அபோன்சோ டி அல்புகெர்க்கே

அபோன்சோ டி அல்புகெர்கே அல்லது கோவாவின் பிரபு (ஆங்கிலம்Afonso de Albuquerque, 1st Duke of Goa; போர்த்துகீசியம்: Afonso de Albuquerque) என்பவா் போர்த்துகல் நாட்டின் அரசியலாளர்; பெரும்படைத் தலைவர்.[1][2][3]

அபோன்சோ டி அல்புகெர்கே
Afonso de Albuquerque
அபோன்சோ டி அல்புகெர்கே;
1545-ஆம் ஆண்டு படம்
கடல்படை தளபதி
போர்த்துகேய இந்தியா ஆளுநர்
பதவியில்
4 நவம்பர் 1509 – செப்டம்பர் 1515
ஆட்சியாளர்கள்மானுவல் I போர்ச்சுகல்
(Manuel I Portugal)
முன்னையவர்பிரான்சிசுகோ டி அல்மேடா
பின்னவர்லோபோ சோரெசு டி அல்பெர்கேரியா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
அபோன்சோ டி அல்புகெர்கே

அண். 1453
அல்காண்டிரா, போர்த்துகல்
இறப்பு16 டிசம்பர் 1515 (வயது அண். 62)
கோவா, போர்த்துகேய இந்தியா
தேசியம்போர்த்துக்கேயர்
பிள்ளைகள்பிராசு டி அல்புகெர்கே
பெற்றோர்s
 • கோன்சாலோ டி அல்புகெர்கே (தந்தை)
 • லியோனார் டி மெனெசு (தாய்)
வேலைகடல்படை தளபதி
போர்த்துகேய இந்தியா ஆளுநர்
கையெழுத்து

15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். போர்த்துகல் நாட்டின் கடல் தளபதிகள் ஒருவாராகச் சேவை செய்தவர். போர்த்துகேய இந்தியாவில் ஆளுநராகவும் பணிபுரிந்தவர்.

பொது

தொகு

போர்த்துகீசிய ஆசிய சாம்ராஜியத்தை நிறுவுவதன் மூலம் இசுலாமை எதிர்த்துப் போராடுவது; கிறித்துவத்தைப் பரப்புவது; மசாலா நறுமணப் பொருள் வர்த்தகத்தைப் பாதுகாப்பது; ஆகிய நோக்கங்களுகு முன்னோடியான ஒரு போர்த்துகீசியப் பெரும் திட்டத்தை முன்வைத்தவர்.[4]

போர்த்துகல் நாட்டின் மறுமலர்ச்சிக்காகப் பாரசீக வளைகுடாவைத் தாக்கச் சென்ற முதல் ஐரோப்பியர் அபோன்சோ ஆவார். அதுவே அவரின் அவருடைய சாதனைகளில் முதன்மையாகக் கருதப் படுகிறது. அவரின் முதல் பயணத்தில் செங்கடலில் ஐரோப்பியக் கப்பற்படையை வழிநடத்தினார்.[5] 

மலாக்காவில் போர்த்துகேய ஆளுமை

தொகு

இராணுவ, நிர்வாகப் பணிகளால்; ஓரே ஆண்டில் போர்த்துகல் நாட்டை தட்டி எழுப்பி பாதுகாத்தது; மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஓசியானியாவின் மசாலா நறுமணப் பொருள் பாதைகளைப் பாதுகாத்தது; போன்றவை அவரின் இதரச் சாதனைகளாகக் கருதப் படுகின்றன. இவரே கோவாவில் போச்சுகீசிய ஆட்சியை நிறுவியவர் ஆவார்.

