அக்டோபர் புரட்சி
அக்டோபர் புரட்சி (October Revolution) (உருசியம்: Октя́брьская револю́ция, ஒ.பெ Oktyabr'skaya revolyutsiya, பஒஅ: [ɐkˈtʲabrʲskəjə rʲɪvɐˈlʲutsɨjə]) அல்லது சோவியத் இலக்கியத்தில் மாபெரும் அக்டோபர் சமவுடைமைப் புரட்சி (Great October Socialist Revolution) எனப்படும் (Вели́кая Октя́брьская социалисти́ческая револю́ция, Velikaya Oktyabr'skaya sotsialističeskaya revolyutsiya அல்லது பொதுவாக சிவப்பு அக்டோபர் அல்லது அக்டோபர் எழுச்சி அல்லது போல்செவிக் புரட்சி, எனப்படும்[2] போல்செவிக் முறியடிப்பு (Bolshevik Coup) என்பது விளாதிமிர் லெனினாலும் போல்செவிக் கட்சியாலும் தலைமை தாங்கிய மாபெரும் உருசியப் புரட்சியாகும். இது புனித பீட்டர்சுபர்கில் 1917 அக்தோபர் 25 (7 நவம்பர், 7 புதுமுறையில்) ஆம் நாளன்று நிகழ்ந்த ஆயுதந் தாங்கிய எழுச்சியால் நிறைவேற்றப்பட்டது.
அக்டோபர் புரட்சி | |||||||
---|---|---|---|---|---|---|---|
உருசியப் புரட்சி, 1917–23 புரட்சி பகுதி | |||||||
![]() 1917 இல் வல்கன் தொழிலகத்தில் செம்படைகள் |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
![]() ![]() | ![]() |
||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
![]() ![]() ![]() | ![]() ![]() |
||||||
பலம் | |||||||
10,000 செம்படை மாலுமிகள், 20,000–30,000 செம்படை வீரர்கள் | 500–1,000 தன்னர்வ வீரர்கள், 1,000 பெண்படை வீராங்கனைகள் | ||||||
இழப்புகள் | |||||||
சில காயமுற்ற செம்படை வீரர்கள்[1] | சிறையான, வெளியேறிய அனைவரும் |


இது அதே ஆண்டில் நடந்த பிப்ரவரி புரட்சியைப் பயன்படுத்தியே அக்டோபர் புரட்சி வெற்றி கண்டது. பிப்ரவரி புரட்சி சார்மன்னர் ஆட்சிக்கு முடிவுகட்டித் தற்காலிக உருசிய அரசை உருவாக்கியது. இதே வேளையில், நகரத் தொழிலாளர்கள் சோவியத்துகளாக அணிதிரண்டனர்: இவற்றில் பங்கேற்ற புரட்சியாளர்கள் தற்காலிக உருசிய அரசையும் அதன் செயல்பாடுகளையும் தாக்கிப் பேசினர். அனைத்து உருசிய சோவியத்துகளின் பேராயம் உருவாகியதும் அது ஆட்சியமைப்பாகி, தனது இரண்டாம் கருத்தரங்கப் பிரிவை நடத்தியது. இது புதிய நிலைமைகளின் கீழ் போல்செவிக்குகளையும் இடதுசாரி சமவுடைமைப் புரட்சியாளர்கள் போன்ற பிற இடதுசாரிக் குழுக்களையும் முதன்மைப் பதவிகளுக்குத் தேர்ந்தெடுத்தது. இது உடனே உருசிய சமவுடைமை கூட்டாட்சி சோவியத் குடியரசை நிறுவும் முயற்சியைத் தொடங்கியது; இதுவே உலகின் முதல் சமவுடைமை அரசினைத் தானே அறிவித்த சமவுடைமை அரசாகும். சாரும் அவரது குடும்பமும் 1918 ஜூலை 17 இல் தூக்கில் இடப்பட்டனர்.
புரட்சியைப் போல்செவிக்குகள் தலைமை தாங்கி நடத்தினர்.அவர்கள் பெத்ரோபகிராது சோவியத்துகளுக்கு ஆர்வம் ஊட்டி ஆயுதந் தாங்கிப் போராடவைத்தனர். படைசார்ந்து புரட்சிக் குழுவின் கீழ் போல்செவிக் செம்படைகள் 1917 நவம்பர் 7 இல் அனைத்து அரசு கட்டிடங்களையும் கைப்பற்றித் தம் கைவசமாக்கினர். அவர்கள் மறுநாளே உருசியத் தலைநகராகிய பெத்ரோகிராதில் மாரி அரண்மனையில் இருந்த தற்காலிக அரசையும் கைப்பற்றினர்.
