ஹேலியின் வால்வெள்ளி

ஹேலியின் வால்வெள்ளி அல்லது ஹேலியின் வால்மீன் (Halley's Comet; /ˈhæli/ / /ˈhli/), என்பது 75 முதல் 76 ஆண்டுகளுக்கொரு முறை பூமியை அண்மிக்கும் ஒரு வால்வெள்ளி ஆகும்.[1][9] இது அதிகாரபூர்வமாக 1P/ஹேலி என அழைக்கப்படுகிறது.[1] பூமியில் தோன்றும் வால்வெள்ளிகளில் இது மிகவும் பிரபலமானது. ஒவ்வோரு நூற்றாண்டிலும் வானில் பல வால்வெள்ளிகள் தோன்றி மறைந்தாலும் ஹேலி குறுகிய நேரத்துக்கு தெளிவாகக் சாதாரண கண்களுக்குத் தெரியக்கூடியதாகும். ஹேலியின் வால்வெள்ளி சூரியக் குடும்பத்துக்குள் கடைசித் தடவையாக பெப்ரவரி 9, 1986 இல் வந்து போனது. அடுத்த தடவை இது 2061 இன் நடுப்பகுதியில் தோன்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹேலியின் வால்வெள்ளி மட்டுமே புவியில் கண்ணல் பார்க்க கூடிய குறும்பருவ வால்வெள்ளியாகும் இதுமட்டுமே ஒரு வாழ்நாளில் இருதடவை காணமுடிந்த வால்வெள்ளியும் ஆகும்..[10] ஃஆல்லே முன்பு 1986இல் சூரியக் குடும்பத்துக்குள் பார்க்கப்பட்டது. அது மீண்டும் 2061ஆம் ஆண்டின் நடுவில் தோன்றும்.[11]

ஹேலியின் வால்வெள்ளி
A color image of comet Halley, shown flying to the left aligned flat against the sky
1986 மார்ச் 8 இல் ஹேலியின்
கண்டுபிடிப்பு
கண்டுபிடித்தவர்(கள்) வரலாற்றுக்கு முந்தைய நோக்கிடு;
எட்மண்டு ஃஆல்லே (recognition of periodicity)
காலகட்டம்2449400.5
(1994 ஃபிப்ரவரி 17 )
சூரிய சேய்மை நிலை35.1 AU
(2023 திசம்பர் 9)[2]
சூரிய அண்மை நிலை 0.586 AU
முந்தைய கதிர்ச்சேய்மை: 1986 ஃபிப்ரவரி 9
அடுத்த கதிர்ச்சேய்மை: 2061 ஜூலை 28 ,[2]
அரைப்பேரச்சு 17.8 AU
மையத்தொலைத்தகவு 0.967
சுற்றுப்பாதை வேகம் 75.3 a[1]
சாய்வு 162.3°
சிறப்பியல்பு
பரிமாணங்கள் 15×8 கிமீ,.]]..[3] Its mass is relatively low (roughly 2.2 × 1014 kg"What Have We Learned About Halley's Comet?". Astronomical Society of the Pacific (No. 6 – Fall 1986). 1986. பார்க்கப்பட்ட நாள் 16 December 2008.</ref> 11 கிமீ (நிரல் விட்டம்)[1]
நிறை 2.2×1014 கிகி)[4]
அடர்த்தி 0.6]].[5] (மதிப்பீட்டு நெடுக்கம்:0.2 முதல் 1.5வரை g/cm3[6])
விடுபடு திசைவேகம்~0.002 km/s
விண்மீன்வழிச் சுற்றுக்காலம் 2.2 நாள் (52.8மணி) (?)[7]
எதிரொளி திறன்0.04[8]
தோற்ற ஒளிர்மை 28.2 (2003இல்)ref name="ESO2003">"New Image of Comet Halley in the Cold". European Southern Observatory. 1 September 2003. Archived from the original on 27 ஆகஸ்ட் 2009. பார்க்கப்பட்ட நாள் 22 February 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)</ref>

ஹேலியின் வால்வெள்ளி சூரியக் குடும்பத்துக்குள் வருவதை வானியலாளர்கள் கிமு240 முதலே கண்டிருக்கிறார்கள். சீனரும் பாபிலோனியரும் இடைக்கால ஐரோப்பியரும் இவ்வால்வெள்ளியின் தோற்றங்களைப் பற்றிப் பதிவு செய்துள்ளனர். என்றாலும் அவர்கள் காண்பது ஒரே வான்பொருள் என்பதை அறிந்திலர் என்பதே உண்மையாகும். இங்கிலாந்தின் வானியல் ஆய்வாளர் எட்மண்ட் ஹேலி என்பவர் இதனை முதன் முதலில் 1682 இல் கண்டறிந்தார். 1337 முதல் 1698 வரை தோன்றிய வால்மீன்களின் அட்டவணையை ஹேலி தயாரித்தார். 1531 இல் பெட்ரஸ் அப்பியானஸ் என்பவரினால் அவதானிக்கப்பட்ட வால்வெள்ளி, பின்னர் 1607 இல் கெப்லரினால் கண்டறியப்பட்ட வால்வெள்ளி, மற்றும் 1631 இல் தான் கண்டுபிடித்த வால்வெள்ளி மூன்றும் ஒன்றே என ஹேலி கருதினார். 1705 இல் அவர் வெளியிட்ட கட்டுரை ஒன்றில் 1682 இல் தோன்றிய வால்மீனே 76 ஆண்டுகளுக்குப் பின் 1758 இல் மீண்டும் தோன்றும் எனக் கூறினார். அதன்படி இவ்வால்வெள்ளி டிசம்பர் 25, 1758 இல் ஜொகான் பாலிட்ச் என்னும் ஜெர்மனியரால் கண்டுபிடிக்கப்பட்டது.

