இரண்டாம் பூவர் போர்

இரண்டாம் பூவர் போர் (Second Boer War, ஆபிரிகான் மொழியில் "இரண்டாம் விடுதலைப் போர்") அல்லது இரண்டாம் ஆங்கில-பூவர் போர் அல்லது தென்னாபிரிக்கப் போர்,[6] 11 அக்டோபர் 1899 முதல் 31 மே 1902 வரை பிரித்தானியப் பேரரசு ஒரு புறத்திலும், தென்னாப்பிரிக்கக் குடியரசும் (டிரான்சுவால் குடியரசு) ஆரஞ்சு விடுதலை இராச்சியமும் எதிரணியிலும் போரிட்ட சண்டைகளாகும். பிரித்தானியப் போர்முனையில் பிரித்தானியப் பேரரசின் பல பகுதிகளிலிருந்தும் துருப்புகள் வரவழைக்கப்பட்டனர். தெற்கு ஆப்பிரிக்கா, ஆத்திரேலியக் குடியேற்றங்கள், கனடா, நியூஃபவுன்லாந்து மற்றும் லாப்ரடோர், பிரித்தானிய இந்தியா, மற்றும் நியூசிலாந்தின் பகுதிகளிலிருந்து துருப்புகள் வந்தன. இந்தப் போரில் பிரித்தானியர் வெற்றி பெற்றனர்; இரு குடியரசுகளும் ஐக்கிய இராச்சியத்தில் இணைக்கப்பட்டன. இறுதியாக, இவ்விரு குடியரசுகளும் 1910இல் தென்னாப்பிரிக்க ஒன்றியத்தில் அங்கமாயின.

இரண்டாம் பூவர் போர்
போயர் போர்கள் பகுதி

இசுபியோன் கொப்பில் பூர் படைவீரர்கள்
நாள் 11 அக்டோபர் 1899 – 31 மே 1902
(2 ஆண்டு-கள், 7 மாதம்-கள், 2 வாரம்-கள் and 6 நாள்-கள்)
இடம் தென்னாப்பிரிக்கா, சுவாசிலாந்து[1]
பிரித்தானியப் பேரரசு வெற்றி
நிலப்பகுதி
மாற்றங்கள்
வெரீனிகிங் உடன்படிக்கையின்படி ஆரஞ்சு விடுதலை இராச்சியம், டிரான்சுவால் மீது பிரித்தானியப் பேரரசின் இறையாண்மை
பிரிவினர்
ஐக்கிய இராச்சியம் பிரித்தானியப் பேரரசு  ஆரஞ்சு விடுதலை இராச்சியம்

 தென்னாப்பிரிக்கா

  • வெளிநாட்டுத் தன்னார்வலர்கள்[a]
தளபதிகள், தலைவர்கள்
ஐக்கிய இராச்சியம் சாலிசுபரி பிரபு
ஐக்கிய இராச்சியம் மில்னர் பிரபு
ஐக்கிய இராச்சியம் இராபர்ட்சு பிரபு
ஐக்கிய இராச்சியம் சேர் ரெட்வெர்சு புல்லர்
ஐக்கிய இராச்சியம் கிட்ச்சுனர் பிரபு
கனடா வில்பிரெடு லவுரியர்
கனடா பிரெடிரிக் போர்டென்]]
தென்னாபிரிக்கக் குடியரசு பவுல் குருகர்
தென்னாபிரிக்கக் குடியரசு லூயி போதா
தென்னாபிரிக்கக் குடியரசு ஷால்க் பர்கர்
தென்னாபிரிக்கக் குடியரசு கூசு டெ லா ரே
ஆரஞ்சு விடுதலை இராச்சியம் மார்ட்டினசு இசுடெய்ன்
ஆரஞ்சு விடுதலை இராச்சியம் கிறிஸ்டியன் டெ வெட்
தென்னாபிரிக்கக் குடியரசு பியெட் குரோன்யெ (போர்க் கைதி)
பலம்
பிரித்தானிய வழமையாளர்கள்:
347,000
குடியேற்றப்பகுதிப் படைகள்:
103,000–153,000[2]
88,000 (போரின் துவக்கத்தில் 25,000 டிரான்சுவால், 15,000 விடுதலை இராச்சிய பூர்கள்) (வெளிநாட்டுத் தன்னார்வலர்கள், கேப் பூர்கள்)[2]
இழப்புகள்
படைத்துறை இழப்புகள்:
21,144 மரணம் (7,894 சண்டையில்
13,250 நோயால்)
934 காணாமல் போனவர்
22,828 காயம்[3][4]
படைத்துறை இழப்புகள்:
9,098 மரணம் (4,000 சண்டையில்) (24,000 பூர் சிறைக்கைதிகள் கடல்கடந்து அனுப்பப்பட்டனர்)[2]

