சிராச் உத் தவ்லா

சிராஜ் உத் தௌலா(1733 - ஜூலை 2, 1757) என்று பொதுவாக அழைக்கப்படும் மிர்சா முஹம்மது சிராஜ் உத் தௌலா(உருது: میرزا محمد سراج الدولہ‎, Bengali: নবাব সিরাজ উদ-দাউলা) வங்காளத்தின் முதல் தன்னாட்சி கொண்ட வங்காள நவாப் ஆனார். அவரது ஆட்சி காலத்தின் முடிவில் வங்காளத்தில் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி தொடரத் துவங்கியது.

சிராஜ் உத் தௌலா
''மன்சூர் உல் முல்க் (நாட்டின் வெற்றி )
சிராஜ் உத் தௌலா (மாநில ஒளி )
ஹைபுட் ஜங்க் (போரில் திகில்)
ஆட்சிக்காலம்1756 ஏப்ரல் 9 – 1757 ஜூன் 2
முன்னையவர்அளிவார்டி கான்
பின்னையவர்மிர் ஜாஃபர்
பிறப்பு1733
முர்ஷிதாபாத், பெங்கால் சுபாஹ்
இறப்பு1757 ஜூலை 2
முர்ஷிதாபாத்,
புதைத்த இடம்
க்ஹுஷபாஹ்,முர்ஷிதாபாத்
துணைவர்லுத்ப் உன் நிசா
குழந்தைகளின்
பெயர்கள்
குத்சியா பேகம் சாஹிபா
பெயர்கள்
மிர்சா முஹம்மது சிராஜ் உத் தௌலா
அரசமரபுஅப்ஷர்
தந்தைஜெயின் உத் தின் அஹ்மத் கான்
தாய்அமினா பேகம்
மதம்சியா இசுலாம்

தொடக்க ஆண்டுகள்

தொகு

சிராஜ் 1733 ல் ஜெயின் ஐபக் அகமது கான் (மிர்சா முகமது ஹசிம்) மற்றும் அமினா பேகம் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.பிறந்தவுடன் சிராஜ் தாய்வழி தாத்தாவான அளி வர்டி கான், பீகாரின் துணை கவர்னராக நியமிக்கப்பட்டார். அமினா பேகம், நவாப் அலி வர்டி கானின் இளைய மகள். அலி வர்டிக்கு மகன் இல்லாததால் அவரது பேரனான சிராஜ், அவருடன் நெருக்கமாக ஆனார். மேலும் சிராஜின் குழந்தை பருவத்தில் இருந்தே அவர் அளிவர்டிக்கு அடுத்து நாடாள்வார் என பலரால் பார்க்கப்பட்டார். அதன்படி அவருக்கு எதிர்கால நவாப்பிற்கு தேவையான அனைத்து கல்வி மற்றும் பயிற்சிகள், நவாப் அரண்மனையில் கொடுக்கப்பட்டது. இளம் சிராஜ் 1746 ஆம் ஆண்டில் மராத்தாகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளில் அளிவர்டியுடன் சேர்ந்து ஈடுபட்டார். எனவே சிராஜ் குடும்பத்தின் "அதிர்ஷ்டக் குழந்தை" என கருதப்பட்டார். சிராஜ் பிறந்ததில் இருந்தே அவர் தாத்தா சிராஜ் மீது சிறப்பு பாசம் வைத்து அவனை நேசித்தார்.

மே 1752 ல், அளிவர்டி கான் தனக்கு அடுத்ததாக அரசாள்வது சிராஜ் என்று அறிவித்தார். அளிவர்டி கானின் கடைசி ஆட்சி காலத்தில் சில குடும்ப உறுப்பினர்களின் மரணம் மனதாலும் உடலாலும் அவரை பாதித்தது. அளிவர்டி கான் எண்பது அல்லது அதற்கு மேலான வயதில் ஏப்ரல் 9,1756 அன்று வீக்கம் காரணமாக இறந்தார். இறக்கும் முன் அளிவர்டி அனைத்து தீமைகள் மற்றும் குறைபாடுகள் நீக்கி அவரது மாகாணத்தை நன்கு பாதுகாக்க சிராஜை அறிவுறுத்தினார். அளிவர்டி மரண படுக்கையில் இருந்தபோது சிராஜ் தான் எதிர்காலத்தில் மதுபானம் தொட மாட்டேன் என்று குர்ஆன் மீது சத்தியம் செய்து பின்னர் எப்போதும் அந்த வாக்குறுதியை கடைபிடித்தார் என்று லுகே ஸ்க்ரடன் (1765-1768 இருந்து பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்இயக்குனர்களில் ஒருவர்) கூறுகிறார். அவரது குடும்பத்தில் இருந்தும் வெளியே இருந்தும் சிராஜ் தனது குறுகிய ஆட்சி காலத்தில் (ஏப்ரல் 1756 - ஜூலை 1757) பல எதிரிகளை சந்தித்தார்.

