விண்மீன் குழாம்

விண்மீன் குழாம் அல்லது உடுத்தொகுதி (constellation) என்பது வான்கோளத்தில் அனைத்துலகும் விவரிக்கப்பட்ட விண்மீன் கூட்டங்களின் தொகுதிகள் ஆகும். இவற்றை பூமியின் இரவு வான்வெளியில் காணப்படும் விண்மீன்களை அதன் தொகுதிகளின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட 88 விண்மீன் குழாங்களை வானில் அவதானிக்கலாம்.[1]

இது தவிர, சில அங்கீகரிக்கப்படாத சில பழங்கால விண்மீன் குழாங்களும் உள்ளன. அவற்றை, சீன, ஹிந்து மற்றும் அசுத்திரேலியாவில் பழங்கால குறிப்புகள் விளக்குகின்றன.

விண்மீன் குழாம்களில் உள்ள மிகவும் ஒளி கூடிய அல்லது பிரகாசமான உடுக்களை அல்ஃபா எனும் எழுத்திலும் நடுத்தர ஒளியைக் கொண்டவையை பீற்றா எனும் எழுத்திலும் ஒளி குறைந்தவையை காமா எனும் எழுத்திலும் குறிப்பர்.

மேற்கோள்

தொகு
  1. "The Constellations". IAU—International Astronomical Union. பார்க்கப்பட்ட நாள் 29 August 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விண்மீன்_குழாம்&oldid=2465802" இலிருந்து மீள்விக்கப்பட்டது