பட்டினி என்பது உடலுக்கு ஆற்றல் வழங்கும் உணவு கிடைக்காமல் பசித்திருப்பதாகும். குறிப்பாக தொடர்ந்து பல நாட்களுக்கு அல்லது மாதங்களுக்கு இவ்வாறு இருப்பதைக் குறிக்கிறது. தொடர்ந்து ஒருவர் பட்டினி இருந்தால் அவரது உடல் உள்ளுறுப்புகள் நிரந்தரமாக செயலிழந்து, சாக நேரிடும். உலகில் பல மில்லியன் மக்கள் பட்டினியால் ஆண்டுதோறும் இறக்கின்றனர்.

பட்டினி
1960களில் நடைபெற்ற நைஜீரிய பியாபரன் சண்டைக் காலத்தில் பட்டனியால் அவதியுறும் சிறுமி
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புஅவசர மருத்துவம்
ஐ.சி.டி.-10T73.0
ஐ.சி.டி.-9994.2
நோய்களின் தரவுத்தளம்12415

இந்தியாவின் பட்டினி குறியீடு தொகு

அமெரிக்காவில் இருந்து செயல்படும் சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (ஐ.எஃப்.பி.ஆர்.ஐ.) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் படி , 78 நாடுகள் மட்டுமே இடம் பெற்றுள்ள சர்வதேசப் பட்டினி குறியீட்டில் இந்தியா 63-ஆவது இடத்தில் உள்ளது.மொத்த மக்கள் தொகையில், ஊட்டச்சத்துக் குறைபாடுள்ளவர்கள் விகிதம், ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகளில் உரிய உடல் எடை இல்லாதோர் விகிதம், ஐந்து வயதுக்குள்பட்டவர்களில் இறப்பு விகிதம் ஆகியவற்றைக் கொண்டு இந்தக் குறியீடு நிர்ணயிக்கப்படுகிறது.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "பட்டினி இல்லா பாரதம்". தினமணி. 02 சனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 13 சனவரி 2014. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டினி&oldid=2916814" இலிருந்து மீள்விக்கப்பட்டது