அளிவர்டி கான் ஆட்சியின் போது சிராஜ் "மன்சுர்கஞ்" அரண்மனை என்று அழைக்கப்படும் ஹிரஜ்ஹீல் (வைர ஏரி) மற்றும் ஹிரஜ்ஹீல் அரண்மனை கட்டினார். அவர் க்ஹசெடி பேகமின் (அவரது தாய்வழி அத்தை) மோடிஜ்ஹீல் (பேர்ல் ஏரி) மற்றும் மோடிஜ்ஹீல் அரண்மனை மீது மிகவும் பொறாமை கொண்ட காரணத்தால் இதை கட்டினார்.

நவாப்பாக ஆட்சிக்காலம்

தொகு

சிராஜ் மன்சூர் உல் முல்க் (நாட்டின் வெற்றி), சிராஜ் உத் தௌலா (மாநில ஒளி) மற்றும் ஹைபுட் ஜங்க் (போர் திகில்) ஆகிய தலைப்புகள் கீழ் 23 வயதில் ஏப்ரல் 1756யில் அளிவர்டி கானிற்கு பிறகு நவாப்பாக ஆனார். சிராஜின் அத்தை க்ஹசெடி பேகம் (மெஹர்உன் நிசா பேகம்), ராஜா ராஜ்பல்லாப் , மீர் ஜாபர் மற்றும் சவுகத் ஜங் (சிராஜ் உறவினர்) ஆகியோர் சிராஜ் நவாப் ஆனதால் பொறாமை அடைந்து சிராஜ் மீது பகைமை கொண்டனர். க்ஹசெடி பேகமின் பெரும் செல்வத்திற்கு மூலமாக இருந்தது அவரின் வலிமை மற்றும் செல்வாக்கு ஆகும். பேகமின் தீவிர எதிர்ப்பினால் சிராஜ் உத் தௌலா அவளின் மோடிஜ்ஹீல் அரண்மனையில் இருந்த செல்வத்தை பறிமுதல் செய்து அவளை சிறையில் அடைத்தார். நவாப் உயர் அரசு பதவிகளில் மாற்றங்கள் செய்து, அவற்றை தனது சொந்தமானவர்கள் மற்றும் பிடித்தவர்களுக்கு கொடுத்தார். பக்ஷியாக (இராணுவ சம்பளம் வழங்குபவர் ) இருந்த மீர் ஜாபர் இடத்தில் மீர் மார்டான் நியமிக்கப்பட்டார். மோகன்லால் அவரது திவான் கஹனா என்ற பெஷ்கர் பதவிக்கு உயர்த்தப்பட்டார்.மேலும் அவர் நிர்வாகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். பூர்னியா கவர்னர் சவுகத் ஜங்யை சிராஜ் அடக்கினார்.மேலும் சவுகத் ஜங் ஒரு மோதலில் கொல்லப்பட்டார்.

