கோவானிப் பீர்லூயிச்சி தா பலஸ்த்ரீனா

சமயம் சார்ந்த இசை உலகின் இத்தாலிய மறுமலர்ச்சி இசைத் தொகுப்பாளர்

கியோவானி பீயர்லூயிகி தா பலசுத்ரீனா (Giovanni Pierluigi da Palestrina ) ஏறத்தாழ. 1525 முதல் 2 பிப்ரவரி 1594 [1] வரையிலான காலத்தில் வாழ்ந்த இவர், சமயம் சார்ந்த இசை உலகின் இத்தாலிய மறுமலர்ச்சி இசைத் தொகுப்பாளர் ஆவார். உரோமை மரபு இசைத்தொகுப்புக்கான 16ஆம் நூற்றாண்டு பிரதிநிதியாகவும் இவர் அறியப்படுகிறார் [2]. தேவாலயங்களில் இசைக்கப்படும் இசையின் வளர்ச்சியில் நிலையாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினார். மேலும், இவருடைய படைப்புகள் பலகுரலிசையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி ஓர் உச்சநிலையை எட்டியதாகவும் கருதப்படுகிறது [2].

கியோவானி பீயர்லூயிகி தா பலசுத்ரீனா
பின்னணித் தகவல்கள்
பிறப்பு1525
சொந்த ஊர்இத்தாலி இத்தாலி
இறப்பு1594
பணிகள்இசைத் தொகுப்பாளர்

வாழ்க்கை வரலாறு

தொகு

உரோம் நகரத்திற்கு அருகாமையில் இருந்த பலசுத்ரீனா என்ற ஊரில் பலசுத்ரீனா பிறந்தார். இந்த ஊர் அப்போது இத்தாலி நகரத்து திருத்தந்தையின் நேரடி ஆட்சியில் இருந்தது. சான்டா மரியா மாக்கியோர் பசிலிக்காவின் பாடகர் குழுவில் பங்கேற்பதற்காக இவர் உரோமுக்கு முதன்முதலில் 1537இல் வருகை புரிந்ததாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. ரோபின் மல்லபெர்ட், பிர்மின் லெபெல் ஆகியோருடன் கல்வி கற்றார். ராபின் மால்பர்டெர்ட் ஒரு மறுமலர்ச்சி பிரஞ்சு இசைக்கலைஞராக இருந்தவர். உரோமில் தன்வாழ்வின் பெரும்பகுதியை கழித்த இவர் ஒரு இசையமைப்பாளர் ஆகவும் அறியப்படுகிறார். பிர்மின் லெபெல் ஒரு பிரெஞ்சு நாட்டு இசைக்கலைஞர் ஆவார். மேலும் இவ்விருவரும் பலசுத்ரீனாவின் ஆசிரியராகவும் அறியப்படுகின்றனர்.

இத்தாலியில் இவ்வகை சேர்ந்திசைப் பாணியை முதன்மைப்படுத்தியவர்களில் முதன்மையானவர்கள் நெதர்லாந்தைச் சேர்ந்த இசையமைப்பாளர்கள் கியுல்லௌம் துஃபே மற்றும் யோசுகைன் தெப் பிரே ஆகிய இருவரும் ஆவர். தங்களது பணிக்காலத்தின் பெரும்பகுதியை இவர்கள் இத்தாலியில் கழித்தனர். சேர்ந்திசையில் இவர்களை ஒத்த திறனும் புகழும் பெற்ற இசைக்கலைஞர்களை இத்தாலி அதுவரை கண்டிருக்கவில்லை [2].

