எருசலேம் முற்றுகை (கிபி 70)

எருசலேம் முற்றுகை (Siege of Jerusalem) என்பது கி.பி. 70 இல் இடம்பெற்ற முதலாம் யூத-உரோமைப் போரின் தீர்மானிக்கப்பட்ட இறுதி நிகழ்வாகும். கி.பி. 66 இல் யூதப் பாதுகாவலர்களால் கைப்பற்றப்பட்ட எருசலேம், அன்றைய எதிர்காலப் பேரரசரான தித்துசினாலும் அவருக்கு அடுத்த நிலைத் தளபதி திபேரியுசு இயூலியுசு அலெக்சாண்டரினாலும் வழிநடத்தப்பட்ட உரோமைப் பேரரசுப் படை எருசலேம் நகரை முற்றுகையிட்டு வெற்றி கொண்டது.

எருசலேம் முற்றுகை
முதலாம் யூத-உரோமைப் போர் பகுதி

எருசலேம் கொள்ளையிடப்படல், தித்துஸ் வளைவு உட்பக்கச் சுவர் - உரோம்
நாள் பெப்ருவரி - ஆகத்து கிமு 70
இடம் எருசலேம், யூதேயா மாகாணம்
31°46′41″N 35°14′9″E / 31.77806°N 35.23583°E / 31.77806; 35.23583
உரோம வெற்றி
நிலப்பகுதி
மாற்றங்கள்
எருசலேம் உரோமின் ஆளுகைக்கு மீண்டும் திரும்பியது
பிரிவினர்

உரோமைப் பேரரசு

யூத புரட்சி அரசாங்கம்
  • யூத சீலோட்
  • இதுமேயர்
தளபதிகள், தலைவர்கள்
தித்துசு சீமோன் பார் கியோரா
பலம்
70,000 20,000 – 30,000 10,000
இழப்புகள்
தெரியாது 30,000 10,000

அம்முற்றுகை, நகரம் முழுவதும் கொள்ளையிடப்பட்டு, புகழ்பெற்ற இரண்டாம் எருசலேம் கோவில் அழிக்கப்பட்டதும் நிறைவுற்றது. முதலாம், இரண்டாம் எருசலேம் கோவிலின் அழிவு குறித்து இன்றும் யூத நோன்பான "திஃச பாவ்" என ஆண்டுதோறும் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. உரோமையரால் எருசலேம் நகரமும் கோவிலும் சூறையாடப்பட்டு வெற்றி கொள்ளபட்டதன் நினைவாகக் கட்டப்பட்ட தித்துஸ் வளைவு இன்றும் உரோமையில் உள்ளது.

முற்றுகை

தொகு
 
முற்றுகையின்போது உரோமப் படைகளின் முன்னேற்றம்

உரோமர்களின் முற்றுகையை எதிர்த்துப் போரிடும்போது ஆரம்பத்தில் யூதர்கள் வெற்றி பெற்றிருந்தும் யூதக் கூட்டங்களாகிய 'ஜிலாட்' தங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொண்டதாலும், சரியான தலைமை இல்லாததாலும், போருக்கான தயாரிப்பு, பயிற்சி, கட்டுக்கோப்பு ஆகியவற்றில் குறைபாடு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அவர்கள் நகரின் உணவுக் கிடங்குகளை எல்லாம் அழித்துவிட்டனர். இது முற்றுகையிடப்பட்ட யூதர்களின் சார்பாக ஒருவேளை கருணைமிக்கக் கடவுளின் தலையீடு ஏற்பட்டு ஏதேனும் நடக்காதா என்ற விபரீதமான சிந்தனைக்கு இட்டுச்சென்றது.[1]

