கொள்ளைநோய்

கொள்ளைநோய் (Epidemic) என்பது கொடுக்கப்பட்ட இடத்தில், கொடுக்கப்பட்ட மனித சனத்தொகையில், குறிப்பிட்ட ஒரு நோயானது புதிதாகப் பரவ ஆரம்பிக்கையில், அண்மைய அனுபவங்களின்படி எதிர்பார்க்கும் அளவைவிட எல்லைமீறிப் போவதாகும். நோயானது இப்படி திடீரெனப் பரவ ஆரம்பித்து, விரைவாக சனத்தொகையில் பரவும்[1]:354[2].

குறிப்பிட்ட நோயானது நோய்த்தொற்று விரைவாகப் பரவுவதால், ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கோ, அல்லது ஒரு கண்டத்தில் இருந்து இன்னொரு கண்டத்துக்கோ பரவி, பெரிய இடத்தில் மக்களைத் தாக்கும்போது, அது உலகம்பரவுநோய் என அழைக்கப்படும்[1]:55. நிகழ்வு வீதத்துக்கு ஒரு அடிக்கோடு கவனத்தில் கொள்ளப்பட்டு, அந்த அளவைவிட அதிகரிக்கும்போதே அது கொள்ளைநோயாக அறிவிக்கப்படும். தடிமன் போன்ற பொதுவான நோய்களுக்கு இவ்வாறு அறிவிக்கப்படுவதில்லை. ஜூன் 11 அன்று உலக சுகாதார அமைப்பு பன்றிக் காய்ச்சலை கொள்ளை நோயாக அறிவித்தது.[3]

நோய்க்கான காரணியில் அதிகரிப்பு ஏற்படும்போது இவ்வாறு நிகழலாம். அதற்கான காரணங்கள்[1]:55:

  • நோய்க்காரணியின் வீரியம் அதிகரித்தல்
  • புதிய அமைப்பு சூழலில் அறிமுகமாதல்
  • நோய் வழங்கிகளின் நோயை ஏற்கும் திறன் அதிகரித்தல்
  • நோய் வழங்கியானது நோய்க்காரணிக்கு இலகுவாக வெளிப்படுத்தப்படல்

கொள்ளை நோயானது கட்டாயமாக தொற்றுநோயாக இருக்க வேண்டிய அவசியமில்லை.[2][4][5]உடற் பருமன்[5] இவ்வாறு கொள்ளைநோய் என அறிமுகப்பட்டது.

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொள்ளைநோய்&oldid=3241998" இருந்து மீள்விக்கப்பட்டது