1544 முதல் 1551 வரையான காலப்பகுதியில் தனது சொந்த நகரத்தின் முக்கிய தேவாலயமான செயிண்ட் அக்பிட்டோவின் கதீட்ரலில் பியானோ இசைக்கருவியை இசைக்கும் அமைப்பாளராக இவர் இருந்தார். 1551 ஆம் ஆண்டில் மூன்றாம் போப் யூலியசு (முன்னதாக பாலசுதீன பேராயர்) புனித பேதுரு பேராலயத்தில் திருதந்தை பாடற்குழுவான கேப்பெல்லா கியூலியாவில் இசையமைப்பாளராக நியமிக்கப்பட்டார்[3]. இவரது அச்சிலேறிய முதல் இசைத்தொகுப்பான தேவாலயக் கூட்டிசையின் நூலை முன்னதாக பலசுத்ரீனாவின் பேராயராக இருந்த திருத்தந்தை மூன்றாம் யூலியசுக்கு அர்ப்பணித்தார். உள்நாட்டு இசையமைப்பாளர் ஒருவரால் பதிப்பிக்கப்பட்ட முதல் இசைத்தொகுப்பாக இது அமைந்தது. அக்காலத்தில் இத்தாலியில் இருந்த தேவ இசை இசையமைப்பாளர்களில் பெரும்பான்மையானவர்கள் கடல்மட்டத்திற்கு கீழுள்ள நாடுகளான பிரான்சு, போர்த்துக்கல் அல்லது எசுப்பானியாவைச் சேர்ந்தவர்களாக இருந்தனர் [4]. உண்மையில் இந்தப் புத்தகம் எசுப்பானிய இசையமைப்பாளர் கிறிசுடோபல் தெ மோரல்சின் வடிவமைப்பைப் பின்பற்றி அவரது புத்தகத்தின் வடிவமைப்பிலேயே இருந்தது.

 
பலசுத்ரீனா இசையமைப்பாளராகப் பணியாற்றிய ரோமிலுள்ள செயிண்ட் யான் லாட்ரென் ஆலயம்

யூலியன் திருக்கோயிலில் நியமிக்கப்பட்டதைப் போலவே பிற தேவாலயங்களிலும் மாதாகோவில்களிலும் அடுத்தப் பத்தாண்டுகள் பலசுத்ரீனா பணியாற்றினார். இவற்றில் குறிப்பிடத்தக்கனவாக புனித இலாத்தரன் யோவான் முதன்மைப் பேராலயம், (1555–1560) புனித மரியா பேராலயம் (1561–1566) போன்றவை விளங்கின. 1571ஆம் ஆண்டில் யூலியன் திருல்கோயிலுக்குத் திரும்பிய பலசுத்ரீனா புனித பேதுரு பேராலயத்தில் தம் எஞ்சிய நாட்களைக் கழித்தார். 1570கள் அவருடைய தனிப்பட்ட வாழ்வின் சோதனைக் காலமாக அமைந்தன. தமது சகோதரர், இரண்டு மகன்கள், மனைவி ஆகியோரை மூன்று தனித்தனியான பிளேக் கொள்ளைநோய்க்கு (முறையே 1572, 1575, மற்றும் 1580, ஆண்டுகளில்) பலி கொடுத்தார். இச்சோதனைக் காலத்தில் ஒரு பாதிரியாக மாறவும் திட்டமிட்டார். பலசுத்ரீனாவின் இசைத்தொகுப்புகள் கொண்டிருந்த இயல்பான உள்நோக்கங்கள் தெரியாத நிலையில் அவருடைய கருத்துக்களும் அவர் மீதான வதந்திகளும் பல நூற்றாண்டுகளாக கற்பனையாகவும் தவறான வரலாற்று உண்மையாகவும் கருதப்பட்டு வந்திருக்கின்றன. ஆனால் பின்னர் ஒரு செல்வச் செழிப்புள்ள விதவையை மறுமணம் புரிந்து கொடார். ஓர் இசைத்தொகுப்பாளருக்கு உரிய முழுமையான ஊதியத்தைப் பெறாமல் தவித்து வந்த இவருக்கு இதனால் போதுமான அளவுக்கு நிதி சுதந்திரம் கிடைத்தது. தாம் இறக்கும் வரை எவ்வித பணக்கவலையும் இன்றி ஏராளமான பாடல்களை தொகுத்தளித்தார்.