சிராஜ் அவரது தாத்தாவின் நேரடி அரசியல் சீடர் மற்றும் உலக அளவில் ப்ரிடிஷிர்க்கு காலனித்துவத்தில் ஈடுபாடு உண்டு என்பதை அறிந்தார். எனவே பெங்காலில் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் அரசியல் மற்றும் ராணுவம் இருந்ததை எதிர்த்தார். தனது சொந்த நீதிமன்றத்தில் தலையிட்டு சில உறுப்பினர்களை அவருக்கு எதிராகச் சதி செய்ய தூண்டுவதில் அந்த நிறுவனம் ஈடுபடுவதை கண்டு கோபம் கொண்டார். நிறுவனத்தின் எதிராக மூன்று முக்கியமான குற்றச்சாட்டுக்கள் இருந்தன. முதலாவதாக அவர்கள் எந்த வித அறிவிப்பு மற்றும் ஒப்புதல் இல்லாமல் வில்லியம் கோட்டையை சுற்றி பலப்படுத்தினர். இரண்டாவதாக முகலாய மன்னர்கள் அவர்களுக்கு வழங்கிய சலுகைகளை தவறாக பயன்படுத்தி அரசாங்கத்திற்கு பெரிய அளவில் சுங்க வரியில் இழப்பு ஏற்படுத்தினர். மூன்றாவதாக அவர்கள் சிராஜின் சில அதிகாரிகளுக்கு தங்குமிடம் கொடுத்தனர். எடுத்துக்காட்டாக அரசாங்க நிதிகளை தவறாக பயன்படுத்தி பின்னர் டாக்காவிற்கு தப்பி ஓடிய ராஜ்பள்ளவ் மகன் கிருஷ்ணதாஸ் என்பவருக்கு தங்குமிடம் கொடுத்தனர். எனவே கிழக்கு இந்திய கம்பெனி கல்கத்தாவில் உள்ள கோட்டை வில்லியமில் இராணுவ விரிவாக்கம் தயாரிப்புக்களை தொடங்கிய போது சிராஜ் அதை நிறுத்த வேண்டும் என்று கோரினார். சிராஜின் கட்டளைகளுக்கு கவனம் செலுத்தவில்லை.எனவே சிராஜ் உத் தௌலா பதிலடி கொடுக்கும் வகையில் ஜூன் 1756யில் ப்ரிடிஷ்ஹிடம் இருந்து கொல்கத்தாவை (அலினகர் என பெயர் மாற்றம்) கைபற்றினார்நவாப் அவரது படைகள் கூட்டி கோட்டை வில்லியமை கைபற்றினார். 64 இருந்து 69 எண்ணிக்கை கொண்ட கைதிகளைத் தற்காலிகமாக ஒரு உள்ளூர் தளபதியால் சிறையில் வைக்கப்பட்டார்கள். ஆனால் கட்டளையில் குழப்பம் இருந்தது மற்றும் கைதிகளை தற்செயலாக ஒரே இரவில் அங்கு இருந்து வெளியேறினர். இன்னும் கோட்டை வில்லியம் காவல் படை 43 க்கும் பின்னர் கணக்கில் வராத இருந்தது.எனவே அதிக பட்சமாக 43 பேர் பிளாக் ஹோலில் இறந்தார்கள். பிரித்தானிய எத்தனை பேர் கொள்ள பட்டனர் எண்ணிக்கை மற்றும் இந்தியர்கள் நோக்கங்களை பெரிதாக்கி என்ன நடந்தது என்ற உண்மையை அறிந்தவர்கள் குறைந்த ஹொல்வெல்ல் மற்றும் பிற கிழக்கு இந்திய கம்பெனி அதிகாரிகள் கூறினார். மறுமுனையில் இந்தியர்கள் ஐந்து டஜன் மக்களை ஆறு பேர் இருப்பதற்கு வடிவமைக்கப்பட்ட செல்லில் அடைத்தனர். தற்செயலாக அவர்களை பற்றி மறந்துவிட்டார்கள். அவர்களை உஷ்ணத்தால் மயக்கமடைந்து மற்றும் பட்டினி கிடந்தனர்.[1]

சர் வில்லியம் மெரிடித் இந்தியாவில் ராபர்ட் கிளைவ் நடவடிக்கைகள் பற்றி ஒரு நாடாளுமன்ற குழு விசாரணை போது பிளாக் ஹோல் சம்பவம் சுற்றியுள்ள எல்லா குற்றச்சாட்டுக்களை சிராஜ் உத் தௌலா மீது நிரூபிக்கப்பட்டுள்ளது என்றார். சிராஜ் உத் தௌலாவிடம் ஒரு சமாதான உடன்பாட்டிற்கு ஒப்புப்கொண்டனர்.பெங்கால் நவாப் அதிகாரத்தை நோக்கி பிரித்தானிய கிழக்கு இந்திய நிறுவனயத்தின் ஆக்கிரமிப்பு அத்துமீறல்களுக்கு மன்னிப்பு செய்யப்பட்டது.அந்த அமைதி உடன்பாட்டை உறுதிப்படுத்த தூதர்களாக சென்ற நபர்கள் சதி செய்து அவரின் ராஜ்யத்தை மற்றும் அவரது வாழ்க்கையையும் இழந்தார்.[2]

