அரசப் பிரதிநிதி (பிரித்தானிய இந்தியா)

அரசப் பிரதிநிதி (பிரித்தானிய இந்தியா) (Resident (title), பிரித்தானியப் பேரரசிடம் குடிமைப்பட்ட இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள சுதேச சமஸ்தான மன்னரவைகளில் அங்கம் வகிக்கும் பிரித்தானிய இந்திய அரசின் பிரதிநிதிகளைக் குறிக்கும். இந்த அரசப் பிரதிநிதிகளின் செலவினங்களை சுதேச சமஸ்தான இராச்சியங்களே ஏற்க வேண்டும்.

இந்த பிரித்தானிய அரசப் பிரதிநிதிகள், சமஸ்தான மன்னர் அரசுகளில் உத்தியோகபூர்வமாக இராஜதந்திரச் செயற்பாடுகளை கொண்டிருப்பார், இம்முறை பெரும்பாலும் மறைமுக பிரித்தானிய ஆட்சி வடிவமாக காணப்படும்.

இந்த அரசப் பிரதிநிதிகள், பிரித்தானிய இந்திய அரசுக்கும், சுதேச சமஸ்தானங்களுக்கும் ஒரு பாலமாகச் செயல்படுவர். மேலும் சுதேச சமஸ்தானங்களில் அவ்வப்போது ஏற்படும் வாரிசு உரிமை போன்ற பிணக்குகளைத் தீர்த்து வைப்பார்.

வரலாறு

தொகு

1798 முதல் 1805 முடிய பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுநரான ரிச்சர்டு வெல்லசுலி, சமஸ்தான மன்னர் அரசுகளின் பணிகளில் தலையிடும் விதமாக துணைப்படைத் திட்டத்தினை நடைமுறைப்படுத்தினார். இத்திட்டப்படி, சுதேச சமஸ்தான மன்னர்கள், தங்கள் நாட்டில் ஆங்கிலேயர்களின் படைகளை தங்கள் சொந்த செலவில் பராமரிக்க வேண்டும். அவ்வாறு செலவழிக்க இயலாத அரசுகள், தங்கள் நிலத்தின் ஒரு பகுதியை ஆங்கிலேய ஆட்சியிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும் சுதேச சமஸ்தானங்களின் அரசவைகளில், அரசியல் விவகாரங்களுக்காக, கம்பெனி அதிகாரி ஒருவரை, பிரித்தானிய இந்திய அரசின் பிரதிநிதியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு