வால்டெமர் ஆஃப்கின்

உருசிய யூத நுண்ணுயிரியலாளர்

வால்டெமர் மோர்டெகய் உல்ஃப் ஆஃப்கின், (Waldemar Mordecai Wolff Haffkine, உருசியம்: Мордехай-Вольф Хавкин; அல்லது பிரெஞ்சு மொழி: Mardochée-Woldemar Khawkine) (15 மார்ச்சு 1860, ஒடெசா,[1] உருசியப் பேரரசு - 26 அக்டோபர் 1930, லோசான், சுவிட்சர்லாந்து) உருசியப் பேரரசின் யூத நுண்ணியிரியலாளர் ஆவார். "உருசிய ஆர்த்தோடாக்சிக்கு மாற மறுத்ததால்" உருசியாவில் பணியாற்ற முடியாத சூழல் ஏற்பட்டது.[2] அதனால் உருசியாவிலிருந்து குடிபெயர்ந்து பாரிசிலுள்ள பாசுட்டர் கழகத்தில் சேர்ந்தார். இங்கு வாந்திபேதிக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கி அதனை இந்தியாவில் வெற்றிகரமாக சோதித்தார். வாந்திபேதிக்கும் அரையாப்பு பிளேக்குக்கும் தடுப்பூசியைக் கண்டறிந்து பயன்படுத்திய முதல் நுண்ணுயிரியியலாளராக ஏற்கப்பட்டுள்ளார். இந்தத் தடுப்பூசிகளை தம் மீதே சோதித்து பார்த்தார். ஜோசப் லிஸ்டர் பிரபு இவரை "மனிதகுலக் காப்பாளர்" என்றார்.

வால்டெமர் ஆஃப்கின்
வால்டெமர் ஆஃப்கின்
பிறப்பு15 மார்ச்சு 1860
ஒடெசா, உருசியப் பேரரசு
இறப்பு26 அக்டோபர் 1930
லோசான், சுவிட்சர்லாந்து
துறைநுண்ணுயிரியலாளர், புரோட்டோசூவாலாஜி
பணியிடங்கள்இம்பீரியல் நோவோரோசியா பல்கலைக்கழகம், ஜெனீவா பல்கலைக்கழகம், பாசுட்டர் கழகம்
கல்வி கற்ற இடங்கள்இம்பீரியல் நோவோரோசியா பல்கலைக்கழகம்
அறியப்படுவதுவாந்திபேதிக்கும் அரையாப்பு பிளேக்குக்கும் தடுப்பூசிகள்
Author abbrev. (botany)காக்கின்

1987இல் விக்டோரியா அரசியாரின் வைரவிழா ஆண்டில் இவருக்கு ஆண்டகை விருது (CIE) வழங்கப்பட்டது.

மேற்சான்றுகள் தொகு

  1. Waldemar Haffkine: Pioneer of Cholera Vaccine. EDYTHE LUTZKERAND and CAROL JOCHNOWITZ. American Society for Microbiology பரணிடப்பட்டது 2012-02-22 at the வந்தவழி இயந்திரம்
  2. Rats, fleas and men; Anthony Daniels on how the secret of bubonic plague was found. by Anthony Daniels. Sunday Telegraph (London). p. 14. August 25, 2002.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வால்டெமர்_ஆஃப்கின்&oldid=3455962" இருந்து மீள்விக்கப்பட்டது