தித்துஸ் பாஸ்காவிற்குச் சில நாட்களின் முன் முற்றுகையை ஆரம்பித்தார்.[2] மூன்று காலாட்படைகள் நகரின் மேற்குப் புறத்திலிருந்தும் நான்காவது படை ஒலிவ மலையின் கிழக்கிலிருந்தும் எருசலேம் நகரைச் சூழ்ந்து கொள்ள, தித்துஸ் தனது முற்றுகைக்கு ஆயத்தமானான்.[3][4] ஜொசிஃபஸ் (முதல் உரோம-யூதப் போரில் பங்கு பெற்ற ஒருவர்) எழுதிய "யூதப்போர்" என்ற புத்தகத்தில் 6:421 பகுதியில் தித்துஸினுடைய முற்றுகைக் குறிப்பு என்பதில், விளக்கமளிப்பதில் கடினம் இருந்த போதிலும், ஜொசிஃபஸின் கருத்துப்படி, பாஸ்காக் கொண்டாட்டத்திற்காக எருசலேத்தில் பெருங்குழுவாக யூதர்கள் குழுமியிருந்தனர்.[5] யோப்பா நுழைவாயிலின் வடக்குப் புற மூன்றாவது சுவரின் மேற்குப் பகுதியிலிருந்து முற்றுகையின் வேகம் ஆரம்பித்தது. மே மாதத்தில் மூன்றாவது சுவர் தகர்க்கப்பட்டது. சிறிது காலத்தில் இரண்டாவது சுவரும் கைப்பற்றப்பட்டது. மேல், கீழ் நகரம் மற்றும் கோவில் உடைமையாளர்களாக இருந்த யூதப் பாதுகாவலர்கள் வெளியேற்றப்பட்டனர். யூதப் படையினர் பல பிரிவுகளாகப் பிரிந்து இருந்தனர். கோவிலின் முன்கட்டில் சூழ்ந்திருந்த ஒரு யூதக் குழுவின் தலைவனான எலிசர் பென் சீமோனைக் கிஸ்சலாவின் ஜோன் தலைமையிலான குழு கொன்றது.[2] முற்றுகையிட்ட உரோமப் படைகள் பாதுகாப்பு அரண்களை நிமிர்த்தத் தொடங்கிய போது யூத குழுக்களான, கிஸ்சலாவின் ஜோன் குழுவிற்கும், சியேன் பார் கியோரா குழுவிற்கும் பகைமை மூண்டது. நகரில் உள்ள மக்கள் மேலும் பசியாலும் பட்டினியாலும் துன்பப்படும் பொருட்டு தித்துஸ் நகரைச் சுற்றிச் சுவரை எழுப்பினான். யூதர்களின் ஆண்டோணியா அரணைத் தகர்க்க முயன்ற உரோமன் படைகள் பலமுறை தோல்வியுற்றன. இறுதியில் சூலை பிற்பகுதியில், யூதப் படைகள் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் மறைமுகத் திடீர்த் தாக்குதல் நடத்தி ஆண்டோனியா அரணை உரோமன் படைகள் கைப்பற்றின.[2]

யூத கூட்டுப் படைகள் உரோமன் படைவீரர்கள் பலரையும் கொன்றுவிட்டிருந்த வேளையில், தித்துஸ் யூத வரலாற்று ஆசிரியரான ஜொசிஃபாசை யூதப் படைகளுடன் சமரசப் பேச்சுக்காக அனுப்பினார். ஆனால், சமரசம் செய்யமல், ஜொசிஃபாசை அம்பினால் காயப்படுத்தியும், அதைத் தொடர்ந்து மற்றொரு தாக்குதலையும் நடத்தினார். இந்த திடீர்த் தாக்குதலில், எதிரிகளிடம் பிடிபடயிருந்த தித்துஸ் மயிரிழையில் தப்பினான்.

