1529
ஆண்டு
ஆண்டு 1529 (MDXXIX) பழைய யூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் துவங்கிய சாதாரண ஆண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1529 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1529 MDXXIX |
திருவள்ளுவர் ஆண்டு | 1560 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2282 |
அர்மீனிய நாட்காட்டி | 978 ԹՎ ՋՀԸ |
சீன நாட்காட்டி | 4225-4226 |
எபிரேய நாட்காட்டி | 5288-5289 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1584-1585 1451-1452 4630-4631 |
இரானிய நாட்காட்டி | 907-908 |
இசுலாமிய நாட்காட்டி | 935 – 936 |
சப்பானிய நாட்காட்டி | Kyōroku 2 (享禄2年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1779 |
யூலியன் நாட்காட்டி | 1529 MDXXIX |
கொரிய நாட்காட்டி | 3862 |
நிகழ்வுகள்
தொகு- ஏப்ரல் 22 - சரகோசாவில் இடம்பெற்ற ஒரு உடன்பாட்டின் படி கிழக்கு அரைக்கோளம் எசுப்பானியா மற்றும் போர்த்துக்கலுக்கிடையில் பிரிக்கப்பட்டது.
- மே 10 - துருக்கிய இராணுவம் முதலாம் சுலைமான் தலைமையில் அங்கேரியைக் கைப்பற்றும் நோக்கோடு சென்றது.
- சூலை 30 - ஆங்கிலேய வியர்வைக் காய்ச்சல் கொள்ளை நோய் ஐரோப்பாவில் மேலும் பரவியது.[1]
- செப்டம்பர் 23 - வியன்னா முதலாம் சுலைமான் தலைமையிலான உதுமானியரால் முற்றுகையிடப்பட்டது.
- அக்டோபர் 15 - காலநிலை மாற்றம் காரணமாக சுலைமான் வியன்னாவைக் கைவிட்டு வெளியேறினான்.
- அக்டோபர் 26 - ஐரோப்பாவில் ஆப்சுபர்குகளின் பரவலைத் தடுக்க முடியாமல் போன காரணத்தால் தாமஸ் வோல்சி இங்கிலாந்தில் தனது உயராட்சித் தலைவர் பதவியை இழந்தார். தாமஸ் மோர் புதிய தலைவரானார்.[2]
- நவம்பர் 4-டிசம்பர் 17 - இங்கிலாந்தின் சீர்திருத்த நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இடம்பெற்றது.[2]
- அயூத்தியாவின் மன்னராக நான்காம் பொரோம்ராஜாதிரா முடி சூடினார்.
- கியூபாவில் அம்மை நோய் தாக்கியதில் உள்ளூர்ப் பழங்குடியினர் பெரும்பாலானோர் இறந்தனர்.[3]
பிறப்புகள்
தொகுஇறப்புகள்
தொகு- கிருஷ்ணதேவராயன், விஜயநகரப் பேரரசர்
- தெனாலி ராமன், விஜயநகரப் பேரரசின் அவைப் புலவர்களில் ஒருவர் (பி. 1509)
மேற்கோள்கள்
தொகு- ↑ Christiansen, John (2009). "The English Sweat in Lübeck and North Germany, 1529". Medical History 53: 415–424. doi:10.1017/S0025727300004002.
- ↑ 2.0 2.1 Williams, Hywel (2005). Cassell's Chronology of World History. London: Weidenfeld & Nicolson. pp. 204–210. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-304-35730-8.
- ↑ J. N. Hays (2005). Epidemics and Pandemics: Their Impacts on Human History. p.82. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85109-658-2