ஒடெசா மாகாணம்

ஒடேசா மாகாணம் (Odessa Oblast), உக்ரைன் நாட்டின் தென்மேற்கில் கருங்கடலை ஒட்டி அமைந்த மாகாணம் ஆகும். இதன் தலைநகரம் ஒடெசா நகரம் ஆகும். இம்மாகாணத்தின் கருங்கடல் கடற்கரையில் 8 துறைமுகங்கள் உள்ளது. இம்மாகாணத்தில் 80,000 ha (200,000 ஏக்கர்கள்) பரப்பளவில் ஒயின் தயாரிக்கப்படும் திராட்ச்சைப் பழத்தோட்டங்களும், ஐந்து பெரிய ஏரிகளும் உள்ள்து.

ஒடெசா மாகாணம்
Одеська область
மாகாணம்
ஒடேஸ்கா மாகாணம் [1]
கொடி
கொடி
சின்னம்
சின்னம்
ஆள்கூறுகள்: 47°00′N 30°00′E / 47.000°N 30.000°E / 47.000; 30.000
நாடுஉக்ரைன்
தலைநகரம்ஒடெசா
அரசு
 • ஆளுநர்மாக்சிம் மர்சென்கோ[2]
 • ஒடெசா மாகாணக் குழு84 உறுப்பினர்கள்
 • தலைவர்செர்கி பாரசென்கோ (பெட்ரே போரோசென்கோ)
பரப்பளவு
 • மொத்தம்33,314 km2 (12,863 sq mi)
 • பரப்பளவு தரவரிசைRanked 1st
மக்கள்தொகை
 (2021)
 • மொத்தம் 23,68,107
 • தரவரிசைRanked 6
நேர வலயம்ஒசநே+2 (கிழக்கத்திய ஐரோப்பிய நேரம்)
 • கோடை (பசேநே)ஒசநே+3 (கிழக்கத்திய ஐரோப்பிய நேரம்)
அஞ்சல் குறியீடு எண்கள்
65000-68999
பிராந்திய குறியீடு+380-48
ஐஎசுஓ 3166 குறியீடுISO 3166-2:UA
மாவட்டங்கள்26
நகரங்கள் (மொத்தம்)19
• மண்டல நகரங்கள்7
நகர்புற குடியிருப்புகள்33
கிராமங்கள்1138
FIPS 10-4UP17
இணையதளம்www.oda.odessa.gov.ua

அமைவிடம்

தொகு

33,314 சதுர கிலோமீட்டர்கள் (12,863 sq mi) பரப்பளவு கொண்ட புல்வெளிகள் கொண்ட ஒடேசா மாகாணத்தின் தெற்கில் டான்யூப் ஆறு பாய்கிறது. தினிஸ்டர் ஆற்றின் முகத்துவாரம் ஒடேசா மாகாணத்தின் தெற்கில், கடங்கடலை ஒட்டியுள்ளது.

இதன் கிழக்கில் மைக்கோலைவ் மாநிலம், தெற்கில் கருங்கடல் மற்றும் மேற்கில் மால்டோவா நாடும் அமைந்துள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2021-ஆம் ஆண்டில் ஒடேசா மாகாணத்தின் மக்கள் தொகை 23,68,107 ஆகும். அதில் 43% மக்கள் ஒடெசா போன்ற நகரங்களில் வாழ்கின்றனர் இம்மாகாண்த்தின் பெரும்பான்மையான மக்கள் உக்ரைனிய மக்கள் ஆவர். மேலும் பல்கேரியர்கள் 6.1% மற்றும் ரோமானியர்கள் 5.0% வாழ்கின்றனர்.[3] ஒடெசா நகரத்தில் யூதர்கள் மற்றும் கிரேக்கர்கள் சிறிதளவு வாழ்கின்றனர். இம்மாகாணத்தில் கிழக்கு மரபுவழி திருச்சபையினர் 84%, சமயமற்றோர் 8%, கிறித்தவர் அல்லாதோர் 6% வாழ்கின்றனர்.

மாகாண நிர்வாகம்

தொகு

ஒடேசா மாகாணம் 26 மாவட்டங்களும், 7 நகராட்சிகளும், 1,138 கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Syvak, Nina; Ponomarenko, Valerii; Khodzinska, Olha; Lakeichuk, Iryna (2011). Veklych, Lesia (ed.). Toponymic Guidelines for Map and Other Editors for International Use (PDF). scientific consultant Iryna Rudenko; reviewed by Nataliia Kizilowa; translated by Olha Khodzinska. Kyiv: DerzhHeoKadastr and Kartographia. p. 20. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-966-475-839-7. பார்க்கப்பட்ட நாள் 2020-10-06. {{cite book}}: |website= ignored (help)
  2. Zelensky replaces heads of Odesa, Cherkasy regional state administrations, Ukrinform (2 March 2022)
  3. Results of the 2001 All-Ukrainian population census for the Odesa oblast

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Odessa Oblast
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒடெசா_மாகாணம்&oldid=3842758" இலிருந்து மீள்விக்கப்பட்டது