அரையாப்பு பிளேக்கு

அரையாப்பு பிளேக் (Bubonic plague) விலங்குவழி தொற்று நோயாகும். சிறிய கொறிணிகளில் வாழும் தெள்ளு (பூச்சி)கள் மூலமாக இது பரவுகிறது. எர்சினியா பெசுட்டிசு என்ற கோலுயிரி ஏற்படுத்தும் மூன்று வகை பிளேக் நோய்களில் இதுவும் ஒன்றாகும். நோய்க்கான சிகிச்சையை உடனடியாக எடுக்காத பட்சத்தில் 24 மணி நேரத்தில் நோய் பாதித்தவருக்கு மரணம் ஏற்படும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நோய் வந்து இறந்த விலங்குகளில் இருந்து வெளியாகும் திரவங்கள் வாயிலாகவும் யெர்சினியா என்ற பாக்டீரியா மூலமாகவும் இந்த நோய் பரவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரையாப்பு பிளேக்
அரையாப்பு பிளேக்கினால் பாதிக்கப்பட்ட நபரின் மேல்தொடைப் பகுதியில் ஏற்பட்டுள்ள அரையாப்பு. பிளேக் நோயாளிகளுக்கு வீங்கிய நிணநீர்க்கணு (கட்டிகள்) பெரும்பாலும் கழுத்து, கையக்குள் மற்றும் கவட்டை (இடுக்கு) பகுதிகளில் ஏற்படுகின்றன.
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புinfectious diseases
ஐ.சி.டி.-10A20.0
ஐ.சி.டி.-9020.0
நோய்களின் தரவுத்தளம்14226
மெரிசின்பிளசு000596

ஆங்கில கலைச்சொல்லான புபோனிக் பிளேக் என்பது "கவட்டை" என்று பொருள்படும் கிரேக்க மொழி சொல்லான βουβών இலிருந்து உருவாகியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவரின் நிணநீர்க்கணுகள் வீங்குகின்றன. இந்த கட்டிகள் குறிப்பாக கையக்குள், கவட்டை போன்ற இடுக்குகளில் தோன்றுகின்றன. அரையாப்பு பிளேக் முன்பு பிளேக் நோயுடன் ஒன்றாக கருதப்பட்டது; மற்ற பிளேக் வகைகள் குறித்து அறிந்த பிறகு இது குறிப்பாக தோல் வழியே உட்பகும் தொற்றைக் குறிக்கிறது; உடலினுள் நிணநீர் பிணையம் வழியாக பரவுகின்ற இந்நோய் தெள்ளுப்பூச்சிகள் மூலமாக ஏற்படுகின்றன.

ஐரோப்பாவின் நடுக் காலத்தில் பல்லாயிரக் கணக்கான மனிதர்களைக் கொன்ற கறுப்புச் சாவுக்கு அரையாப்பு பிளேக் தான் காரணம் என நம்பப்படுகின்றது.[1]

இருமல், காய்ச்சல், மற்றும் தோலில் கருப்பு புள்ளிகள் இந்த நோயின் உணர்குறிகள் ஆகும்.

சீனாவின் மங்கோலியா கோவ்ட் தன்னாட்சி பிரதேசத்திலுள்ள பயன்னுர் நகரில் இந்நோய்  27 வயது நபர் ஒருவருக்கும் அவரது சகோதரருக்கும் (17) ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இருவரும் மர்மோட் எனப்படும் காட்டு எலி போன்றவற்றின் இறைச்சியை சாப்பிட்டதால் நோய் ஆளாகி உள்ளதாக தெரிகிறது.[2]

மேற்சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரையாப்பு_பிளேக்கு&oldid=3576472" இருந்து மீள்விக்கப்பட்டது