சந்தர் நகர் தாக்குதல் பற்றி தெரிந்த போது நவாப் மேலும் கோபம் அடைந்தார். அவரது முன்னாள் எதிரியான பிரித்தானிய திரும்பினார்கள்.எனவே அவர் இப்போது பிரித்தானியக்கு எதிராக தன்னை வலுப்படுத்த கூட்டணிகள் அமைக்க வேண்டிய தேவை இருப்பதாக உணர்த்தார். நவாப் மேற்கில் இருந்து ஆப்கானிஸ்தான் அகமது ஷா துரானி கீழ் மற்றும் வடக்கில் இருந்து மராட்டியர்கள் தாக்குதல் அச்சம் கொண்டார். எனவே பக்கத்தில் இருந்து தாக்கப்படும் அச்சம் காரணத்தால் அவர் பிரித்தானியக்கு எதிராக அவரது முழு படையும் அனுப்ப முடியவில்லை. ஒரு ஆழமான அவநம்பிக்கை பிரித்தானிய மற்றும் நவாப் இடையே இருந்தது. இதன் விளைவாக காசிம் பசார் மற்றும் டி பஸ்சியில் உள்ள பிரஞ்சு தொழிற்சாலை தலைவரான ஜீன் லாவிடம் சிராஜ் இரகசிய பேச்சுவார்த்தை தொடங்கினார். மூர்ஷிதாபாத்திற்கு தெற்கில் உள்ள காசிம் பசார் தீவிற்கு ராய் டுர்லப்ஹ் கீழ் நவாப் தனது இராணுவம் ஒரு பெரிய பிரிவுவை பிளாசிக்கு அனுப்பினார்.[3][4][5][6]

நவாப் எதிராக மக்கள் அதிருப்தி தனது சொந்த இடத்திலேயே தழைத்தோங்கியது. அளிவர்டி ஆட்சி நிலைமைக்கு மாறாக சிராஜ் ஆட்சியின் கீழ் செத்ஸ்,வங்காள வர்த்தகர்கள் தங்கள் செல்வம் மீது நிரந்தர பயம் கொண்டனர். அவர்கள் எந்த வழியில் அச்சுறுத்தபட்டாலும் அவர்களை பாதுகாக்க யர் லுடுப் கானை ஈடுபடுத்தி இருந்தனர்.[7] சிராஜ் சபையில் நிறுவனத்தின் பிரதிநிதியாக இருந்த வில்லியம் வாட்ஸ் ஆட்சியாளரை தூக்கிவீச ஒரு சதி பற்றி க்ளைவிடம் தகவல் கொடுத்தார் . மீர் ஜாபர், இராணுவ சம்பளம் அதிகாரி ராய் டுர்லப்ஹ் , யர் லுடுப் கான் ,ஒமிசண்ட் (அமிர் சந்த்), ஒரு சீக்கிய வியாபாரி மற்றும் பல இராணுவ அதிகாரிகள் சதிகாரர்களில் அடங்குவர்.[8] இது சம்பந்தமாக மீர் ஜாபர் மூலம் தொடர்பு கொண்ட போது கிளைவ் 1 மே அன்று கல்கத்தாவில் உள்ள தேர்வு குழுவிற்கு அதை குறிப்பிட்டார் . குழு கூட்டமைப்பு இதற்கு ஆதரவாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. மீர் ஜாபர் மற்றும் பிரித்தானிய இடையே ஒப்பந்தம் போடப்பட்டது. போர்க்களத்தில் ஆதரவு கொடுப்பதற்கு பகரமாக நவாப் அரியணைக்கு அவரை உயர்த்துவதாக ஒப்பந்தம் வரையப்பட்டதது.மேலும் அவர் கல்கத்தா மீது தாக்குதல் நடத்தியதற்கு பகிரமாக நிறைய பணம் கொடுக்க வேண்டும் என்றும் ஒப்பந்தம் போடப்பட்டது. மே 2 ம் தேதி, கிளைவ் தனது முகாமில் உடைத்து பாதியை கல்கத்தாவிற்கும் மற்றும் பிற பாதியை சண்டெர்னகற்கு அனுப்பினார்.[9][10][11][12]

