ஒன்பதாம் போனிஃபாஸ் (திருத்தந்தை)
திருத்தந்தை ஒன்பதாம் போனிஃபாஸ் (இலத்தீன்: Bonifatius IX,; c. 1350 – 1 அக்டோபர் 1404), இயற்பெயர் பிரோ தோமசெல்லி, என்பவர் திருத்தந்தையாக 2 நவம்பர் 1389 முதல் 1404இல் தனது இறப்பு வரை இருந்தவர் ஆவார். மேற்கு சமயப்பிளவின் போது உரோமையிலிருந்து ஆட்சிசெய்தவர் இவர். இவருக்கு எதிராக பிரெஞ்சு அரசின் துணையோடு எதிர்-திருத்தந்தை ஏழாம் கிளமெண்ட் மற்றும் எதிர்-திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட் ஆகியோர் அவிஞ்ஞோனிலிருந்து ஆட்சி செய்தனர்.
திருத்தந்தை ஒன்பதாம் போனிஃபாஸ் | |
---|---|
ஆட்சி துவக்கம் | 2 நவம்பர் 1389 |
ஆட்சி முடிவு | 1 அக்டோபர் 1404 |
முன்னிருந்தவர் | ஆறாம் அர்பன் |
பின்வந்தவர் | ஏழாம் இன்னசெண்ட் |
திருப்பட்டங்கள் | |
ஆயர்நிலை திருப்பொழிவு | 9 நவம்பர் 1389 |
கர்தினாலாக உயர்த்தப்பட்டது | 21 டிசம்பர் 1381 |
பிற தகவல்கள் | |
இயற்பெயர் | பிரோ தோமசெல்லி |
பிறப்பு | c. 1350 நாபொலி, நேபில்சு பேரரசு |
இறப்பு | உரோமை நகரம், திருத்தந்தை நாடுகள் | 1 அக்டோபர் 1404
போனிஃபாஸ் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள் |
திருத்தந்தை ஆறாம் அர்பனால் 1385இல் கர்தினால் குருவாக உயர்த்தப்பட்டார். ஆறாம் அர்பனுக்குப்பின்பு 1389இல் இவர் திருத்தந்தையானார். செருமனி, இங்கிலாந்து, அங்கேரி, போலந்து, மற்றும் இத்தாலியின் பெரும் பகுதி இவரை ஆதரித்தன. ஐரோப்பாவின் பிற பகுதிகள் எதிர்-திருத்தந்தை ஏழாம் கிளமெண்டை ஆதரித்தன. இவ்விருவரும் ஒருவர் மற்றவரை திருச்சபையினை விட்டு விலக்கியதாக அறிவித்தனர்.
ஒன்பதாம் போனிஃபாஸ் மேற்கு சமயப்பிளவினை அரசியல் பிரிவாகப்பார்ததால், அரசியல் தீர்வு காணவே முயன்றார். இதனால் இப்பிளவை முடிவுக்கு கொண்டுவராமல் இதனை பெரிதும் விரிவடையச்செய்தார்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ Pastor, The History of the Popes: From the Close of the Middle Ages (1906), vol. i, p 165.