ஒடெசா (Odessa, உக்ரைனியன்: Оде́са [ɔˈdɛsɐ]; உருசியம்: Оде́сса [ɐˈdʲesə]) உக்ரைனின் மூன்றாவது பெரிய நகரமாகும். இது ஒடேசா மாகாணத்தின் தலைநகரம் ஆகும். மேலும் இது உக்ரைனின் முதன்மையான சுற்றுலாவிடமாகவும் கடல் துறையாகவும் போக்குவரத்து மையமாகவும் விளங்குகின்றது. கருங்கடலின் வடமேற்கு கடலோரத்தில் அமைந்துள்ளது. ஒடெசா ஒப்லாஸ்த்தின் நிர்வாக மையமாகவும் பலவின பண்பாட்டு மையமாகவும் விளங்குகின்றது. ஒடெசா சிலநேரங்களில் "கருங்கடலின் முத்து",[3] எனவும் "தெற்குத் தலையகர்" ( உருசியப் பேரரசு மற்றும் சோவியத் ஒன்றியம் ஆட்சியில்) எனவும் "தெற்கு பால்மைரா"[4]எனவும் குறிப்பிடப்படுகின்றது.

ஒடெசா
இடச்சுற்றாக: ரிசலியூ சிற்றரசருக்கான நினைவிடம், வொரோன்சோவ் கலங்கரைவிளக்கம், நகரப் பூங்கா, ஓப்பரா & பாலே அரங்கம், பொடெம்கின் படிகள், ரிசலியூ சதுக்கம்
இடச்சுற்றாக: ரிசலியூ சிற்றரசருக்கான நினைவிடம், வொரோன்சோவ் கலங்கரைவிளக்கம், நகரப் பூங்கா, ஓப்பரா & பாலே அரங்கம், பொடெம்கின் படிகள், ரிசலியூ சதுக்கம்
ஒடெசா-இன் கொடி
கொடி
ஒடெசா-இன் சின்னம்
சின்னம்
Official logo of ஒடெசா
Logo
ஒடெசா is located in Odessa Oblast
ஒடெசா
ஒடெசா
உக்ரைனில் அமைவிடம்
ஒடெசா is located in உக்ரைன்
ஒடெசா
ஒடெசா
ஒடெசா (உக்ரைன்)
ஆள்கூறுகள்: 46°29′8.6″N 30°44′36.4″E / 46.485722°N 30.743444°E / 46.485722; 30.743444
நாடு உக்ரைன்
மாகாணம்ஒடெசா மாகாணம்
நகராட்சிஒடெசா நகராட்சி
துறைமுகம் நிறுவப்பட்டதுசெப்டம்பர் 2, 1794
அரசு
 • நகரத் தந்தைகென்னடி துருக்கனாவ்[1]
பரப்பளவு
 • மொத்தம்236.9 km2 (91.5 sq mi)
ஏற்றம்
40 m (130 ft)
உயர் புள்ளி
65 m (213 ft)
தாழ் புள்ளி
−4.2 m (−13.8 ft)
மக்கள்தொகை
 (2015)
 • மொத்தம்10,16,515
 • அடர்த்தி4,300/km2 (11,000/sq mi)
இனங்கள்ஆங்கில மொழி: Odessite
உக்ரைனியன்: одесит, одеситка
உருசியம்: одессит, одесситка
நேர வலயம்ஒசநே+2 (EET)
 • கோடை (பசேநே)ஒசநே+3 (EEST)
அஞ்சல் குறியீடு
65000–65480
இடக் குறியீடு+380 48
இணையதளம்www.omr.gov.ua/en/
12001இல் பெருநகரப் பகுதி மக்கள்தொகை
ஐ நா சபை 2005-இல் வெளியிட்ட உக்ரைன் நாட்டின் வரைபடம், 784.93 மைல்கள் (1,263.22 km) நீளம் மற்றும் 346.4 மைல்கள் (557.5 km) அகலம் [2]

ஒடெசா நிறுவப்படும் முன்னர் இந்தவிடத்தில் தொன்மை கிரேக்க குடியிருப்பு இருந்தது. பின்னர் தாதர்கள் குடியிருப்பும், கிரீமியாவின் கான் 1440இல் நிறுவிய "அசிபே" நகரும் இருந்தன.[5] லித்துவிய சிற்றரசர் ஆட்சியில் சிறிதுகாலம் இருந்தபின்னர் அசிபேயும் அதன் சுற்றுவட்டாரங்களும் 1529இல் உதுமானியர்களின் கீழ் இருந்தது. 1792இல் உதுமானியப் பேரரசின் தோல்விக்குப் பிறகு உருசியா இதைக் கைப்பற்றியது. 1794இல் உருசியப் பேரரசின் மகா கத்தரீன் அரசாணைப்படி ஒடெசா முறையாக உருவாக்கப்பட்டது. 1819 முதல் 1858 வரை ஒடெசா கட்டற்றத் துறைமுகமாக இருந்தது. சோவியத் காலத்தில் சோவியத் ஒன்றியத்தின் முதன்மையான வணிகத் துறைமுகமாக விளங்கியது. சோவியத் கடற்படைத் தளமும் நிறுவப்பட்டது. சனவரி 1, 2000இல் ஒடெசா வணிகத் துறைமுகம் 25 ஆண்டுகளுக்கு கட்டற்றத் துறைமுகமாகவும் கட்டற்ற பொருளியல் வலயமாகவும் அறிவிக்கப்பட்டது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Incumbent Odesa Mayor Trukhanov declared winner in Sunday mayoral election". interfax.com.ua.
  2. "Where is Ukraine in the World?", World Population Review. Accessed 1 March 2022.
  3. "Who's Behind A String Of Bombings In Ukraine's Black Sea 'Pearl'?". NPR. 2015. பார்க்கப்பட்ட நாள் 7 July 2016.
  4. Tell about Ukraine. Odessa Oblast. 24 Kanal (YouTube).
  5. Pultar, Gonul. Imagined Identities: Identity Formation in the Age of Globalization, p. 355, கூகுள் புத்தகங்களில்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒடெசா&oldid=3842855" இலிருந்து மீள்விக்கப்பட்டது