மீர் ஜாஃபர் மற்றும் செத்ஸ் பிரிட்டிஷீர்கும் மற்றும் தனக்கிடயே இடையே கூட்டமைப்பு இருப்பது ஒமிசந்திடம் ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அவர் அதை பற்றி அறிந்த போது, அவர் தனது பங்கு மூன்று மில்லியன் ரூபாய்க்கு (£ 300,000) அதிகரிக்க வேண்டும் என்று அச்சுறுத்தினார். இதை அறிந்து குழுவிற்கு இராபர்ட் கிளைவ் ஒரு சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஒன்றை தெரிவித்தார். ஓமிச்சந்தை குறிப்பிடாத உண்மையான ஒப்பந்தத்தை வெள்ளை தாளிலும் மற்றும் அவரை ஏமாற்ற ஓமிசந்து விரும்பிய ஒப்பந்தத்தை சிவப்பு காகிதத்திலும் ஆக அவர் இரண்டு ஒப்பந்தங்கள் போட வேண்டும் என்று அறிவுறுத்தினார். குழுவின் உறுப்பினர்கள் இரு ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டனர். ஆனால் அட்மிரல் வாட்சன் உண்மையான ஒப்பந்தத்தில் மட்டும் கையெழுத்திட்டார். எனவே அவர் கையெழுத்து கற்பனையான ஒன்றில் போலியாக போடப்பட்டது.[13] இரு உடன்படிக்கைகள் மற்றும் இராணுவ, கடற்படை மற்றும் குழுவிற்கான நன்கொடைகளை ஆகியவற்றில் ஜூன் 4 ம் தேதி மீர் ஜாபர் கையெழுத்திட்டார்.[14][15][16][17]

இந்தியாவில் கிளைவ் நடத்தை பற்றி மே 10, 1773 அன்று நாடாளுமன்ற குழு விசாரணை போது நாடாளுமன்ற கீழ்சபை முன் சாட்சியோடு அவர் தன்னை பாதுகாத்து கொண்டார்.

அவர் தனது ரகசிய வேலைக்காரனாக கருதிய ஒமிசாந்து தனது முதலாளியிடம் அவரை தாக்க ஆங்கிலேயர் மற்றும் மொன்சிஐர் டுப்ரீ இடையே உள்ள ஒப்பந்தம் பற்றி கூறினார், இந்த ஆலோசனைக்கு அவர் நான்கு லட்சத்திற்கு குறையாத ஒரு தொகை பெற்றார். இவர் முழுதாக நம்பத்தக்க மனிதன் என்று கண்டுபிடித்த பிறகு அவர் புரட்சியில் ஒரு மிக முக்கிய பொருள் இயந்திரம் போல் மாறிவிட்டார். எனவே எங்கள் நோக்கத்திற்காக அத்தகைய ஒப்பந்தம் தேவைப்பட்டது. அவரது நிபந்தனைகள் பூர்த்தி செய்ய அவருடன் ஒப்பந்தத்தில் நுழைந்தோம். அனைத்து விஷயங்கள் தயார் செய்த பிறகு மாலையில் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.அவர் முப்பது லட்ச ரூபாய் மற்றும் அனைத்து புதையலிலும் ஐந்து சதவீதம் வலியுறுத்தியதாக நபோப் கோர்ட்டில் இருந்த வாட்சிடம் ஒமிசாந்து கூறினார்.இதை உடனடியாக செயல்படுத்தாவிடில் அனைத்தையும் நபோபிடம் வெளியிடுவதாகவும் மற்றும் காலை முன்பாகவே வாட்ட்ஸ் மற்றும் கோர்ட்டில் உள்ள இரண்டு ஆங்கிலேயர்களையும் துண்டித்து விடுவதாக கூறினார். திரு வாட்ஸ் உடனடியாக இந்த தகவலை சபையில் எனக்கு அனுப்பினார். நான் இந்த மக்கள் உயிர்களைக் காப்பாற்ற மற்றும் நோக்கம் வெற்றி பெற ஒரு தந்திரம் கண்டுபிடிக்க தயங்கவில்லை. இந்த நோக்கத்திற்காக நாம் மற்றொரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம். ஒன்று சிவப்பு மற்றொன்று வெள்ளை ஒப்பந்தம் என அழைக்கப்பட்டது. இந்த உடன்படிக்கை அட்மிரல் வாட்சன் தவிர எல்லோரும் கையெழுத்திட்டுள்ளனர்; நான் அவருடனான உரையாடல் மூலம் அவர் பெயரை இணைக்க எனக்கு போதுமான அங்கீகாரம் இருக்கிறது என்று கருதி இருக்க வேண்டும். அவர் தனக்கு போதுமான அதிகாரம் இருப்பதாக நினைத்தார் என்பது எனக்கு தெரியும்; அட்மிரல் வாட்சன் பெயரை கையெழுத்திட்ட நபர் அவர் முன்னிலையில் அல்லது அவர் இல்லாமல் செயதாரா என்பதை என்னால் சொல்ல முடியாது. இந்த உடன்படிக்கை உடனடியாக ஒமிச்சண்டுக்கு அனுப்பப்பட்டது. சூழ்ச்சிகளை அவர் சந்தேகிக்கவில்லை.நிகழ்வு நடந்தது மற்றும் வெற்றி கிட்டியது. நான் முழுமையாக ஒத்துக்கொள்கிறேன் .நிறுவனத்தின் இருப்பு மிகவும் பணயத்தில் இருந்தது மற்றும் மக்களின் வாழ்க்கையை மிகவும் பரிதாபமாக அமைந்துள்ளது மற்றும் அழிக்கப்படுகின்றன நிலையில் இருந்தது, அது மிக பெரிய ஒரு வில்லன் ஏமாற்ற உண்மை கொள்கை மற்றும் நீதி சமந்தப்பட்ட விஷயம். " [18][19]

