குவைத் நகரம்
குவைத்தின் தலைநகரம் மற்றும் மிகப்பெரிய நகரம்
குவைத் நகரம் (ஆங்கில மொழி: Kuwait City, அரபு: مدينة الكويت), குவைத் நாட்டின் தலைநகரமாகும். இதன் மாநகர மக்கள்தொகை 2.38 மில்லியன் ஆகும். அரேபிய வளைகுடாவின் கரையில் அமைந்துள்ள இந்நகரிலேயே குவைத்தின் பாராளுமன்றமான மஜ்லிஸ் அல்-உம்மாவும் பெரும்பாலான அரச அலுவலகங்களும் தனியார் நிறுவனங்களின் தலைமையகங்களும் அமைந்துள்ளன. மேலும் அமீரகங்களின் அரசியல், கலாச்சார, பொருளாதார மையமாகவும் இது விளங்குகின்றது.
குவைத் நகரம்
مدينة الكويت Madinat Al Kuwayt | |
---|---|
நாடு | குவைத் |
ஆளுநரகம் (Governorate) | அல் அசிமா (Al Asimah) |
பரப்பளவு | |
• மாநகரம் | 200 km2 (80 sq mi) |
மக்கள்தொகை (2005 estimate) | |
• நகரம் | 1,51,060 (2,008) [1] |
• பெருநகர் | 23,80,000 |
நேர வலயம் | ஒசநே+3 (EAT) |
மேற்கோள்கள்
தொகு- ↑ "NationMaster – Kuwaiti Geography statistics". NationMaster. 18 December 2008. http://www.nationmaster.com/country/ku-kuwait/geo-geography. பார்த்த நாள்: 22 August 2011.