பலசுத்ரீனா 1594 ஆம் ஆண்டில் உரோமில் நுரையீரல் உறையழற்சி நோயால் பாதிக்கப்பட்டு இயற்கை எய்தினார். அக்காலத்து பழக்கப்படி இறந்த அதே நாளன்று எளிய கல்லறைப் பெட்டியில் பலசுத்ரீனா அடக்கம் செய்யப்பட்டார். பெட்டியின் மேல் பொருத்தப்பட்ட ஈயத்தாலான பட்டையில் என்னை விடுவித்தருளும் ஆண்டவரே என்ற பொருள் கொண்ட வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது. ஐந்து அங்கமுள்ள தெய்வீகப் பாடல் மூன்று பாடற்குழுக்களால் அங்கு பாடப்பட்டன [5]. பலசுதீனரின் இறுதி சடங்கு புனித பேதுருவிலேயே நடந்தது, அவர் பசிலிக்காவின் மண்ணிலேயே அடக்கம் செய்யப்பட்டார். அவரது கல்லறை பின்னர் புதிய கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டு மூடப்பட்டது. பின்னாளில் இத்தளத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் தோல்வியடைந்தன.

105 வெகுசன வழிபாட்டுப் பாடல்கள், 68 புனிதப் பாடல்கள், 140 காதல் பாடல்கள் மற்றும் 300 க்கும் மேற்பட்ட மேற்கத்திய சேர்ந்திசைப் பாடல்கள் உள்ளடக்கிய நூற்றுக்கணக்கான பாடல் படைப்புகளை பலசுத்ரீனா உருவாக்கி விட்டுச் சென்றுள்ளார். இவற்றுடன் கூடுதலாக, குறைந்த பட்சம் 72 இறைவாழ்த்துப் பாசுரங்கள், பாடல்கள், 35 விவிலியப் புகழ் பாடல்கள், 11 இறைவாழ்த்துப் பாசுரத் தொகுதிகள், மற்றும் நான்கு அல்லது ஐந்து தொகுதி ஒப்பாரிப் பாடல்கள் முதலியனவும் இவர் வழங்கிய பிற கொடைகளாகும்[2]. பலசுத்ரீனாவின் விவிலியப் புகழ் பாடல்களில் இருந்து எடுக்கப்பட்ட குளோரி மெல்லிசை இன்று உயிர்த்தெழுதல் பாடலில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது [6].

காதல் பாடல்களுடனான இவரது அணுகுமுறை ஓரளவு புதிரானதாகவே இருந்தது. பாடல்களின் பாடல் என்ற மேற்கத்திய சேர்ந்திசைப் பாடல் தொகுப்பின் முன்னுரையில் மிக உயர்ந்த பொருளை தரக்குறைவாக பாடல்கலில் எழுதுவதை நிறுத்திவிடுவதாகக் குறிப்பிட்டார். இரண்டு வருடங்கள் கழித்து இவர் தனது மதச்சார்பற்ற இரண்டாம் புத்தகத்தை வெளியிட்டார். 1586 மற்றும் 1555 ஆம் ஆண்டுகளில் மொத்தம் இரண்டு தொகுப்புகளை மேற்கண்ட தரக்குறைவு பாடல் தொகுப்புகளாக அவர் வெளியிட்டார் அவற்றில் ஒன்று பக்தி பாடல்களாகவும் மற்றொன்று சேகரிப்பு சீர்திருத்த கருத்துக்களை கொண்டதாகவும் இருந்தன[2]. பலசுத்ரீனாவின் குழுவழிபாட்டுப் பாடல்கள் அதன் எளிமைத்தன்மை காரணமாக காலப்போக்கில் மக்களிடையே மிகுந்த புகழை அடைந்தன. பலசுத்ரீனாவின் சிறப்பியல்பு பாணியிலான இசைத்தொகுப்பு 1560 களில் தொடங்கி அவரது வாழ்க்கை முடிவடையும் வரை தொடர்ந்து இருந்தது.

பலசுத்ரீனின் வெகுசன வழிபாட்டுப் பாடல்கள் காலப்போக்கில் அவரது இசைத்தொகுப்பு பாணியில் ஏற்பட்ட மாற்றங்களைக் காட்டுகின்றன [2]. யோகான் செபாசுதியன் பாக் என்ற செருமானிய இசையமைப்பாளரை பலசுத்ரீனின் வெகுசன வழிபாட்டுப் பாடல்கள் பெரிதும் கவர்ந்தன. இவற்றை ஆய்வு செய்து யோகான் தான் எழுதிய தன்னுடைய இசைத்தொகுப்புகளில் பயன்படுத்தினார்[7].. 1554 மற்றும் 1601 க்கு இடையில் அச்சிடப்பட்ட அவரது பதிமூன்று இசைதொகுதிகளில் இவை பெரிதும் காணப்படுகின்றன கடைசி ஏழு தொகுதிகள் அவரது இறப்புக்கு பிறகு வெளியிடப்பட்டன [2][8].

