உருசியாவின் இரண்டாம் கத்தரீன்
இரண்டாம் கத்தரீன் (உருசியம்: Екатерина II Великая, எக்கத்தரீனா II விலீக்கயா, 2 மே [யூ.நா. 21 ஏப்ரல்] 1729 – 17 நவம்பர் [யூ.நா. 6 நவம்பர்] 1796) உருசியப் பேரரசி ஆவார். இவர் 1762 முதல் 1796 இல் இறக்கும் வரை பதவியில் இருந்தார். இவரது காலத்தில் உருசியப் பேரரசு விரிவாக்கப்பட்டதுடன், நிர்வாகம் மேம்படுத்தப்பட்டு, மேற்கு ஐரோப்பிய நாடுகளைப் பின்பற்றி நவீனமயமாக்கமும் முன்னெடுக்கப்பட்டது. இவரது ஆட்சி உருசியாவுக்குப் புதிய ஆற்றலை அளித்ததுடன், வலுவான பேரரசாக வளர்ச்சிபெற்று, ஐரோப்பாவின் வல்லரசுகளுள் ஒன்றாகவும் மதிக்கப்பட்டது. சிக்கலான வெளிநாட்டுக் கொள்கைகளில் அவருக்குக் கிடைத்த வெற்றிகள், சில சமயங்களில் கிளர்ச்சிகளின்போது அவரது கொடூரமான அடக்குமுறைகள் என்பன அவரது பரபரப்பான தனிப்பட்ட வாழ்க்கையின் பகுதியாகவே அமைந்தன.[1][2][3]
பேரரசி இரண்டாம் கத்தரீன் Catherine II the Great | |||||
---|---|---|---|---|---|
அனைத்து உருசியாவினதும் பேரரசி மற்றும் ஆட்சியாளர் | |||||
ஆட்சிக்காலம் | 9 ஜூலை 1762 – 6 நவம்பர் 1796 | ||||
முடிசூட்டுதல் | 12 செப்டம்பர் 1762 | ||||
முன்னையவர் | பீட்டர் III | ||||
பின்னையவர் | முதலாம் பவுல் | ||||
அனைத்து உருசியாவினதும் பேரரசி | |||||
உரிமை | 25 டிசம்பர் 1761 – 9 ஜூலை 1762 | ||||
பிறப்பு | ஸ்டெட்டின், பிரசியா இராச்சியம், புனித ரோமப் பேரரசு | 2 மே 1729||||
இறப்பு | 6 நவம்பர் 1796 சென் பீட்டர்ஸ்பேர்க், உருசியா | (அகவை 67)||||
புதைத்த இடம் | பீட்டர் மற்றும் பவுல் தேவாலயம், சென் பீட்டர்ஸ்பேர்க் | ||||
துணைவர் | பீட்டர் III | ||||
குழந்தைகளின் பெயர்கள் | முதலாம் பவுல் அலெக்சி பொப்ரின்ஸ்கி | ||||
| |||||
மரபு | ரொமானொவ் மாளிகை அஸ்கானியா மாளிகை | ||||
தந்தை | கிறிஸ்டியன் ஆகுஸ்ட் | ||||
தாய் | ஜொகானா எலிசபெத் வொன் ஒல்ஸ்டைன்-கொட்டோர்ப் |
ஒரு சதி மூலம் கத்தரீனின் கணவரான மூன்றாம் பீட்டர் (1728–1762) ஆட்சியிலிருந்து இறக்கப்பட்டபோது கத்தரீன் அதிகாரத்தைக் கைப்பற்றினார். இவருடைய ஆட்சிக்காலத்தில் உருசியப் பிரபுக்கள் உச்சச் செல்வாக்குடன் விளங்கினர். நிலப்பிரபுக்கள் கொடுத்த நெருக்கடிகளினால், மூன்றாம் பீட்டர் காலத்தில் ஏற்கனவே குடியானவர்கள், கொத்தடிமைகள் ஆகியோர் மீதான பிரபுக்களின் அதிகாரம் கூட்டப்பட்டிருந்தது. உருசியாவை நவீனமயப்படுத்த முயன்ற முதல் சார் மன்னர் முதலாம் பீட்டர் புரபுக்கள் மீது வரிகள் விதிக்கப்பட்டிருந்தும், மேற்கு ஐரோப்பாவின் அறிவொளிக் காலச் சிந்தனையாளர் பலருடன் கத்தரீனுக்கு நட்பு இருந்தும், அவரால், உருசிய ஏழைகளுடைய வாழ்க்கை நிலையை மேம்படுத்த முடியவில்லை. ஏழைகள் போருக்கான கட்டாய ஆட்சேர்ப்பு முதலிய பிரச்சினைகளால் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டிருந்தனர்.
1785 அம் ஆண்டில் பிரபுக்களுக்கு மேலும் அதிகாரம் வழங்கும் வகையில் பிரபுக்களுக்கான பட்டயத்தை வெளியிட்டார். இதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் பிரபுக்கள் தமது சார்பாளராக ஒருவரைத் தெரிவு செய்தனர். இச் சார்பாளர்கள் பிரபுக்களது பிரச்சினைகள் பற்றி அரசியுடன் பேசுவதற்கு அதிகாரம் பெற்றிருந்தனர்.
இளமைக் காலம்
தொகுகத்தரீனுடைய தந்தை, ஆனால்ட்-சேர்ப்சுட்டின் இளவரசர், கிறித்தியன் ஆகத்து (Christian August), ஆனால்ட்டின் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். எனினும் இவர் பிரசிய அரசரின் சார்பில் இசுட்டெட்டின் (Stettin) நகரத்தின் ஆளுனர் என்றவகையில், பிரசியாவின் தளபதி என்னும் பதவி வகித்து வந்தார். சோபியா அகசுட்டா பிரெட்ரிக்கா என்னும் இயற்பெயர் கொண்ட கத்தரீன் இசுட்டெட்டின் நகரில் பிறந்தார். அவருக்குத் தூரத்து உருசியத் தலைமுறைத் தொடர்பு இருந்தது. சுவீடனின் அரசர்களாக இருந்த மூன்றாம் குசுத்தாவ், எட்டாம் சார்லசு ஆகியோர் இவரது ஒன்றுவிட்ட சகோதர்களில் இருவர்.
உருசியப் பேரரசராக வரும் வாய்ப்புக் கொண்டிருந்த ஓல்சுட்டீன்-கொட்டோர்ப்பைச் சேர்ந்த பீட்டருக்கு கத்தரீன் மனைவியாகத் தெரிவு செய்யப்பட்டது, கவுண்ட் லெசுத்தோக், பீட்டரின் பெரிய தாயாரும் உருசியப் பேரரசியுமான எலிசபெத்தும், பிரசியாவின் இரண்டாம் பிரெடெரிக்கும் பங்குபற்றிய இராசதந்திர முயற்சிகளின் விளைவினால் ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Campbell, Kenneth C. (2015). Western Civilization: A Global and Comparative Approach. Vol. II: Since 1600. Routledge. p. 86. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-317-45230-0.
- ↑ Bezemer, Jan Willem. Een geschiedenis van Rusland. Van Rurik tot Brezjnev (in Dutch) (3rd ed.). Amsterdam: G.A. van Oorschot. p. 111. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9028206833. இணையக் கணினி நூலக மைய எண் 65583925.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Ferdinand Siebigk: s:de:ADB:Christian August (Fürst von Anhalt-Zerbst). In: Allgemeine Deutsche Biographie (ADB). Band 4, Duncker & Humblot, Leipzig 1876, S. 157–59.