காண்ஸ்தான்சு பொதுச்சங்கம்
காண்ஸ்தான்சு பொதுச்சங்கம் என்பது 15ம் நூற்றாண்டில் நிகழ்ந்த கிறிஸ்தவப் பொதுச்சங்கம் ஆகும். கத்தோலிக்க திருச்சபையினால் ஏற்கப்படும் இச்சங்கமானது 1414 முதல் 1418 வரை நடந்தது. இச்சங்கம் மேற்கு சமயப்பிளவினை முடிவுக்கு கொணர்ந்தது. இதன் முடிவில் திருத்தந்தை ஐந்தாம் மார்ட்டின் தேர்வு செய்யப்பட்டார். இச்சங்கம் ஜான் ஹஸின் கொள்கைகளை திரிபுக்கொள்கைகள் எனக்கண்டித்து அவருக்கு மரண தண்டனை விதித்தது.
காண்ஸ்தான்சு பொதுச்சங்கம் | |
---|---|
காலம் | 1414–1418 |
ஏற்கும் சபை | கத்தோலிக்கம் |
முந்திய சங்கம் | வியென்னா |
அடுத்த சங்கம் | Florence |
சங்கத்தைக் கூட்டியவர் | எதிர்-திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான், திருத்தந்தை பன்னிரண்டாம் கிரகோரியால் உறுதி செய்யப்பட்டது |
பங்கேற்றோர் | 600 |
ஆய்ந்த பொருள்கள் | மேற்கு சமயப்பிளவு |
வெளியிட்ட ஏடுகள்/அறிக்கைகள் | எதிர்-திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் மற்றும் எதிர்-திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட் விசாரிக்கப்படல், ஜான் ஹஸ் கண்டிக்கப்படல், திருத்தந்தை ஐந்தாம் மார்ட்டினின் தேர்வு |
பொதுச்சங்கங்களின் வரலாற்றுக் கால வரிசை |
இச்சங்கத்தின் முக்கியப்பணியாக அவிஞ்ஞோன் திருத்தந்தை ஆட்சிக்கால முடிவில் விளைந்த மேற்கு சமயப்பிளவினை முடிவுக்கு கொண்டுவருவதாக அமைந்தது.
திருத்தந்தை பதினொன்றாம் கிரகோரி 1377இல் உரோமைக்குத்திரும்பினார். 1378இல் திருத்தந்தை ஆறாம் அர்பன் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் இவரைத்தேர்வு செய்தவர்களுக்கு இவருக்கு ஏற்பட்ட மோதலால் இஃபான்டி என்னும் இடத்தில் 20 செப்டம்பர் 1378 அன்று பிரென்சு கர்தினால்கள் சிலரால் எதிராக திருத்தந்தையாக ஏழாம் கிளமெண்ட் தேர்வு செய்யப்பட்டார். 30 ஆண்டுகளுக்குப்பின்னர் இப்பிளவை தீர்க்கக்கூடிய பீசா பொதுச்சங்கம் சிக்களை இன்னமும் அதிகப்படுத்தும்படியாக ஐந்தாம் அலெக்சாண்டரை திருத்தந்தையாக்கியது.[1] இச்சங்கம் ஒரு தனி ஆயரை விட, அது உரோமை ஆயராயினும், ஒரு பொதுச்சங்கத்துக்கு அதிக அதிகாரம் உண்டு என வாதிட்டது. இவ்வதிகாரத்தைப்பயன்படுத்தி தாம் புதிய திருத்தந்தையினை நியமிப்பதாக இது அறிவித்தது.
செருமனி மற்றும் அங்கேரியின் அரசர் சிகிஸ்மன்டு உட்பட பலரின் தூண்டுதலால் இச்சிக்கலுக்கு முடிவுகட்ட எதிர்-திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவானால் காண்ஸ்தான்சு பொதுச்சங்கம் கூட்டப்பட்டது. இது 16 நவம்பர் 1414 முதல் 22 ஏப்ரல் 1418 வரை செருமனியின் காண்ஸ்தான்சு நகரில் நிகழ்ந்தது. இச்சங்கத்தில் ஏறத்தாழ 29 கர்தினால்கள், 100 சட்ட வள்ளுநர்கள், 134 ஆதீனத்தலைவர்கள் மற்றும் 183 ஆயர்களும் பேராயர்களும் கலந்து கொண்டனர்.
இதன் இரண்டாம் அமர்வில் இது உரோமையின் திருத்தந்தை பன்னிரண்டாம் கிரகோரியின் ஒப்புதலைப்பெற்றது. இதல் மூன்று திருத்தந்தையரும் தானாக பணி துறக்கக் கோரப்பட்டது. இதை திருத்தந்தை பன்னிரண்டாம் கிரகோரி மற்றும் எதிர்-திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் ஏற்றனர். திருத்தந்தை பன்னிரண்டாம் கிரகோரியின் பதிள் ஆள் அவரின் பணிதுறப்புக்கடிதத்தை சங்கத்தினர்முன் வாசித்தார். அவரின் பணிதுறப்பை ஏற்ற சங்கம் அவருக்கு அச்சங்கம் இவருக்கு போர்தோவின் கர்தினால் ஆயர் என்னும் பட்டம் அளித்தது. இது திருத்தந்தைக்கு அடுத்த உயரியப்பதவி ஆகும். ஆனாலும் அவிஞ்ஞோனின் பதின்மூன்றாம் பெனடிக்ட் இச்சங்கத்தின் முடிவை ஏற்காததால் அவர் திருச்சபையினை விட்டு விலக்கப்பட்டார். இதன்பின்பு திருத்தந்தை ஐந்தாம் மார்ட்டின் திருத்தந்தையாக தேர்வானார். இது இச்சிக்கலுக்கு முடிவாக அமைந்தது. ஆயினும் இச்சங்கத்தில் திருத்தந்தை பதவியினைக்கோரிய மூவரில் யார் உண்மையான வாரிசாக இருந்தனர் என முடிவெடுக்காததால் இக்காலத்தின் உண்மையான திருத்தந்தை யார் என்பதில் சிக்கல் 19ஆம் நூற்றாண்டுவரை நிலவியது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Frenken, Ansgar. "Vom Schisma zur 'verfluchten Dreiheit' [From the Schism to the 'Accursed Trinity']". Damals: 16–21.