பேரீச்சை
துபையின் ரசீதியாவில் உள்ள ஒரு பேரீச்சை மரம்
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: ஒருவித்திலையி
தரப்படுத்தப்படாத: Commelinids
வரிசை: Arecales
குடும்பம்: Arecaceae
பேரினம்: Phoenix
இனம்: P. dactylifera
இருசொற் பெயரீடு
Phoenix dactylifera
லி.
Dates in salem

பேரீச்சை Phoenix dactylifera பனை வகையைச் சேர்ந்த ஒரு மரம். இம்மரம் இதனுடைய இனிப்பான பழங்களுக்காக வளர்க்கப்படுகிறது. இம்மரம் முதன்முதலில் எங்கு வளர்க்கப்பட்டது என்பதற்கான விவரம் தெரியவில்லை எனினும் பெர்சியக் குடாவில் தொடங்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.[1] இது ஒரு நடுத்தர அளவுள்ள தாவரம். 15 முதல் 25 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. இதன் ஓலைகள் 4 முதல் 6 மீட்டர் நீளம் வரை இருக்கும். ஓர் ஓலையில் 150 ஈர்க்குகள் வரை இருக்கும். ஒவ்வோர் ஈர்க்கும் 30 செ. மீ நீளம் வரை வளரும். மரத்தின் உச்சி 6 முதல் 10 மீட்டர் வரை இருக்கும். ஒவ்வொரு பழமும் அதன் அளவையும் வகையையும் பொறுத்து 20-70 கலோரி சத்தினைக் கொண்டிருக்கும்.இம்மரம் தோற்றத்தில் தமிழகத்தில் இயல்பாக காணப்படும் ஈச்சை மரத்தை ஒத்தது.

உற்பத்தி தொகு

பேரீச்சை விவசாயம் செய்பவர்கள் அதற்கான மகரந்தச் சேர்க்கையை செயற்கை முறையில் செய்கின்றனர். தனியாக ஆண் மரத்தை வைத்து, அதில் பூ வரும்போது மகரந்தத்தைச் சேகரித்து, அதை பெண் மரங்களின் பூக்களில் தெளித்து மகரந்த சேர்க்கையை செய்கின்றனர்.[2]

 
குவைத் நகரத்தின் பழைய கடைத்தெருவில் உள்ள பேரீச்சை வணிகர்
 
புரைதாவில் உள்ள பேரீச்சை நகரம்
 
Date output in 2012
முதல் இருபது பேரீச்சை உற்பத்தியாளர்கள் — 2009
(1000 மெற்றிக் தொன்கள்)
  எகிப்து 1,350.00
  ஈரான் 1,088.04
  சவூதி அரேபியா 1,052.40
  ஐக்கிய அரபு அமீரகம் 759.00
  பாக்கித்தான் 735.28
  அல்ஜீரியா style="text-align:right;"| 600.70
  ஈராக் 507.00
  சூடான் 339.30
  ஓமான் 278.59
  லிபியா 160.10
  தூனிசியா 145.00
  சீனா 140.00
  மொரோக்கோ 72.00
  யேமன் 56.76
  நைஜர் 37.79
  துருக்கி 25.28
  இசுரேல் 22.19
  கத்தார் 21.60
  மூரித்தானியா 20.00
  சாட் 18.78
மொத்த உலக உற்பத்தி 7462.51 (இற்கு மேல்)
Source:
ஐநா உணவு, வேளாண்மை அமைப்பு (FAO)
[3]

உணவுப் பயன்பாடு தொகு

பேரீச்சை
 
திகுலத்து நூர் பேரீச்சம் பழங்கள்
ஊட்ட மதிப்பீடு - 100 grams
ஆற்றல்1,178 kJ (282 kcal)
75.03 g
சீனி63.35 g
நார்ப்பொருள்8 g
0.39 g
புரதம்
2.45
உயிர்ச்சத்துகள்
உயிர்ச்சத்து ஏ
(0%)
6 μg
75 μg
உயிர்ச்சத்து ஏ10 IU
தயமின் (B1)
(5%)
0.052 mg
ரிபோஃபிளாவின் (B2)
(6%)
0.066 mg
நியாசின் (B3)
(8%)
1.274 mg
(12%)
0.589 mg
உயிர்ச்சத்து பி6
(13%)
0.165 mg
இலைக்காடி (B9)
(5%)
19 μg
உயிர்ச்சத்து சி
(0%)
0.4 mg
உயிர்ச்சத்து ஈ
(0%)
0.05 mg
உயிர்ச்சத்து கே
(3%)
2.7 μg
நுண்ணளவு மாழைகள்
கல்சியம்
(4%)
39 mg
இரும்பு
(8%)
1.02 mg
மக்னீசியம்
(12%)
43 mg
மாங்கனீசு
(12%)
0.262 mg
பாசுபரசு
(9%)
62 mg
பொட்டாசியம்
(14%)
656 mg
சோடியம்
(0%)
2 mg
துத்தநாகம்
(3%)
0.29 mg
Other constituents
நீர்20.53 g
Percentages are roughly approximated using US recommendations for adults.
Source: USDA Nutrient Database

பேரீச்சை வகைகள் தொகு

அரபு நாடுகளில் ஏராளமான பேரீச்சை வகைகள் காணப்படுகின்றன. அவற்றிற் சில பின்வருமாறு:

தமிழ் அரபு தமிழ் அரபு தமிழ் அரபு தமிழ் அரபு
அஃபந்தீ أفندي ஜுபைலீ جبيلي மக்தூமீ مكتومي ஸுவைத் سويدا
அஜ்வா عجوة கஈகா كعيكه மினைஃபீ منيفي ஷஹ்ல் شهل
அன்பரா عنبرة கலாஸ் خلاص மிஸ்கானீ مسكاني ஷலாபீ شلابي
பைள் بيض குள்ரீ خضري முஷௌகா مشوكة ஷுக்ரீ شقري
பர்னீ برني குஸாப் خصاب ரபீஆ ربيعة ஸுஃப்ரீ صفري
பர்ஹீ برحي லூனா لونة ரஷூதியா رشوديه ஸுக்கரீ سكري
கர் غر லுபானா لبانة ஸஃபாவீ صفاوي ஸுக்ஈ صقعي
ஹல்வா حلوة மப்ரூம் مبروم ஷைஷீ شيشي வனானா ونانة
ஹில்யா حلية மஜ்தூல் مجدول ஸாரியா سارية சாவீ ذاوي

மேற்கோள்கள் தொகு

  1. Morton, J. 1987. Date. p. 5–11. In: Fruits of warm climates. Julia F. Morton. Miami, FL. — Purdue University. Center for New Crops and Plants Products.
  2. ஆர்.கிருஷ்ணகுமார் (6 அக்டோபர் 2018). "தமிழ்நாட்டிலும் விளையும் பேரீச்சை". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 7 அக்டோபர் 2018.
  3. "Food and Agricultural commodities production". FAOSTAT. 2009. பார்க்கப்பட்ட நாள் 2011-10-20.

வெளி இணைப்புக்கள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Phoenix dactylifera
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
 
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேரீச்சை&oldid=3658997" இலிருந்து மீள்விக்கப்பட்டது