பாலி, இராஜஸ்தான்

பாலி (Pali), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் மார்வார் பிரதேசத்தில் உள்ள பாலி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். இந்நகரம் பண்டி ஆற்றின் கரையில் உள்ளது. இது ஜோத்பூருக்கு தென்கிழக்கில் 70 கிலோ மீட்டர் தொலைவிலும், செய்ப்பூருக்கு தென்மேற்கே 300 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

பாலி
பாலி-மார்வார்
நகரம்
பாலி is located in இராசத்தான்
பாலி
பாலி
பாலி is located in இந்தியா
பாலி
பாலி
ஆள்கூறுகள்: 25°46′N 73°20′E / 25.77°N 73.33°E / 25.77; 73.33
நாடுஇந்தியா
மாநிலம்இராஜஸ்தான்
மாவட்டம்பாலி
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்பாலி நகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்153 km2 (59 sq mi)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்230,075
 • அடர்த்தி1,500/km2 (3,900/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி மொழி, மார்வாரி மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்306401
தொலைபேசி குறியீடு எண்02932
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுRJ-IN
வாகனப் பதிவுRJ-22
பாலின விகிதம்916 /
இணையதளம்pali.rajasthan.gov.in

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, 43,810 குடும்பங்களும், 45 வார்டுகளும் கொண்ட பாலி நகராட்சியின் மொத்த மக்கள் தொகை 2,30,075 ஆகும். அதில் ஆண்கள் 1,19,924 மற்றும் 1,10,151 பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 919 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 14% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 77.5% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 34,955 மற்றும் 3,979 ஆகவுள்ளனர்.

இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 173,903 (75.59%), இசுலாமியர் 43,225 (18.79%), சமணர்கள் 11,354 (4.93%), சீக்கியர்கள் 993 (0.43%), கிறித்தவர்கள் 419 (0.18%), மற்றும் பிறர் 0. 07% ஆகவுள்ளனர்.[1]

பொருளாதாரம் தொகு

பாலி நகரத்தில் கைத்தறி மற்றும் பாலிஸ்டர் ரக துணிகள் உற்பத்தியாகிறது.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலி,_இராஜஸ்தான்&oldid=3618102" இலிருந்து மீள்விக்கப்பட்டது