கோவிலை பகுதியை முழுவதுமாக நோட்டமிட்ட உரோம படைகள், அரண்தான் கோவிலை தாக்க ஒரு சரியான இடமாக இருந்ததைக் கண்டு கொண்டன. போர் இயந்திரங்களும் முன்னேறிச் சென்று கொண்டிருந்த வேளையில், சண்டையின் ஊடே, உரோம படைவீரர் எறிந்த தீக்கட்டையால் கோவில் சுவர் முழுவதும் பற்றி எரிய ஆரம்பித்தது. கோவிலை தகர்ப்பது தித்துஸின் நோக்கமாக இருக்கவில்லை. ஆனால் தோராயமாக பல ஆண்டுகளுக்கு முன் முதலாம் ஏரோது மன்னனால் விரிவுபடுத்தப்பட்ட இடங்களை அழிப்பதே நோக்கமாக இருந்தது. தித்துஸ் இடத்தை கைப்பற்றி, அதை கோவிலாக மாற்றி உரோம பேரரசர்களுக்கும், உரோம பல் தெய்வக் கோவில்களுக்கும் அர்ப்பணிக்க விரும்பினான். ஆனால் கட்டுப்பாட்டை மீறி தீ வேகமாக பரவியது. ஆகத்து மாத இறுதியில் திஸ்ச பாவ்வின் அன்று (ஆவ் மாதத்தின் நோன்பின் ஓன்பதாவது நாள்) கோவில் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. தீ மேலும் நகரின் குடியிருப்பு பகுதிகளுக்கும் பரவியது.[2][4] இதை ஜொசிஃபெஸ் கீழ்க்கண்டவாறு விவரிக்கிறார்.

 
உரோமனியர்கள் முற்றுகைக்குப் பயன்படுத்திய "முற்றுகை இயந்திரம்". எட்வட் பொலிண்டர் (1868).

உரோமானியா படையினர் அதிகாரத்தை பெற்றதும், அவர்களின் சிந்தனைக்கு எந்த ஒரு அறிவுறுத்தலோ, அல்லது பயமோ எட்டவில்லை. அதைப்பற்றி அவர்கள் யோசிக்கவில்லை. இடத்தை கைப்பற்றும் எண்ணம் மட்டுமே மேலோங்கி, அவர்களின் கட்டளையாக இருந்தது. நுழைவாயிலை சுற்றி பெருங்கூட்டமாக கூடினர். அவர்களிலே பலர், சக படைவீரர்களின் கால் மிதியில் சிக்கியும், நெருப்பும் புகையுமாக அழிந்துகிடந்த தூண் வரிசைகளில் ஒரு மோசமான தோல்வியை அடைந்ததுபோல விழுந்தும் இறந்தனர். (கோயில்) புகலிடத்தை அடைந்த அவர்கள், சீசருடைய கட்டளையை கேட்காமல், முன்னாலிருந்த படைவீரர்களை மேலும் எரிபந்துகளை வீசுமாறு ஏவினர். பிரிந்து கிடந்த யூதப்படைகள் எந்த ஒரு உதவியும் செய்யும் நிலையில் இல்லை. எங்கு பார்த்தாலும் சண்டையும், வெட்டும், கொலையுமாக இருந்தது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோனோர் சாதாரண மக்களும், பலவீனமான ஆயுதமற்ற மனிதர்களும் ஆகியோர் பிடிபட்ட இடங்களில் வெட்டப்பட்டனர். பிணக்குவியல்கள் படையல் மேடைகளாக மேலும் மேலும் வளர்ந்தன. புகலிடத்தின் கீழ்பகுதியில் இரத்த ஆறு ஓடியது. அதில் இறந்தவர்களின் உடல்கள் வளைந்து நெளிந்து மூழ்கிக்கொண்டிருந்தன.[6]

கோவிலின் அழிவிற்கு தித்தூஸ் எந்தவகையிலும் காரணமானவன் இல்லை என ஜொசிஃபஸ் கூறினார். ஆனால், இது உரோம அரசவம்சத்தினரை குளிர்விப்பதற்காக ஜொசிஃபஸ் ஆசைபட்டார் என்பதை பிரிதிபலிக்கிறது.[6]

அடுத்து மிக விரைவாக உரோமப் படைகள், யூதர்களின் தடைகளை நசுக்கியது. யூதப்படைகளின் ஒருபகுதி மறைவான பாதாள குகை வழியாக தப்பியோடியது. மற்ற யூதப்படைகள் மேல் நகரத்தில் தங்கள் நிறுத்தத்தை நிறுவின. இது உரோமபடைகளின் முன்னேற்றத்தை நிறுத்தியது, செப்டெம்பர் 7 அன்று நகரம் முழுவதும் உரோம படைகளின் கட்டுப்பாட்டிற்கு வந்தது. உரோமர் நகரத்திலிருந்து தப்பியோடியவர்களை பிடிப்பதை தொடர்ந்தார்கள்.

