காரத்தெரு 68 மாரியம்மன்கோவில்தெரு 69 பாரதியார் தெரு 70 நண்டு மரைக்காயர் தெரு 71 நடுத்தெரு 72 மஜிதிய தெரு 73 S.K.M தெரு 74 அபூஹனிபா தெரு 75 ஆகாஷ் தோப்பு 76 அச்சக்காரன் வாடி சந்து 77 அலியார் சந்து 78 ஷரிப் தெரு 79 காசிம்தென்னமர கடை சந்து 80 தெற்கு அப்துல்கரீம் சந்து 81 திருத்துறைப்பூண்டி சாலை 82 பட்டுக்கோட்டை ரோடு 83 தென்னை மரக் கடை சந்து 84 சின்ன கட்சி மரக்காயர் தெரு 85 அப்துல் கரீம் சந்து 86 நெய்னார்பள்ளி சந்து, 87 பரகத் நகர் 88 கருமாரியம்மன் கோவில் தெரு 89 கொய்யா பஜார் 90 இமாம் அபூஹனிபா தெரு 91 பேட்டை ரோடு 92 மன்சூர் நகர் 93 தெற்கு ரெயில்வே ரொடு 94 புதுக்குடியிருப்பு 95 கோவிலூரில் உள்ள மணல் மொட்டு தெரு 96 கல்லடி கொள்ளை 97 பேங்க் தெரு 98 புதுக்குடி 99 புங்கொள்ளை 100 வண்ணன் சந்து 101 கீழ நம்ம குறிச்சி 102 தெற்கு காடு 103 மருதங்காவெளி யில் காளியம்மன் கோவில் தெரு 104 மாரியம்மன் கோவில் தெரு 105 அய்யா நகர் 106 புதிய காளியம்மன் கோவில் தெரு 107 அக்கரகாரம் தெரு 108 முத்துசாமி அம்பலம் தெரு 109 ஹாஜா சாந்து 110 M.M.D காசிம் கொல்லை

மக்கள்தொகை தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 7102 வீடுகளும், 41722 மக்கள்தொகையும் கொண்டது.[5][6][7]

அலுவலகங்கள் தொகு

இங்கு மொத்தம் 15 அரசு அலுவலகங்கள் , 16 கல்விக்கூடங்கள், 12 மருத்துவமனைகள், 166 தெருக்கள், 21 பள்ளிவாசல்கள் , 8 கோவில்கள் , 2 தேவாலயம்

அரசு அலுவலகங்கள் :

 1. வட்டாட்சியர் அலுவலகம்
 2. முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
 3. பேரூராட்சி மன்ற அலுவலகம்
 4. சார்பதிவாளர் அலுவலகம்
 5. வனச்சரக அலுவலகம்
 6. தபால் அலுவலகம்
 7. சுங்க தடுப்பு பிரிவு அலுவலகம்
 8. மின்சார வாரிய அலுவலகம்
 9. வட்டார கல்வி அலுவலர் அலுவலகம்
 10. அரசு பொது நூலகம்
 11. தொலை தொடர்பு அலுவலகம்

தொழில் தொகு

முத்துப்பேட்டையின் பிரதானமாக தொழிலாக இருப்பது மீன் பிடிப்பதும், வீட்டுமனை விற்பனை, விவசாயம், தேங்காய் வியாபாரமுமாகும். முத்துப்பேட்டையிலிருந்து பல மாநிலங்களுக்குத் தேங்காய் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

சுற்றுலா மையம் தொகு

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் உள்ள அலையாத்தி காடுகள் தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய சதுப்பு நிலக்காடுகளாகும். இது திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு இடையில் அமைந்துள்ளது. இதன் மொத்த பரப்பளவு 119 கிலோ மீட்டர். முத்துப்பேட்டை மாங்குரோவ் காடுகள் பிச்சாவரம் மாங்குரோவ் காடுகளைவிட 10 மடங்கு பெரியது. தென்னிந்தியாவின் மிகப்பெரிய மாங்குரோவ் காடுகள் இவை.

முத்துப்பேட்டையில் சதுப்பு நிலக்காடுகள் (லகூன்) அமைந்துள்ளது தனித்தனித்தீவுகளாக காட்சியளிப்பது முத்துப்பேட்டையின் சிறப்பம்சமாகும். உலகின் பல்வேறு பகுதியிலிருந்து பலவகைப் பறவை இனங்கள் குறிப்பிட்ட சில காலங்களில் இங்கு வந்து தங்கி தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறது.

முத்துப்பேட்டை தர்கா தொகு

சுமார் எழுநூறு வருடங்கள் பழமை வாய்ந்த முத்துப்பேட்டை தர்காவிற்கு அனைத்து சமுதாய மக்களும் வருகை தருகின்றனர். பழம்பெருமை வாய்ந்த இந்த இடம், இஸ்லாமிய கட்டுமான முறைகளின்படி கட்டப்பட்டதாகும். இஸ்லாமிய மார்க்கத்தில் கூறப்பட்டுள்ள சமூக சம உரிமை, பாகுபாடின்மை ஆகியவற்றை வலியுறுத்திய ஹழரத் ஷைக் தாவூத் காமில் ஒலியுல்லாஹ் எனும் பெருந்தகையின் நினைவிடமாகும்.

அருகில் உள்ள சுற்றுலா தளங்கள் தொகு

70 கி.மீ. தொலைவில் தஞ்சாவூரும், 29 கி.மீ. தொலைவில் மல்லிபட்டினமும் வேளாங்கண்ணி நாகூர் தென் கிழக்கு முனையில் கோடியக்கரையும் சுற்றுலா தளங்களாக அமைந்துள்ளன.

நகர வளர்ச்சி தொகு

"ஆவன்னா நேனா உதவி பெறும் துவக்கப் பள்ளி"தான் முத்துப்பேட்டையில் துவங்கப்பட்ட முதல் பள்ளிக்கூடமாகும். இப்பள்ளி சங்கத்து பள்ளிக்கூடம் என்றும் அழைக்கப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

 1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
 2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
 3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
 4. முத்துப்பேட்டை பேரூராட்சியின் இணையதளம்
 5. http://www.townpanchayat.in/muthupettai/population
 6. Muthupet Population Census 2011
 7. Muthupet Town Panchayat

வெளி இணைப்புகள் தொகு