நெடுநாளாக தள்ளிபோட்ட உருசிய அரசமைப்பு சட்டமன்றத் தேர்தல் (1917 தேர்தல்) 1917 நவம்பர் 12 இல் நடத்தப்பட்டது. போல்செவிக்குகள் சோவியத்துகளில் பெரும்பான்மையாக இருந்த போதிலும், அவர்கள் மொத்தம் 715 இடங்களுக்கு 175 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றனர். சமவுடைமைப் புரட்சிக் கட்சி 370 இடங்களைப் பிடித்தனர், எனவே, இரண்டாம் இடத்தில் வந்தனர். என்றாலும், சமவுடைமைப் புரட்சிக் கட்சி முழுக்கட்சியாக அப்போது செயல்படவில்லை என்பதே உண்மை நிலைமை. இவர்கள் போல்செவிக்குகளுடன் 1917 அக்டோபர் முதல் 1918 ஏப்பிரல் வரை தேர்தல் உடன்பாட்டில் இருந்தனர். முதல் அரசமைப்பு சட்ட மன்றம் 1917 நவம்பர் 28 இல் கூடியது. ஆனால், அதன் ஆணையேற்பை 1918 ஜனவரி 5 வரை போல்செவிக்குகள் காலந்தாழ்த்தினர். அது கூடிய முதல் நாளிலேயே சோவியத்துகளை எதிர்த்துப் போராடத் தொடங்கியது. இது சோவியத்துகளின் அமைதி, நிலம் சார்ந்த தீர்மானங்களை நீக்கியது. எனவே, மறுநாளே சோவியத்துகளின் பேராயம், தன் ஆணையால் அரசமைப்பு சட்ட மன்றத்தைக் கலைத்துவிட்டது.[3]
புரட்சியை அனைவரும் ஏற்காததால் 1917 முதல் 1922 வரை உருசிய உள்நாட்டுப் போர் தொடர்ந்தது. பின்னர், 1922 இல் சோவியத் ஒன்றியம் உருவாக்கப்பட்டது.
சொற்பிறப்பியல் தொகு
முதலில் இந்நிகழ்வு அக்டோபர் படைப்புரட்சி (Октябрьский переворот) அல்லது மூன்றாம் எழுச்சி என்றே வழங்கியுள்ளது. லெனின் முழுநூல்கள் தொகுப்பின் முதல் பதிப்புகளில் இவ்வாறே குறிப்பிடப்படுகிறது. ஆனால், "переворот" எனும் உருசியச் சொல்லின் பொருள் "புரட்சி" அல்லது "எழுச்சி" அல்லது "கவிழ்த்தல்" என்பனவாகும். எனவே, முறியடிப்பு அல்லது படைப்புரட்சி அல்லது ஆட்சிக் கவிழ்ப்பு ("coup") என்பது சரியான மொழிபெயர்ப்பல்ல. நாளடைவில், அக்டோபர் புரட்சி (Октябрьская революция) எனும் சொல் பயன்பாட்டில் வந்தது. புதிய கிரிகொரிய நாட்காட்டியின்படி, நவம்பரில் நடந்ததால் இது "நவம்பர் புரட்சி" எனவும் வழங்கப்படுகிறது. [4] 1927 இல் நடைபெற்ற புரட்சியின் 10 ஆம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களின் பின்னர், இப்புரட்சியின் அதிகார பூர்வமான பெயராக மாபெரும் அக்டோபர் சமூகவுடைமைப் புரட்சி என்னும் பெயரே வழங்கி வருகின்றது.
பின்னணி தொகு
பிப்ரவரி புரட்சி தொகு
குறிப்புகள் தொகு
- ↑ History.com Staff. “Russian Revolution.” History.com, A&E Television Networks, 2009, www.history.com/topics/russian-revolution.
- ↑ Samaan, A.E. (2 February 2013). From a "Race of Masters" to a "Master Race": 1948 to 1848. A.E. Samaan. பக். 346. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0615747884. https://books.google.ca/books?id=JkXJZtI9DQoC&pg=PA346&dq=%22october+uprising%22+%22bolshevik+revolution%22&hl=en&sa=X&ved=0ahUKEwjSsOPVuYPSAhUk0IMKHUTRAycQ6AEIIDAB#v=onepage&q=%22october%20uprising%22%20%22bolshevik%20revolution%22&f=false. பார்த்த நாள்: 9 February 2017.
- ↑ Jennifer Llewellyn, John Rae and Steve Thompson (2014). "The Constituent Assembly". Alpha History. http://alphahistory.com/russianrevolution/constituent-assembly/.
- ↑ Bunyan & Fisher 1934, ப. 385.
மேற்கோள்கள் தொகு
- Acton, Edward (1997). Critical Companion to the Russian Revolution.
- Ascher, Abraham (2014). The Russian Revolution: A Beginner's Guide. Oneworld Publications. https://archive.org/details/russianrevolutio0000asch.
- Beckett, Ian F. W. (2007). The Great war (2 ). Longman. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-4058-1252-4. https://books.google.com/books?id=CMYbKgcAW88C.