எருசலேம் நகர அழிப்பு

தொகு
 
முற்றுகையும் எருசலேமின் அழிவும், டேவிட் ரொபட்ஸ் (1850).
 
கோவில் மலையின் மேற்குச் சுவரிலிருந்து கற்கள் உரோமம் படைகளினால் வீதிகளில் எறியப்பட்டது

ஜொசிஃபெஸ், தித்துஸைப் பற்றி விவரிக்கும்போது, அவர் அணுகுமுறையில் ஒரு நடுத்தரமானவர் என்றும், அவர் மற்றவர்களிடம் கலந்தாலோசித்த பிறகு 500 வருட பழமை வாய்ந்த கோயிலை அழிக்ககூடாதென்று உத்தரவிட்டதாக குறிப்பிடுகிறார். ஆனால், யூதர்களின் தாக்குதல்களாலும், தந்திரோபாயங்களாலும் சீற்றமடைந்திருந்த உரோமானியா வீரர்கள் தித்துஸின் உத்தரவை ஏற்காமல் கோயிலுடன் இணைந்திருந்த பகுதியில் தீ வைத்தனர் என்றும், அது அனைத்திடங்களுக்கும் பரவியது என்றும் ஜொசிஃபெஸ் குறிப்பிடுகிறார். தித்துஸ் சக மதத்தவர் என்பதால், ஜொசிஃபஸ் இவ்வாறு குறிப்பிட்டு இருக்கலாம்.

ஜொசிஃபெஸ் உரோமானியர்களுக்கு மத்தியஸ்தராக செயல்பட்டார். பேச்சுவார்த்தை தோல்வியுற்ற பிறகு அவர் உரோமானியர்களின் முற்றுகை மற்றும் பின் விளைவுகள் பற்றி பதிவு செய்துள்ளார்.

உரோமானியா இராணுவம் அனைவரையும் கொன்றழித்து, அனைத்து பொருட்களையும் சூறையாடிய பிறகு, அவர்களின் சீற்றத்தை தணிக்க அந்த நகரத்தில் வேறெதும் இல்லாதலால் சீசர் தனது வீரர்களுக்கு முழுநகரத்தையும், கோவில்களையும் இடிக்குமாறு உத்தரவு பிறபித்தார். ஆனால், உயர் புகழ் பெற்ற கோபுரங்களையும், மேற்கு திசையிலுள்ள சுவற்றையும் விட்டுவிட வேண்டுமென்று கட்டளையிட்டார். உரோமானிய படையெடுப்புக்கு முன்னர் அந்நகரம் எவ்வாறு விளங்கியது என்பதை பின்வரும் தலைமுறைக்கு காண்பிப்பதற்காக கோபுரங்களை விட்டுவைத்தனர். படைவீரர்கள் தங்குவதற்கு கூடாரம் அமைப்பதற்காக சுவற்றை விட்டுவைத்தனர். ஆனால், எருசலேத்தை சுற்றி அமைந்திருந்த மீதமிருந்த சுவற்றை, மண்ணோடு மண்ணாக்கி, யாரும் வாழ்ந்ததற்கான அறிகுறி இல்லாத அளவுக்கு அழித்தனர். இதுவே பெரும்புகழும் மற்றும் அழகிய தோற்றமும் பெற்றிருந்த எருசலேம் நகரத்தின் முடிவாக அமைந்தது.[7]
காணுமிடமெல்லாம் மரங்களும், அழகிய தோட்டங்களும் கொண்ட இடங்களெல்லாம் அழிக்கப்பட்டு, வாழத் தகுதியற்ற இடம்போல் காட்சியளித்தது. யூதேயா மற்றும் அதன் சுற்றியுள்ள சில நகரங்களை முன்பு பார்த்து சென்ற எந்தவொரு வெளிநாட்டவருக்கும், இப்போது இது பாலைவனம் போல் காட்சி அளித்தது. இந்த மாற்றம் மிகுந்த துக்கத்தையும், துயரத்தையும் தருவதாக அமைந்தது. இப்போரினால் அந்நகரம் தனது எழில்மிகு தோற்றத்தை இழக்க நேரிட்டது. முன்பு இங்கு வாழ்ந்தவர்கள் இப்போது வந்தால் அவர்களால் கூட அடையாளம் காண இயலாதவாறு இருந்தது.[8]