1510-ஆம் ஆண்டில் கோவாவைக் கைப்பற்றியது; மற்றும் 1511-ஆம் ஆண்டில் மலாக்காவைக் கைப்பற்றியது உட்பட பல போர்களில் போர்த்துகீசியப் படைகளை வழிநடத்திச் சென்றுள்ளார். மலாக்காவில் போர்த்துகேய ஆளுமைக்கு வித்திட்டவர் எனும் பெருமையையும் பெறுகிறார்.[6]

இராணுவப் புத்திசாலித்தனம்

தொகு

இவர் நேரடியாக ஈடுபட்ட பல மோதல்கள் இந்தியப் பெருங்கடலிலும், பாரசீக வளைகுடா பகுதிகளிலும் நடைபெற்றன. கடல்சார் வர்த்தகப் பாதைகளின் கட்டுப்பாட்டிற்காக, இந்தியாவின் கடற்கரைகளிலும் மோதல்கள் நடந்தன.

போர்த்துகல் நாட்டின் வரலாற்றில், அந்த நாடு உலகளாவிய இராச்சியமாக மாறுவதற்கு அபோன்சோ டி அல்புகெர்க்கின் தொடக்கக் கால நடவடிக்கைகளே முக்கியமாகும். அவற்றில் அவரின் இராணுவப் புத்திசாலித்தனம் முதன்மை வகிக்கின்றது.[7]

அவரின் வாழ்க்கையின் கடைசி ஐந்து ஆண்டுகளில், நிர்வாகத் துறையில் அதிகமாய்க் கவனம் செலுத்தினார். அவர் போர்த்துகீசிய இந்தியாவின் இரண்டாவது ஆளுநராக செயல்பட்டது; இந்தியாவில் போர்த்துகீசிய ஆளுமைக்கு மிக முக்கியமானச் செயலாகக் கருதப் படுகிறது.[8][9]

ஐரோப்பிய வர்த்தகப் பாதை

தொகு

தாய்லாந்தில் அயூத்தியா இராச்சியம் (Ayutthaya Kingdom); மியான்மரில் அந்தாவதி இராச்சியம் (Hanthawaddy Kingdom); மற்றும் திமோர் மற்றும் மலுக்கு தீவுகள் (Moluccas) ஆகிய இடங்களில், தன் துணை அதிகாரிகளுடன் இணைந்து அரசதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள பல பயணங்களை மேற்கொண்டார்.[10]

மிங் அரசமரபு (Ming China) சார்ந்த சீனாவுடன் ஐரோப்பிய வர்த்தகத்திற்கான பாதையை அமைத்துக் கொடுத்தார். எத்தியோப்பியா நாட்டுடன் (Ethiopian Empire) அரசதந்திர உறவுகளை ஏற்படுத்தவும் உதவினார்.[11][12][13]

வாழ்க்கை வரலாறு

தொகு

மேற்கோள்

தொகு
 1. (Henry Morse Stephens 1897, p. 1)
 2. “ALBUQUERQUE, ALFONSO DE”, Vol.
 3. The Greenwood Dictionary of World History By John J. Butt, p. 10
 4. Southeast Asia: A Historical Encyclopedia, from Angkor Wat to East.
 5. A new collection of voyages and travels. (1711) [ed. by J. Stevens]. 2 vols.
 6. "Albuquerque, Alfonso De". Encyclopædia Iranica (8) 1. (15 December 1985). 823–824. 
 7. Erickson & Goldstein 2012, ப. 403
 8. Ricklefs 2002, ப. 26
 9. Chisholm 1911, ப. 526
 10. Vilhena, Maria da Conceição (2001). "O Preste João : mito, literatura e história". Arquipélago : História Revista da Universidade Dos Açores (Universidade dos Açores) 5: 14–15. பன்னாட்டுத் தர தொடர் எண்:0871-7664. https://repositorio.uac.pt/bitstream/10400.3/357/1/Maria_Vilhena_p627-649.pdf. 
 11. Hespeler-Boultbee 2011, ப. 186
 12. Clough 1994, ப. 85
 13. Couto & Loureiro 2008, ப. 219

நூல்கள்

தொகு

மேலும் காண்க

தொகு