- Bone, Ann (trans.) (1974). The Bolsheviks and the October Revolution: Central Committee Minutes of the Russian Social-Democratic Labour Party (Bolsheviks) August 1917-February 1918. Pluto Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-902818546.
- Bunyan, James; Harold Henry Fisher (1934). The Bolshevik Revolution, 1917–1918: Documents and Materials. Palo Alto: Stanford University Press. இணையக் கணினி நூலக மையம்:253483096. https://archive.org/details/bolshevikrevolut0000jame.
- Chamberlin, William Henry (1935). The Russian Revolution. I: 1917–1918: From the Overthrow of the Tsar to the Assumption of Power by the Bolsheviks. Old Classic.
- Figes, Orlando (1996). A People's Tragedy: The Russian Revolution: 1891–1924. Pimlico. https://books.google.com/books?hl=en&lr=&id=p6LzAgAAQBAJ.
- Guerman, Mikhail (1979). Art of the October Revolution.
- Alexandra Kollontai (1971). "The Years of Revolution". The Autobiography of a Sexually Emancipated Communist Woman. New York: Herder and Herder. இணையக் கணினி நூலக மையம்:577690073. http://www.marxists.org/archive/kollonta/1926/autobiography.htm#a100.
- Krupskaya, Nadezhda (1930). "The October Days". Reminiscences of Lenin. Moscow: Foreign Languages Publishing House. இணையக் கணினி நூலக மையம்:847091253. http://www.marxists.org/archive/krupskaya/works/rol/rol26.htm.
- Rosa Luxemburg (1940) [1918]. The Russian Revolution. Translated by Bertram Wolfe. New York City: Workers Age. இணையக் கணினி நூலக மையம்:579589928.
- Mandel, David (1984). The Petrograd Workers and the Soviet seizure of power. London: MacMillan. https://archive.org/details/petrogradworkers00mand.
- Pipes, Richard (1997). Three "whys" of the Russian Revolution. Vintage Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-679-77646-8. https://books.google.com/books?id=mdqtQgAACAAJ.
- Rabinowitch, Alexander (2004). The Bolsheviks Come to Power: The Revolution of 1917 in Petrograd. Pluto Press. https://books.google.com/books/about/The_Bolsheviks_Come_to_Power.html?id=HzRiDJnTTG4C.
- Karl Radek (1995) [First published 1922 as "Wege der Russischen Revolution"]. "The Paths of the Russian Revolution". in Nikolai Bukharin; Al Richardson (historian). In Defence of the Russian Revolution: A Selection of Bolshevik Writings, 1917–1923. London: Porcupine Press. பக். 35–75. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1899438017. இணையக் கணினி நூலக மையம்:33294798. http://www.marxists.org/archive/radek/1922/paths/index.html.
- Read, Christopher (1996). From Tsars to Soviets.
- Victor Serge (1972) [1930]. Year One of the Russian Revolution. London: Penguin Press. இணையக் கணினி நூலக மையம்:15612072.
- Service, Robert (1998). A history of twentieth-century Russia. Cambridge, Massachusetts: Harvard University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-674-40347-9. https://archive.org/details/historyoftwentie0000serv.
- Shukman, Harold, ed. (1998). The Blackwell Encyclopedia of the Russian Revolution. https://archive.org/details/russianrevolutio0000shuk. "articles by over 40 specialists"
- Swain, Geoffrey (2014). Trotsky and the Russian Revolution. Routledge.
- Trotsky, Leon (1930). "XXVI: FROM JULY TO OCTOBER". My Life. London: Thornton Butterworth. இணையக் கணினி நூலக மையம்:181719733. http://www.marxists.org/archive/trotsky/1930/mylife/ch26.htm.
- Trotsky, Leon (1932). The History of the Russian Revolution. III. Translated by Max Eastman. London: Gollancz. இணையக் கணினி நூலக மையம்:605191028.
வெளி இணைப்புகள் தொகு
- * Read, Christopher: Revolutions (Russian Empire) , in: 1914-1918-online. International Encyclopedia of the First World War.
- Peeling, Siobhan: July Crisis 1917 (Russian Empire) , in: 1914-1918-online. International Encyclopedia of the First World War.
- The October Revolution Archive
- Let History Judge Russia’s Revolutions, commentary by Roy Medvedev, Project Syndicate, 2007
- October Revolution and Logic of History பரணிடப்பட்டது 2011-04-29 at the வந்தவழி இயந்திரம்
- Maps of Europe பரணிடப்பட்டது 2015-03-16 at the வந்தவழி இயந்திரம் and Russia பரணிடப்பட்டது 2015-03-21 at the வந்தவழி இயந்திரம் at time of October Revolution at omniatlas.com
- ஒக்டோபர் புரட்சியின் மரபு I[தொடர்பிழந்த இணைப்பு],
ஒக்டோபர் புரட்சியின் மரபு II[தொடர்பிழந்த இணைப்பு], சி. சிவசேகரம்