பிராசவில்லி

பிராசவில்லி அல்லது பிராசவில் (ஆங்கில மொழி: Brazzaville), கொங்கோ குடியரசின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது கொங்கோ ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. 2001 மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் படி நகர மக்கட்தொகை 1,018,541 ஆகும். புறநகர்ப் பகுதியை உள்ளடக்கினால் இது ஏறத்தாழ 1.5 மில்லியன் ஆகும். ஏறத்தாழ 10 மில்லியன் மக்கட்தொகை கொண்ட கொங்கோ மக்களாட்சிக் குடியரசின் தலைநகரான கின்ஷாசா கொங்கோ ஆற்றின் மறுகரையில் உள்ளது. நாட்டின் மூன்றிலொரு பங்கு மக்கள் இந்நகரிலேயே வசிக்கின்றனர். விவசாயம் சாராத தொழிற்துறைகளின் 40% ஆன பணியாளர்கள் இந்நகரிலேயே பணியாற்றுகின்றனர்.

பிராசவில்லி அல்லது பிராசவில்
நாடுகொங்கோ குடியரசு
தலைநகர மாவட்டம்பிராசவில்லி
அரசு
 • மேயர்Hugues Ngouelondélé
பரப்பளவு
 • நகரம்100 km2 (40 sq mi)
மக்கள்தொகை
 (2001)[1][2]
 • நகரம்10,18,541
 • அடர்த்தி10,185.4/km2 (26,380/sq mi)
 • நகர்ப்புறம்
1.5 மில்லியன்

மேற்கோள்கள்

தொகு
  1. (பிரெஞ்சு) கொங்கோ குடியரசு, Centre National de la Statistique et des Études Économiques (CNSEE). "Répartition de la population par Départements et Communes en 1984 et projetée de 2000 à 2015". Archived from the original on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் 2007-06-30.
  2. (பிரெஞ்சு) Website of Unité de Pilotage du Processus d'Elaboration et de mise œuvre de la Stratégie pour la Réduction de la Pauvreté (UPPE-SRP). "Monographie de la Ville de Kinshasa". Archived from the original (SWF) on 2006-05-15. பார்க்கப்பட்ட நாள் 2007-01-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிராசவில்லி&oldid=3563543" இலிருந்து மீள்விக்கப்பட்டது