ஆறாம் அர்பன் (திருத்தந்தை)
திருத்தந்தை ஆறாம் அர்பன் (இலத்தீன்: Urbanus VI; c. 1318 – 15 அக்டோபர் 1389), இயற்பெயர் பார்தலோமியோ பிரிகானோ (இத்தாலிய ஒலிப்பு: [bartoloˈmɛːo priɲˈɲaːno]), என்பவர் திருத்தந்தையாக 8 ஏப்ரல் 1378 முதல் 1389இல் தனது இறப்பு வரை இருந்தவர் ஆவார். கர்தினால்கள் குழுவுக்கு வெளியே தேர்வான கடைசி திருத்தந்தை இவர் ஆவார்.[1]
திருத்தந்தை ஆறாம் அர்பன் | |
---|---|
ஆட்சி துவக்கம் | 8 ஏப்ரல் 1378 |
ஆட்சி முடிவு | 15 அக்டோபர் 1389 |
முன்னிருந்தவர் | பதினொன்றாம் கிரகோரி |
பின்வந்தவர் | ஒன்பதாம் போனிஃபாஸ் |
திருப்பட்டங்கள் | |
ஆயர்நிலை திருப்பொழிவு | 21 மார்ச் 1364 |
பிற தகவல்கள் | |
இயற்பெயர் | பார்தலோமியோ பிரிகானோ |
பிறப்பு | c. 1318 இட்ரி, நேப்பிள்சு பேரரசு |
இறப்பு | உரோமை நகரம், திருத்தந்தை நாடுகள் | 15 அக்டோபர் 1389
அர்பன் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள் |
1363இல் ஆர்சென்சாவின் பேராயராகவும், 1377இல் பாரியின் பேராயராகவும் நியமிக்கப்பட்டார். ஏப்ரல் 8, 1378இல் திருத்தந்தை பதினொன்றாம் கிரகோரியின் இறப்புக்குப்பின்பு இத்தாலியர்கள் அவிஞ்ஞோனுக்கு திருத்தந்தை மீண்டும் செல்லாதிருக்க ஒரு இத்தாலியரை தேர்வு செய்ய கலகம் செய்தனர். இதனால் இவர் திருத்தந்தையாக தேர்வானார்.
தேர்வானப்பின்பு இவர் கடுங்கோபக்காரராக மாறியதாலும், பலவற்றை மாற்ற முயன்றதாலும்,இவரைத்தேர்வு செய்த பல கர்தினால்கள், குறிப்பாக பிரெஞ்சுக்கர்தினால்களின் வெறுப்பை இவர் பெற்றார். இதனால் இவர் தேர்வான நான்கு மாதத்தின் 13 பிரெஞ்சுக்கர்தினால்கள் அங்கனி என்னும் இடத்தில் இவரின் தேர்வு இத்தாலியர்களின் மிரட்டலால் விளைந்தது என்று காரணம் கூறி அதை செல்லாது என அறிக்கையிட்டனர். பின்னர் ஃபான்டியில் செப்டம்பர் 20, 1378 அன்று ஜெனிவாவின் இராபர்டை புதிய திருத்தந்தையாக தேர்வு செய்தனர். இவர் ஏழாம் கிளமெண்ட் என்னும் பெயரை ஏற்றார். இதுவே 40 வருடங்கள் நிளவிய மேற்கு சமயப்பிளவின் காரணமாயிற்று.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ *Catholic Encyclopedia 1908: "Urban VI"
- ↑ *Philip Hughes, A History of the Church To the Eve of the Reformation பரணிடப்பட்டது 2005-10-30 at the வந்தவழி இயந்திரம்