பிளாசி போர்

தொகு
 
பிரான்சிஸ் ஓவியம் : பிளாசி போருக்கு பின் கிளைவ்வும் மிர் ஜாபரும் சந்தித்தது.
 
1757 ஜூன் 23 அன்று ராபர்ட் கிளைவுக்கும் சிராஜ் உத் தௌலாவிற்கும் நடந்த பிளாசி போரின் திட்டம். இது போர்களத்தின் வரைபடம். .

பிளாசி சண்டை (அல்லது பலஷி) இந்திய வரலாற்றில் பரவலாக கருதப்படும் ஒரு திருப்பு முனையாகும் மற்றும் அது பிரித்தானிய ஆதிக்கத்திற்கு வழிவகுத்தது. கல்கத்தாவில் சிராஜ் உ தவுலா வெற்றி கண்ட பிறகு, பிரித்தானிய பழிவாங்குவதற்காகவும் கோட்டையை மீண்டும் கைபற்றுவதற்காகவும் சென்னையில் இருந்து புதிய படைகளை அனுப்பியது. பின்வாங்கிய சிராஜ் உ தவுலா பிளாசியில் பிரித்தானியயை சந்தித்தார். சிராஜ் உ தவுலா முர்ஷிதாபாத்தில் இருந்து 27 மைல் தொலைவில் முகாம் போட வேண்டியிருந்தது. போர்களில் சிராஜிற்கு மிகவும் அன்பு துணையாக இருந்த மிர் மார்டனின் திடீர் வீழ்ச்சியால் வருத்தமடைந்த சிராஜ் 23 ஜூன் 1757 அன்று மிர் ஜாஃபரை அழைத்தார். நவாப் மிர் ஜாபரிடம் உதவி கேட்டார். மிர் ஜாபர் அந்த நாள் பின்வாங்குமாறு சிராஜிடம் அறிவுறுத்தினார். எனவே நவாப் போர் நிறுத்த உத்தரவிட்டு பெரும் தவறை செய்தார். அவரது கட்டளையை தொடர்ந்து நவாபின் வீரர்கள் தங்கள் முகாம்களுக்கு திரும்பி கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் ராபர்ட் கிளைவ் தனது படையை வைத்து இராணுவ வீரர்களை தாக்கினர். இந்த திடீர் தாக்குதலால் சிராஜ் இராணுவத்தால் போராடுவதற்கு வழி நினைக்க முடியும். எனவே அத்தகைய சூழ்நிலையில் தப்பி ஓடிவிட்டனர். ஜகத் சேத், மீர் ஜாபர், கிருஷ்ண சந்திரா ,உமி சந்த் ஆகியோரின் சதியால் அவர் போரை இழந்து தப்பித்து ஓட வேண்டி இருந்தது. அவர் படகு மூலம் முதலில் மூர்ஷிதாபாத் சென்று பின்னர் பாட்னா சென்றார் . ஆனால் இறுதியில் மிர் ஜாபரின் வீரர்களால் கைது செய்யப்பட்டார். மிர் ஜாபரின் மகனான மிர் மிரனின் உத்தரவின் கீழ் சிராஜ் உ தவுலா ஜூலை 2 , 1757 அன்று நமக் ஹராம் டிஒர்ஹியில் முகமது அலி பெகால் தூக்கிலிடப்பட்டார்.

சிராஜ் உத் தௌலாவின் குணம்

தொகு

இந்தியா முழுவதும் பிரித்தானிய ஆட்சியின் தொடக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்தியா,வங்காளம் மற்றும் பாக்கிஸ்தான் போன்ற நாடுகளில் சிராஜ் உத் தௌலாவை ஒரு சுதந்திர போராட்ட வீரர் என்று கருதுகின்றனர். ஒரு இளைஞராக பொறுப்பற்ற வாழ்க்கை வாழ்ந்தார்.இது அவர் தாத்தா கவனத்திற்கு வந்தது. ஆனால் அவர் தனது தாத்தா மரணப்படுக்கையில் இருந்த போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அவர் பெங்கால் நவாப் ஆனா பிறகு சூதாட்டம் மற்றும் மது அருந்துவதை முற்றிலும் கைவிட்டார்.

