வறண்ட வன ஆய்வு நிறுவனம்
வறண்ட வன ஆராய்ச்சி நிறுவனம் (Arid Forest Research Institute) இந்தியாவில் இராசத்தான் , மாநிலம் யோத்பூரில் அமைந்துள்ளது. வறண்ட காடு ஆய்வு நிறுவனம் என்றும் இதை அழைக்கலாம்.
शुष्क वन अनुसंधान संस्थान | |
வகை | கல்வி மற்றும் ஆராய்ச்சி |
---|---|
உருவாக்கம் | 1985 |
Parent institution | ICFRE |
பணிப்பாளர் | டாக்டர் ஐ.டி. ஆர்யா |
அமைவிடம் | கிர்சி உபாசு மண்டி அஞ்சல், நியு பாலி சாலை, சோத்பூர் , , இந்தியா 342005 26°13′43″N 73°01′53″E / 26.228744°N 73.031412°E |
வளாகம் | நகரம் 163.09 ஏக்கர் அளவுக்கு பரப்பளவு |
சுருக்கப்பெயர் | ஆப்ரி |
இணையதளம் | afri |
இராசத்தான் மற்றும் குசராத்தின் வறண்ட மற்றும் அரை வறண்ட பகுதிகளின் வனப்பாதுகாப்பை அதிகரிக்கவும், அங்கு வாழ்கின்ற பல்லுயிரிகளை பாதுகாப்பதற்கும் அதிகரிப்பதற்கும் உகந்த தொழில்நுட்பங்களை வழங்குவதற்காக இந்த நிறுவனம் விஞ்ஞான ஆராய்ச்சிகளை நடத்தி வருகிறது. இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் [1] இந்திய வன ஆய்வு மற்றும் கல்வி அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் இந்நிறுவனம் செயல்படுகிறது[2].
வரலாறு
தொகுஇராசத்தான், குசராத்து, தாத்ரா நகர் அவேலி, டாமன்-டையூ பகுதிகளின் வறண்ட மற்றும் அரை வறண்ட நிலப்பகுதிகளின் வனத்தேவைகளை நிறைவு செய்வதற்காக 1988 ஆம் ஆண்டு ஆரித் வன ஆராய்ச்சி நிறுவனம் நிறுவப்பட்டது.
தேசியநெடுஞ்சாலை 65 இல் அமைந்துள்ள சோத்பூர் பாலிசாலையில் 66 ஏக்கர் பரப்பில் இந்நிறுவனம் அமைந்துள்ளது. இவ்வளாகத்தில் ஆரித் வன ஆராய்ச்சி நிறுவனத்துடன் வீட்டு வசதி அலுவலகக் கட்டிடங்கள், ஆய்வகங்கள், நூலகத்துடன் இணைந்த தகவல் மையம், சமுதாய மையம், விருந்தினர் மாளிகை, விஞ்ஞானிகள் விடுதி மற்றும் குடியிருப்புகள் போன்றவை அமைந்துள்ளன.
மத்திய வறண்ட மண்டல ஆராய்ச்சி நிறுவனத்தை ஒட்டி [3] இந்நிறுவனத்துடன் கூடுதலாக ஒரு வளாகம் மனை எண் 729 இல் இணைந்துள்ளது. இதைத்தவிர வறண்ட வன ஆராய்ச்சி நிறுவனத்துக்கு மூன்று பரிசோதனைப் பகுதிகளும் ஒரு மாதிரி நாற்றுப்பண்னையும் பிரதான வளாகத்திற்கு அருகாமையில் உள்ளன.
ஆய்வு நிறுவனம் இயக்குநர் ஒருவரின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. ஓர் ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளர் குழுவும், வசதிகள் செய்து கொடுக்கும் ஓர் ஒருங்கிணைப்பாளர் குழுவும் இயக்குநருக்கு உதவியாக செயல்படுகின்றன, மேலும் இந்நிறுவனம் நல்ல ஆய்வக வசதிகளும், தொழில்நுட்ப வல்லுநர்களும் கொண்ட ஆறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை:
பிரிவுகள்
தொகு- வனச் சூழலியல் பிரிவு
- வன மரபு மூலங்கள் மற்றும் மர வளர்ப்புப் பிரிவு
- வனப் பாதுகாப்புப் பிரிவு
- மர வளர்ப்புக்கலைப் பிரிவு
- மரமல்லாத வனப்பொருட்கள் பிரிவு
- வேளாண் காடு மற்றும் காடு வளர்ப்பு விரிவாக்கப் பிரிவு
இப்பிரிவுகள் யாவும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வசதிகள் செய்து கொடுக்கும் பிரிவு ஒருங்கிணைப்பாளர், கணக்குப் பிரிவு, நூலகம் மற்றும் தகவல் மையம், விரிவாக்க மையம் போன்ற அமைப்புகளால் நன்கு உதவப்படுகிறது.