இது 1986இல் தன் பருவமுறையில் தோன்றியபோது, விண்கலத்தால் விரிவாக நோக்கப்பட்ட முதல் வால்வெள்ளி இதுவே. இது வால்வெள்ளியின் உட்கருப்பகுதிக் கட்டமைப்பு, வால்வெள்ளி இயங்கமைவு, அதன் வால் உருவாக்கம் பற்றிய முதல் நோக்கீட்டுத் தரவுகளை வெளிப்படுத்தியது.[12][13] வால்வெள்ளியின் கட்டமைப்பைப் பற்றிய நெடுநாளைய கருதுகோள்களை இவை உண்மையாக்கின. குறிப்பாக ஃபிரெட் விப்பிளின் "தூசுப் பனிபந்து" படிமத்தை உறுதிப்படுத்தின. இப்படிமம் ஃஆல்லே வால்வெள்ளி நீர், கரியமில வளிமம், அம்மோனியா, அண்ட்த் தூசுகள்]] போன்ற ஆவியாகிகளையும் ஆவியாகும் பனிக்கட்டிகளையும் கொண்டிருக்கும் எனச் சரியாகவே முன்கணித்தது. விண்கலத் தரவுகள் சீர்திருத்திய துல்லியமான வால்வெள்ளி பற்றிய எண்ணக்கருக்களை மீட்டக்கம் செய்தது; இப்போது வால்வெள்ளியின் மேற்பரப்பு தூசுகளாலும் ஒருசிறு பகுதியே பனிக்கட்டியாலும் ஆனது என்பது தெட்டத் தெளிவாகப் புரிந்துகொள்ளபட்டுள்ளது.

ஆண்டோர் எழுபதைந்தினில் ஒரு முறை மண்ணே அணுகும் வால்மீனைத் தினையின் மீது பனை நின்றாங்கு மணிச் சிறு மீன் மிசை வளர்வால் ஒளிவரக் கீழ்த்திசை வெள்ளியைக் கேண்மை கொண்டிலகு தூமகேதுச் சுடரே வாரய்! என்று 1910-இல் ஹேலியின் வால்வெள்ளியைப் பாடியிருக்கிறார் மகாகவி பாரதியார்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "JPL Small-Body Database Browser: 1P/Halley" (11 January 1994 last obs). Jet Propulsion Laboratory. பார்க்கப்பட்ட நாள் 13 October 2008.
  2. 2.0 2.1 Donald K. Yeomans. "Horizon Online Ephemeris System". California Institute of Technology, Jet Propulsion Laboratory. பார்க்கப்பட்ட நாள் 8 September 2006.
  3. "What Have We Learned About Halley's Comet?". Astronomical Society of the Pacific (No. 6 – Fall 1986). 1986. பார்க்கப்பட்ட நாள் 16 December 2008.
  4. G. Cevolani, G. Bortolotti and A. Hajduk (1987). "Halley, comet's mass loss and age". Il Nuovo Cimento C (Italian Physical Society) 10 (5): 587–591. doi:10.1007/BF02507255. Bibcode: 1987NCimC..10..587C. http://www.springerlink.com/content/0r3801302547v3x8/. [தொடர்பிழந்த இணைப்பு]
  5. R. Z. Sagdeev, P. E. Elyasberg, V. I. Moroz. (1988). "Is the nucleus of Comet Halley a low density body?". Nature 331 (6153): 240–242. doi:10.1038/331240a0. Bibcode: 1988Natur.331..240S. 
  6. S. J. Peale (1989). "On the density of Halley's comet". Icarus 82 (1): 36–49. doi:10.1016/0019-1035(89)90021-3. Bibcode: 1989Icar...82...36P. "densities obtained by this procedure are in reasonable agreement with intuitive expectations of densities near 1 g/cm3, the uncertainties in several parameters and assumptions expand the error bars so far as to make the constraints on the density uniformative ... suggestion that cometary nuclei tend to by very fluffy, ... should not yet be adopted as a paradigm of cometary physics.". 
  7. S. J. Peale, J. J. Lissauer (1989). "Rotation of Halley's Comet". Icarus 79 (2): 396–430. doi:10.1016/0019-1035(89)90085-7. Bibcode: 1989Icar...79..396P. 
  8. R. R. Britt (29 November 2001). "Comet Borrelly Puzzle: Darkest Object in the Solar System". Space.com. பார்க்கப்பட்ட நாள் 16 December 2008.
  9. G. W. Kronk. "1P/Halley". cometography.com. பார்க்கப்பட்ட நாள் 13 October 2008.
  10. M. Delehanty. "Comets, awesome celestial objects". AstronomyToday. பார்க்கப்பட்ட நாள் 15 March 2007.
  11. O. Ajiki and R. Baalke. "Orbit Diagram (Java) of 1P/Halley". Jet Propulsion Laboratory Solar System Dynamics. பார்க்கப்பட்ட நாள் 1 August 2008.
  12. D. A. Mendis (1988). "A Postencounter view of comets". Annual Review of Astronomy and Astrophysics 26 (1): 11–49. doi:10.1146/annurev.aa.26.090188.000303. Bibcode: 1988ARA&A..26...11M. 
  13. H. U. Keller, D. Britt, B. J. Buratti, N. Thomas (2005). "In Situ Observations of Cometary Nuclei". In M. Festou, H. U. Keller, and H. A. Weaver (ed.). Comets II (pdf). University of Arizona Press. pp. 211–222. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8165-2450-1.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)

நூல்தொகை

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹேலியின்_வால்வெள்ளி&oldid=3580899" இலிருந்து மீள்விக்கப்பட்டது