இந்திய தொழில்நுட்பக் கழகம் இராசத்தான்

இந்திய தொழில்நுட்பக் கழகம் இராசத்தான் (இ.தொ.க. இராசத்தான், Indian Institute of Technology Rajasthan ) இராசத்தான் மாநிலத்தில் இந்திய மனிதவள அமைச்சினால் 2008ஆம் ஆண்டு புதிதாக அமைக்கப்பட்ட ஆறு இ.தொ.கழகங்களில் ஒன்றாகும்.

இந்திய தொழில்நுட்பக் கழகம் இராசத்தான்
குறிக்கோளுரைत्वं ज्ञानमयो विज्ञानमयो असि
வகைPublic
உருவாக்கம்2008
பணிப்பாளர்Prem K. Kalra
அமைவிடம், ,
வளாகம்Urban, spread over 900 ஏக்கர்கள் (3.6 km2)
இணையதளம்www.iitj.ac.in

2008ஆம் ஆண்டிற்கான பாடதிட்டங்கள் இ.தொ.க. கான்பூர் வளாகத்தில் துவங்கியுள்ளது. இ.தொ.க.கான்பூர் இக்கழகத்தின் வழிகாட்டியாக செயல்படும்.ஜோத்பூர் அருகே அமைய வாய்புள்ள நிரந்தர வளாகத்திற்கான இடம் பேரா.விசய் சங்கர் வியாசு தலைமையிலான உயர்மட்ட குழுவினரால் பரிந்துரைக்கப்பட்டு நடுவண் அரசால் முடிவு செய்யப்படும்.

கல்வி திட்டங்கள்

தொகு

தனது முதலாண்டில்,2008-2009, மூன்று பட்டப்படிப்பு திட்டங்களை வழங்குகிறது:

ஒவ்வோரு பாடதிட்டத்திலும் 40 மாணவர்கள் முதலாண்டில் சேர்ந்துள்ளனர்.

இ.தொ.க நுழைவுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் அனைத்து இ.தொ.கவிற்கும் பொதுவாக ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது. மிகவும் கடினமானதும் போட்டி மிகுந்ததுமான இத்தேர்வின் அடிப்படையில் பொறியியல் பட்டப்படிப்பு திட்டங்களுக்கு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

வரும் ஆண்டுகளில் மேலும் கூடுதல் கல்வித்திட்டங்களும் ஆய்வு திட்டங்களும் மற்ற இ.தொ.கழகங்களைப் போன்றே வகுக்கப்படும்.


மேலும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு


வெளியிணைப்புகள்

தொகு