இவரது மிக முக்கியமான படைப்புகளில் ஒன்றான மிசா பாபே மார்செல்லியில் கிறித்துவ உலகம் முழுமைக்குமான வரலாற்றுடன் தொடர்புடைய தவறான தகவல்கள் உள்ளதாகக் கருதப்படுகிறது.

பலஸ்த்ரீனாவின் பதிவு செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியின் ஆய்வு மாதிரிகளை கொண்டு இரண்டு விதமான விரிவான பதிப்புகள் உருவாக்கப்பட்டன. அவை,

 • இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் பிரான்சு நாட்டின் சேவியர் ஏபெர்ல் மற்றும் பெராட்டி சிகாலிரா மூலம், வெளியிடப்பட்ட 34 தொகுதிகள் கொண்ட பதிப்பு
 • 1862 மற்றும் 1894 இடையே லேய்ப்கிக் செரும்னியில் பிரிக்கொப் மற்றும் அர்டேல் ஆகியோரால் வெளியிடப்பட்ட ஒரு 33 தொகுதிகள் கொண்ட பதிப்பு.

பலசுத்ரீனா இசை வடிவம்

தொகு

பலசுத்ரீனாவின் பல்வேறு விதமான இசைக்குரிய அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்படுவது பல்திறன் இசையோட்டமும் அதற்கிடையிலான துடிப்புகளில் காணப்படும் நெகிழ்வுத் தன்மையும் ஆகும். இப்பாணியிலான இசைத்தொகுப்பில் ஒரு மென்மையான மற்றும் மெய்நிகர் வகையிலான பலகுரலிசை வடிவம் உருவாக்கியது, இது சேர்ந்திசை வடிவத்தின் மறுமலர்ச்சி இசையாகக் கருதப்படுகிறது, ஐரோப்பாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக பலசுத்ரீனாவை கருதவும் வைத்ததது. தற்காலத்தில் பல கல்லூரிகளில் பலசுத்ரீனாவின் இசை வடிவங்கள் மறுமலர்ச்சியை உண்டாக்கி வருகின்றன. பலசுத்ரீனா பின்வரும் அடிப்படை வழிமுறைகளை உருவாக்கி அதன்படி இசையமைத்தார் என்று ஃபக்சு என்ற அறிஞர் கருத்துத் தெரிவிக்கிறார்.

 • இசையின் ஓட்டம் பலதிறன் ஆற்றல் கொண்டதாக இருக்க வேண்டும். மாற்றமின்றியோ அல்லது நெகிழ்வுத் தன்மை இன்றியோ இருக்கக்கூடாது.
 • மெல்லிசையின் இசைகுறிப்புகளுக்கு இடையே சில துள்ளல்கள் அமைக்கப்படவேண்டும்.
 • ஒரு துள்ளல் உருவாக்கப்பட்டால் உடனடியாக எதிர் திசையில் படிப்படியான இயக்கத்தால் அத்துள்ளல் சரிசெய்யப்பட வேண்டும்.
 • பலவீனமான துடிப்புகளுக்கு இடையே தோன்றும் குறைவை உடனே ஒரு வலிமையான துடிப்பு மூலம் சரி செய்யப்பட வேண்டும்.

புகழ்

தொகு

பலசுத்ரீனா வாழ்ந்த காலத்தில் புகழுடன் வாழ்ந்தார். இறப்புக்குப் பிறகு அவரது புகழ் மேலும் அதிகரித்தது. கியோவானி மரியா நானினோ, ரக்கியரோ கியோவானில்லி, ஆர்க்காங்கெலோ கிரைவில்லி, டீஃபிலோ கெர்காரி, பிரான்செசுகோ சோரியானோ, கிரிகோரியோ அலெக்ரி போன்ற பலசுத்ரீனாவின் மாணவர்களால் 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த உரோமின் பழமையான இசையான பிரைமா பிராட்டிக்கா என்ற இசைவடிவம் பலசுத்ரீனாவின் பாணியில் தொடர்ந்து எழுதப்பட்டது. சல்வடோர் சாகோ மற்றும் கியோவானி டிராகோனி போன்றவர்களும் பலசுத்ரீனாவின் மாணவர்களாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. கியோவானி டிராகோனி பின்னர் லேட்டரானோவிலுள்ள எசு.கியோவானியைச் சேர்ந்த தேவாலயத்தில் சேர்ந்திசைக் குழுவின் தலைவரானார் [5]. 1750 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலும் கூட பலசுத்ரீனாவின் பாணியானது மேற்கத்திய சேர்ந்திசைப் பாடல் பாணியில் பணிபுரியும் இசையமைப்பாளர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். பிரான்செசுக்கோ பார்சண்டியின் படைப்புகளில் இதைக் காணலாம்.

