பண்டாரவளை
இலங்கையின் பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம்
பண்டாரவளை (Bandarawela) இலங்கையின் ஊவா மாகாணம், பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். ஊவா மாகணத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பண்டாரவளை பதுளைக்கு அடுத்தப்படியாக மாகாணத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும். பண்டாரவளை இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் தியதலாவை, எல்லை தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன. கொழும்பு-கல்முனை பெருந்தெருவிலிருந்து பிரிந்துச் செல்லும் ஏ-16 பெருந்தெரு வழியாகவோ, நுவரெலியாவிலிருந்து ஏ-5 பெருந்தெரு வழியாகவோ வெலிமடையிலிருந்து பீ-44 பெருந்தெரு வழியாகவோ பண்டாரவளையை அடையலம்.
பண்டாரவளை
Bandarawela බණ්ඩාරවෙල | |
---|---|
ஆள்கூறுகள்: 6°50′0″N 80°59′0″E / 6.83333°N 80.98333°E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | ஊவா மாகாணம் |
மாவட்டம் | பதுளை மாவட்டம் |
ஏற்றம் | 1,226 m (4,022 ft) |
உயர் புள்ளி (நயாபெத்தை) | 1,943 m (6,375 ft) |
தாழ் புள்ளி | 950 m (3,120 ft) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 32,000 (2,021) (மாநகரப் பகுதி)[1] |
• அடர்த்தி | 968/km2 (2,510/sq mi) |
நேர வலயம் | ஒசநே+5:30 (இலங்கை சீர் நேரம்) |
இணையதளம் | [1] |