இளம் சிராஜ் உத் தௌலா ஆலிவ் தோல் நிறம் கொண்டவர்.அவர் மெலிந்து மற்றும் உயரமாக இருப்பார்.அவர் தோள்பட்டை நீளம் கருப்பு முடி வைத்திருந்தார். மிக சிறந்த பட்டு மற்றும் பருத்தி,கப்தான் மற்றும் ஷெர்வானிகள் அணிந்தார்.அவர் தனது மிக தீவிரமான ஆலோசகர்களிடம் விரோதமாக நடந்து கொண்டார்.அவர் கண்மூடித்தனமாக மிக சிலரையே நம்பினார். மேலும் பிரித்தானிய உட்பட தனது எதிரிகளை அடிக்கடி அவமதித்தார்.

"கொடுமை மற்றும் சீரழிவு செய்யும் அசுரன்." என்று சிராஜ் உத் தௌலா கருத்தபட்டார் என்று ராபர்ட் கிளைவின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் கூறுகிறார்,

சிராஜ் உத் தௌலாவிற்கும் அவரது தாய்வழி தாத்தாவான அலிவர்டி கானிர்கும் இடையே உள்ள உறவு பற்றி 1778 இல் ராபர்ட் ஒமரே எழுதினார்:

பதினேழு வயது இளைஞரான மிர்சா முகமது சிராஜ் அந்த வயதில் அறிவில்லாத பிரபுகற்களில் ஒருவராக எதிர்பார்கபட்டார். ஆனால் அவர் மிக கொடூரமான இருந்தார். ஆனால் அளிவார்டி கான் தந்தை மீது இருத்த பெரிய பாசம் அவர் மகனுக்கும் மாறியது.தனது சொந்த அரண்மனையில் சில ஆண்டுகளாக இருந்தார். அவரின் தீய மனநிலையை மாற்றுவதற்கு பதிலாக அதை அதிகரித்தார்.இயல்பான வன்மை நாளடைவில் அதிகரித்தது. பிடிவாதமாக, பாவப்பட்ட, மற்றும் முரண்பாடு பொறுமையற்ற; குழப்பத்தால் தனக்கு பிடித்த சில கோமாளிகள் மற்றும் சீர்கெட்ட ஆட்களை தவிர அவரை அணுகி வந்த அனைவரையும் சந்தேகித்தார். இந்த நிலையில் அவர் அடக்கம் அற்ற மற்றும் தீயொழுக்கம் கொண்டவராக வாழ்ந்தார். அதிகப்படியான சாராயமுடைய மது குடிப்பது அவரது லட்சியம் மற்றும் அவருடைய பிறப்பில் கிடைத்த சில அறிவாற்றலையும் இழந்தார். எனினும் அவர் அளிவார்டி முன்னிலையில் மிகவும் தந்திரமாக இருந்தார். யாருமே அவரது உண்மையான தன்மையை தெரிவிக்கவில்லை. "

மீர் ஜாபர்கு ஆதரவாக இருந்த இரண்டு ஷியா வரலாற்றாசிரியர்கள் சிராஜ் உத் தௌலாவை பற்றி எழுதினர்.

குலாம் ஹுசைன் சலீம் எழுதியது:

சிராஜ் உத் தௌலாவின் கடுமையான கோபம் காரணமாக அவரது இராணுவ தளபதிகளின் மனதில் பயம் இருந்தது.எந்த அளவுக்கு என்றால் அவரின் எந்த ஒரு தளபதி மற்றும் சீமானும் கவலையில் இருந்து விடுபட்டவர்களாக இல்லை. வாழ்க்கை மற்றும் மரியாதை நம்பிக்கை இழந்து சிராஜ் உத் தொவ்லாவிற்கு காத்திருந்து தவறான சிகிச்சை இல்லாமல் திரும்பிய அமைச்சர்கள் இறைவனுக்கு நன்றி கூறினார். சிராஜ் உத் தௌலா அளிவார்டி கானின் அனைத்து சீமான் மற்றும் திறன் கொண்ட தளபதிகளை கேலி செய்வார் மற்றும் அவர்களுக்கு சரியாக பொருந்தாத துச்சமாக புனைபெயர் தந்துவிட்டார். கடுமையான வெளிப்பாடுகள் மற்றும் தவறான அடைமொழியை அவரது உதடுக்கு வந்தால் சிராஜ் உத் தயக்கமின்றி அனைவரிடமும் அவற்றை உச்சரித்தார்.யாருக்கும் அவரது முன்னிலையில் சுதந்திரமாக மூச்சு விட தைரியம் கிடையாது.