19 ஆம் நூற்றாண்டில் கியூசெப் பெய்னி பலசுத்ரீனா இசையின் மீது மேலும் பல ஆய்வுகளை மேற்கொண்டார்.1828 ஆம் ஆண்டில் இவர் வெளியிட்ட இசைக் கட்டுரை மீண்டும் பலசுத்ரீனாவை பிரபலப்படுத்தியது. 19 ஆம் நூற்றாண்டிலும் இசை கதாநாயகன் பலசுத்ரீனாவே என்று இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது பேராலய இசையின் மீட்பர் பலசுத்ரீனா என்பதாக இவருக்கு மேலும் மேலும் புகழைச் சேர்த்தது. ஆன்சு பிப்ட்சினரின் படைப்பின் போக்கில் இந்த உச்சநிலை வெளிப்படுகிறது [8]. சமீபத்தில் பல்வேறு மறுமலர்ச்சி இசையமைப்பாளர்கள் இணைந்து, இதுவரை அறியப்படாத அல்லது மறக்கப்பட்ட இசைத்தொகுப்பை கண்டுபிடித்து வெளியிட்டனர். இந்த வரலாற்று உள்ளடக்கத்தில் பலசுத்ரீனா இடம்பெற்றுள்ளார்.

திரைப்படம்

தொகு

2009 ஆம் ஆண்டில் இசையமைப்பாளர் பலசுத்ரீனா பற்றிய ஒரு திரைப்படத்தை செருமானியத் தொலைக்காட்சி ஒன்று தயாரித்தது. இசையின் இளவரசர் பலசுத்ரீனா என்பது அத்திரைப்படத்தின் பெயராகும். யார்சு பிரிண்ட்ரூப் இப்படத்தை இயக்கினார் [9].

மேற்கோள்கள்

தொகு
 1. ஓர் மரண அஞ்சலி இவரது அகவையை 68 எனக் குறிப்பிடுகிறது; இதனால் குரோவ் இவரது பிறந்த நாளை " 3 பெப்ரவரி 1525 அல்லது 2 பிப்ரவரி 1526 ஆம் ஆண்டுக்குள்ளாக இருக்க கூடிய வாய்ப்புள்ளதாக" குறிப்பிடுகிறார். (The New Grove Dictionary of Music and Musicians, 2nd ed., s.v. "Palestrina, Giovanni Pierluigi da" by Lewis Lockwood, Noel O'Regan, and Jessie Ann Owens).
 2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 Jerome Roche, Palestrina (Oxford Studies of Composers, 7; New York: Oxford University Press, 1971), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-314117-5.
 3. Lino Bianchi, Giovanni Pierluigi da Palestrina
 4. Manuel Mendes, António Carreira, Duarte Lobo, Filipe de Magalhães, Fr. Manuel Cardoso, João Lourenço and Pero do Porto, among many others.
 5. 5.0 5.1 Zoe Kendrick Pyne, Giovanni Pierluigi di Palestrina: His Life and Times (London: Bodley Head, 1922).
 6. Brink, Emily; Polman, Bert, eds. (1998). The Psalter Hymnal Handbook. பார்க்கப்பட்ட நாள் 26 January 2015.
 7. Christoph Wolff, Der Stile Antico in der Musik Johann Sebastian Bachs: Studien zu Bachs Spätwerk (Wiesbaden: Franz Steiner Verlag, 1968), pp. 224–225.
 8. 8.0 8.1 James Garrat, Palestrina and the German Romantic Imagination (New York: Cambridge University Press, 2002).
 9. Internet Movie Database

புற இணைப்புகள்

தொகு