குமார முத்து விஜய ரகுநாத சேதுபதி

இராமநாதபுரம் சமஸ்தான மன்னர்

கட்டையத் தேவர் (எ) குமார முத்து விஜய ரகுநாத சேதுபதி (கி.பி. 1728 - 1735[1]) என்பவர் இராமநாதபுரம் சமஸ்தான மன்னராவார். இவர் பவானி சங்கர சேதுபதி மன்னரைப் போரில் தோற்கடித்து சேதுபதி மன்னரானார். இவர் மறைந்த சுந்தரேஸ்வர சேதுபதியின் சகோதரர் ஆவார்.

பதவியைக் கைப்பற்றுதல்தொகு

பவானி சங்கர சேதுபதி இராமநாதபுரத்தின் ஆட்சியைக் கைப்பற்ற தஞ்சை மராட்டிய மன்னர் உதவினார். அவரது உதவிக்கு கைமாறாக பவானி சங்கர சேதுபதி அளித்த வாக்கின்படி சேதுநாட்டின் வடபகுதியான பட்டுக்கோட்டை சீமையை தஞ்சை மன்னருக்கு அளிக்கவில்லை என்ற கோபத்தில் இருந்தார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட கட்டையத்தேவர் தஞ்சை மன்னரை அணுகி அவரின் உதவிபெற்று படையெடுத்து வந்து பவானி சங்கர சேதுபதியைத் தோற்கடித்து, குமாரமுத்து விஜயரகுநாத சேதுபதி என்ற பெயருடன் 1728ல் சேதுநாட்டின் மன்னர் ஆனார்.

நாட்டுப் பிரிவினைதொகு

தஞ்சை மன்னருக்கு அளித்த வாக்கின்படி அரது உதவிக்கு கைமாறாக பட்டுக்கோட்டை சீமைப்பகுதியை குமார முத்து விஜய ரகுநாத சேதுபதி அளித்தார். மீதமுள்ள சேதுநாடும் இருபகுதிகளாகப் பிரிக்கப்பட்டு போரில் தனக்கு உதவிய சசிவர்ணத் தேவருக்கு வைகை ஆற்றின் வடகரைக்கும் பிரான்மலைக்கும் இடைப்பட்ட பகுதியை சின்ன மறவர் சீமை என்ற பெயருடன் பிரித்துக் கொடுக்கப்பட்டது.[2]

மேற்கோள்கள்தொகு

  1. டாக்டர் எஸ்.எம்.கமால் (1997). "சீர்மிகு சிவகங்கைச் சீமை". நூல் 223. பசும்பொன் மாவட்ட கலை, இலக்கிய வரலாற்று ஆய்வு மையம்,. பார்த்த நாள் 28 சூன் 2019.
  2. எஸ். எம். கமால் (2003). "சேதுபதி மன்னர் வரலாறு/IV. கட்டையத் தேவர் (எ) குமார முத்து விஜய ரகுநாத சேதுபதி". நூல் 55-57. சர்மிளா பதிப்பகம். பார்த்த நாள் 21 சூன் 2019.