ஜொசிஃபெஸின் கூற்றுப்படி 11 லட்சம் பேர் இப்போரில் இறந்தனர். அதில் பெரும்பாலோனோர் யூதர்கள் என்றும், சீமோன் பார் கியோரா மற்றும் கிஸ்சலாவின் ஜோன் உட்பட 97,000 பேர் கைது செய்யப்பட்டு அடிமைகளாக்கப்பட்டனர் என்று கூறப்பட்டுள்ளது.[9] ஆனால், ஜொசிஃபெஸின் கூற்றை மறுக்கும் தற்போதைய அறிஞர்கள், போர் நடந்த காலத்தில் சுமார் 10 லட்சம் பேர் பாலத்தீனத்தில் வாழ்ந்தனர், அதில் பாதிப்பேர் யூதர்கள் என்றும் இக்குறிப்பிட மக்கள் தொகையில் போர் முடிந்த பிறகும் போரினால் கடுமையாக பாதிக்கப்பட்ட யூதேயா நகரம் உட்பட அனைத்திடங்களிலும் யூதர்கள் இருந்தனர் என கூறுகின்றனர்.[10]

இப்போரினால் அதிகம் பேர் நடுநிலக் கடலை சுற்றியுள்ள பகுதிகளுக்கு சென்றனர். இந்த வெற்றியை தனது வெற்றியென கருதாத தித்துஸ், இது என்னுடைய முயற்சியால் கிடைத்த வெற்றியில்லை, தான் கடவுளின் தண்டனைக்கு கருவிபோல் செயல்பட்டதாக சொன்னான்.[11]

நினைவுச்செயல்கள்

தொகு

உரோம்

தொகு
 
தித்துஸ் வளைவு - உரோம், இத்தாலி
  • நினைவு நாணயம்: யூதேயா காப்டா நாணயங்கள் என்பவை கி.பி 70 இல் முதலாம் யூதக் கிளர்ச்சியில் உரோம பேரசசன் வெஸ்பாசியனின் மகன் தித்துஸினால் யூத நிலம் கைப்பற்றபட்டது மற்றும் எருசேலமிலுள்ள யூதர்களின் எருசலேம் கோவிலை அழித்ததன் வெற்றிக் கொண்டாடத்தின் நினைவாக வெஸ்பாசிய மன்னனால் வெளியிடப்பட்ட ஒரு தொடர் நாணயங்களாகும்.
  • அமைதிக் கோவில்: அமைதிக் கோவில் அல்லது வெஸ்பாசியனின் மன்றம் கி.பி 75 இல் எருசலேம் கைப்பற்றப்பட்ட வெற்றியின் நினைவாக உரோம் நகரில் வெஸ்பாசியன் மன்னனால் கட்டப்பட்ட நினைவு கட்டிடமாகும். யூதர்களின் இரண்டாம் கோவிலில் இருந்த மெனோரா என்னும் தங்க விளக்கு இங்கு வைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.[12]
  • கொலோசியம்: கொலோசியம் வெட்டவெளி மைதானம் கி.பி 70-80 இல் கட்டப்பட்டது. இது யூதப் போரின் நிதியிலிருந்து கட்டப்பட்டது என்பதை தொல்லியல்சார் துறையால் கண்டெடுக்கப்பட்ட சுண்ணாம்புக்கரை படிவுகளாலான சுவர்முனை பாளங்கள் தெரிவிப்பதாக இருக்கிறன.[13]
  • தித்துஸ் வளைவு: கி.பி 82 இல் உரோம மன்னன் டோமிசியனால் உரோம் நகரில் கட்டப்பட்டது. இதுவும் எருசலேம் கைப்பற்றப்பட்டதன் நினைவாக எழுப்பப்பட்டது.