இரண்டு வனப்பாதுகாவலர்கள், ஒரு துணை வனப்பாதுகாவலர், 19 விஞ்ஞானிகள், ஒரு கட்டுப்பாட்டு அலுவலர், ஓர் உதவி நிர்வாக அலுவலர், இந்தி அலுவலர், ஒரு நூலகர், 6 ஆராய்ச்சி அலுவலர்கள், ஒரு வரம்பு அலுவலர், அமைச்சுப்பணியாளர், தொழில்நுட்ப அலுவலர் உள்ளிட்ட 133 அலுவலர்கள் இந்நிறுவனத்தில் பணிபுரிகின்றனர்.
திறன் மேம்பாடு மற்றும் ஆய்வுப் பயிற்சி
- வறண்ட மண்டல மரவகைகளுக்கான மர நாற்றங்கால், விதை மற்றும் உரிய தொழில்நுட்பங்கள்.
- வன அளவில் தாவரங்கள் வளர்ச்சி மற்றும் பயிர்ச்செய்கைகளில் மகசூல் மாதிரியாக்கம்.
- நடவு மேம்பாடு, உயிரி தொழில்நுட்பம் மற்றும் தாவர திசு வளர்ப்பு.
- மணற்குன்றுகள், நீர்நிலைகள், உப்பு பாதிக்கப்பட்ட மண் போன்ற பாதிக்கப்பட்ட பகுதிகளில் மரம் வளர்ப்பு
- மழைநீர் சேகரிப்பு மற்றும் மண் ஈரப்பதம் பாதுகாப்பு.
- குறிப்பிட்ட தளங்களில் விவசாய வேளாண்மை மாதிரிகள்.
வசதிகள்
தொகுகணிப்பொறி ஆய்வகம், மாதிரி நாற்றங்கால், புவியியல் தகவல் முறைமை, சமுதாய மையம், மருத்துவமனை போன்றவை இந்நிறுவனத்தில் காணப்படும் வசதிகளாகும்.
கட்டாயப் பணிகள்
தொகுவறண்ட மற்றும் அரை வறண்ட பிராந்தியங்களாக சிறப்பு முக்கியத்துவம் கொண்ட இராசத்தான், குசராத் மற்றும் தாத்ரா மற்றும் நகர் அவேலி முதலான இடங்களில் பல்லுயிரிப்பெருக்கப் பாதுகாப்பும், உயிரின விரிவாக்கத்திற்கான வனவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் முக்கியமான நோக்கங்களாகும்.
மேம்பாடு தேவைப்படும் பகுதிகள்
தொகு- வறண்ட பகுதிகளில் மழைநீர் அறுவடை க்கான நுட்பங்களை உருவாக்குதல்.
- பாதிக்கப்பட்ட தளங்களில் வனப்பகுதி மரம் வளர் தொழில்நுட்பத்தை உருவாக்குதல்.
- மணற்குன்றுகள் மிகுந்த முக்கியத்துவம் கொண்ட பாலைவன பகுதிகளின் சுற்றுச்சூழல் மற்றும் சூழல் மண்டலத்தை உறுதிப்படுத்தல்.
- உயர்தரமான நடவுப் பொருட்கள் உற்பத்திக்கு உத்திகளை உருவாக்குதல்.
- முக்கியமான வறண்ட மண்டல தாவர வகைகளின் மரபுப்பொருள் தோற்றம் குறித்த சோதனை.
- உயிர் உரங்கள்] மற்றும் உயிரியல் பூச்சிக்கொல்லி பற்றிய ஆய்வு.
- வறண்ட மண்டலத்தில் காணப்படும் மரம் சாராத வனப் பொருட்கள் பற்றிய ஆய்வு.
- திசு வளர்ப்பு மற்றும் மரபுப் பொறியியல் நுட்பம் மூலம் மரம் வளர்த்தல் மேம்பாடு.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Arid Forest Research Institute". Afri.icfre.org. பார்க்கப்பட்ட நாள் 2018-04-14.
- ↑ "ICFRE". ICFRE. பார்க்கப்பட்ட நாள் 2018-04-14.
- ↑ "Central Arid Zone Research Institute". Cazri.res.in. பார்க்கப்பட்ட நாள் 2018-04-14.