சிராஜ் உத் தௌலாவை பற்றி குலாம் ஹுசைன் எழுதியது

"துணை மற்றும் நல்லொழுக்கத்திற்கும் எந்த வேறுபாடும் இல்லாமல் மற்றும் அவரது மனதில் எவ்வித ஒரு மனிதாபிமானம் இல்லாதது போல,எந்த நிலையில் இருந்தாலும் அவர் ஆண்கள் மற்றும் பெண்கள் வேறுபாட்டை கொண்டவர். கொஞ்ச காலத்தில் மக்கள் அவரை வெறுத்தனர்.மேலும் அவரை சந்திக்க நேர்ந்தால் , 'அல்லாஹ் எங்களை அவரிடம் இருந்து காப்பாற்று என்று கூறுவார்கள். !"

சர் வில்லியம் மெரிடித் இந்தியாவில் ராபர்ட் கிளைவ் நடவடிக்கைகள் பற்றி ஒரு நாடாளுமன்ற குழுவில் விசாரணை செய்த போது அவர் சிராஜ் உத் தொவ்லாவின் தன்மையை பாதுகாத்தார்.

"சிராஜ் உ தவுலா ஒரு மிக தீய, மற்றும் ஒரு மிக கொடூரமான இளவரசனாக இருந்ததாக கூறப்படுகிறத.ஆனால் அவர் எப்படி அந்த குணம் அடைந்தார் என்பது தெரியாதது. அவர் இறக்கும் போது 20 வயதிற்கும் குறைவான இளைஞராக இருந்தார். பிரித்தானிய மீது தான் அவர் முதன் முதலாக ஆத்திரம் கொண்டார். அவர் கல்கத்தாவிற்கு சென்ற போது மிக வருந்த தக்க நிகழ்வு நடந்தது உண்மைதான்.அதாவது பிளாக் ஹோல் கதை.ஆனால் அது அவர் எண்ணம் காரணமாக நடந்தது என்று கூற முடியாது. ஏனென்றால் அது அவருக்கு தெரியாமல் நடந்தது. இதே போன்ற செயின்ட் மார்டின் ரவுண்டுஹௌசில் நடந்த விபத்து என் நினைவிற்கு வருகிறது.அந்த கொடூரமான விபத்திற்கு காரணம் அந்த காலத்தில் ஆட்சி செய்த ராஜாவின் அறிவின்மை ஆகும். சிராஜ் உத் தௌலாவிடம் ஒரு சமாதான உடன்பாட்டிற்கு ஒப்புக்கொண்டனர்.அந்த அமைதி உடன்பாட்டை உறுதிப்படுத்த தூதர்களாக சென்ற நபர்கள் சதி செய்து அவரின் ராஜ்யத்தை மற்றும் அவரது வாழ்க்கையையும் இழந்தார்.[2]

சான்றுகள்

தொகு
  1. "Is the "Black Hole of Calcutta" a myth?". பார்க்கப்பட்ட நாள் August 3, 2012.
  2. 2.0 2.1 The Parliamentary history of England from the earliest period to the year 1803. பார்க்கப்பட்ட நாள் August 2012. {{cite book}}: Check date values in: |accessdate= (help)
  3. Harrington, p. 25
  4. Mahon, p. 337
  5. Orme, p. 145
  6. Malleson, pp. 48–49
  7. Bengal, v.1, p. clxxxi
  8. Bengal, v.1, pp. clxxxiii–clxxxiv
  9. Malleson, pp. 49–51
  10. Harrington, pp. 25–29
  11. Mahon, pp. 338–339
  12. Orme, pp. 147–149
  13. Bengal, v.1, pp. clxxxvi–clxxxix
  14. Orme, pp. 150–161
  15. Harrington, p. 29
  16. Mahon, pp. 339–341
  17. Bengal, v.1, pp. cxcii–cxciii
  18. The Parliamentary history of England from the earliest period to the year 1803, Volume 17. p. 876. {{cite book}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  19. The gentleman's magazine, and historical chronicle, Volume 43. pp. 630–631. {{cite book}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிராச்_உத்_தவ்லா&oldid=3924348" இலிருந்து மீள்விக்கப்பட்டது