யூதம்

தொகு

வரலாற்று மரபு

தொகு

இந்த நிகழ்வை, அன்றைய யூத சமூகத்தினரிடையே இருந்த ஒரு அடிப்படையற்ற பகைமையின் காரணமாக, கடவுளால் கொடுக்கப்பட்ட தண்டனையே இந்த அழிவுகள் என்று யூத அறிஞர்கள் கூறினர்.[14]

கிருத்துவம், யூத மூலத்திலிருந்து பிரிந்ததன் ஒரு முக்கிய புள்ளியாக இந்த நிகழ்வு அமைந்தது. பெரும்பாலான கிருத்துவர்கள் யூத கோட்பாடுகளிலிருந்து விலகியிருந்து எதிர்வினையாற்றினர். கி.பி 70 பிறகு வந்த நற்செய்தி நூல்களில் இது பிரதிபலித்தது மற்றும் இயேசுவை யூதர்கள் ஏற்காததன் தண்டனையாகவும் நற்செய்தி நூல்கள் இந்த நிகழ்வை சித்தரித்தன.[10]:{{{3}}}:30–31

கலை வடிவங்கள்

தொகு
 
'எருசலேம் முற்றுகையும் அழிவும்', ஏ. 1504

இவற்றையும் பார்க்க

தொகு

உசாத்துணை

தொகு
  • Cawthorne, Nigel (2005). History's Greatest Battles: Masterstrokes of War. pp. 31–37. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-84193-290-6.
  1. Nachman Ben-Yehuda Theocratic Democracy: The Social Construction of Religious and Secular Extremism , Oxford University Press, 2010 p.91.
  2. 2.0 2.1 2.2 2.3 Peter Schäfer, The History of the Jews in the Greco-Roman World: The Jews of Palestine from Alexander the Great to the Arab Conquest, Routledge, 2003 pp.129-130.
  3. Si Sheppard, Peter Dennis, The Jewish Revolt AD 66-74, Osprey Publishing, 2013
  4. 4.0 4.1 Barbara Levick, Vespasian, Routledge 1999, pp. 116–119.
  5. Frederico M. Colautti, Passover in the Works of Flavius Josephus, BRILL 2002 pp.115-131 pp.115ff.
  6. 6.0 6.1 Peter Schäfer, The History of the Jews in Antiquity, Routledge (1995) 2013 pp.191-192.
  7. Flavius Josephus. The Wars of the Jews or History of the Destruction of Jerusalem. Containing The Interval Of About Three Years. From The Taking Of Jerusalem By Titus To The Sedition At Cyrene. Book VII. Chapter 1.1
  8. Flavius Josephus. The Wars of the Jews or History of the Destruction of Jerusalem. BOOK VI. Containing The Interval Of About One Month. From The Great Extremity To Which The Jews Were Reduced To The Taking Of Jerusalem By Titus.. Book VI. Chapter 1.1
  9. ஜொசிஃபஸ், [The Wars of the Jews] VI.9.3
  10. 10.0 10.1 Schwartz, Seth (1984). "Political, social and economic life in the land of Israel". The Cambridge History of Judaism: Volume 4, The Late Roman-Rabbinic Period. Cambridge University Press. 
  11. Philostratus, The Life of Apollonius of Tyana 6.29 பரணிடப்பட்டது 2013-01-29 at the வந்தவழி இயந்திரம்
  12. "Cornell.edu". Cals.cornell.edu. பார்க்கப்பட்ட நாள் 2013-08-31.
  13. ALFÖLDY, GÉZA (1995). "Eine Bauinschrift Aus Dem Colosseum.". Zeitschrift für Papyrologie und Epigraphik 109: 195–226. 
  14. Yoma, 9b

வெளியிணைப்புக்கள்

தொகு