குடித்துறை இழப்புகள்: 27,927 பூர் குடிகள் வதைமுகாம்களில் இறந்தனர். தவிர, அறியப்படாத கருப்பின ஆபிரிக்கர்களின் எண்ணிக்கை (107,000 பேர் கட்டுப்பாட்டில்).[5]

பெயர் தொகு

திசம்பர் 1880 முதல் மார்ச் 1881 வரை நடைபெற்ற முதல் பூவர் போர் அவ்வளவாக அறியப்படாதமையால், இந்தப் போர் பொதுவாக பூவர் போர் அல்லது போயர்ப் போர் எனப்படுகின்றது. ஆபிரிகானா-பேசுகின்ற தென்னாப்பிரிக்க குடியேறிகளுக்கான பொதுவான பெயர் "பூர்" ஆகும். இது தென்னாப்பிரிக்காவிற்கு வெளியே தென்னாப்பிரிக்கப் போர் என்றும் தென்னாப்பிரிக்கர்களிடையே (இரண்டாம்) ஆங்கில-பூர் போர் என்றும் அறியப்படுகின்றது. ஆபிரிக்கான மொழியில் ஆங்கிலோ-பூரூர்லோகு ("ஆங்கிலோ-போயர் போர்"), டிவீட் பூரூர்லோகு ("இரண்டாம் போயர் போர்"), டிவீடு வ்ரை எட்சூர்லோகு ("இரண்டாம் விடுதலைப் போர்", அல்லது புரட்சிப் போர்) அல்லது இங்கிலீசு ஊர்லோகு ("இங்கிலீஷ் போர்") எனவும் அழைக்கப்படுகின்றது.[7]

போரின் கட்டங்கள் தொகு

இந்தப் போரை மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம். முதற்கட்டத்தில், நதால், கேப் குடியேற்றங்கள் அடங்கிய பிரித்தானிய ஆட்பகுதியில் பூர்கள் முன்தாக்குதல்கள் நடத்தினர்; லேடிசுமித் மாபெகிங், கிம்பர்லி கோட்டைகளை முற்றுகையிட்டனர். கொலென்சோ சண்டை, மாகெர்பொன்டன் சண்டை, இசுபியோன் கொப் சண்டை ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை ஈட்டினர்.

இரண்டாம் கட்டத்தில், பிரித்தானியப் படைகளை வலுவூட்டிய பிறகு 1900இல் இராபர்ட்சு பிரபு தலைமையில் பிரித்தானியா பெரிய தாக்குதலை நடத்தி பூர்களின் முற்றுகைகளை முறியடித்தது. நதாலையும் கேப் குடியேற்றத்தையும் பாதுகாத்துக் கொண்ட பிறகு டிரான்சுவாலையும் அதன் தலைநகர் பிரிட்டோரியாவையும் இலக்கு வைத்துப் படையெடுத்தனர்; இதில் வெற்றி கண்டு சூன் 1900இல் பிரிடோரியாவை கைப்பற்றினர்.

மூன்றாவது மற்றும் இறுதி கட்டங்களில் பூர்கள் பிரித்தானியப் படைகளுக்கு எதிராக கரந்தடிப் போர் முறையை பயன்படுத்தினர். இரண்டாண்டுகள் இவ்வாறு போரிட்ட பூர்கள் அக்காலத்தில் பிரித்தானியப் படைவீடுகளையும், தந்திக் கம்பங்கள், தொடர்வண்டி மற்றும் சேமக்கலங்களைத் தாக்கினர். போராளிகளுக்கு உணவு மறும் பிற தேவைகளை தடுக்கும் பொருட்டு கிட்ச்னர் தலைமையிலான பிரித்தானியர் தீய்ந்த நிலக்கொள்கையைப் பின்பற்றி பூர்களின் வயல்களை அழித்தனர்; மகளிர், சிறுவர்களை சிறைபிடித்து வதைமுகாம்களில் அடைத்தனர். [8]

இத்தகையப் போர்முறை குறுகிய காலத்திற்கே நீடிக்கும் என பிரித்தானிய அரசும் சில பத்திரிகையாளர்களும் எண்ணினர்; ஆனால் போர் நீண்டது. வதை முகாம்களில் இருந்த ஆபிரிகானர்ளில் 26,000 மகளிரும் சிறுவர்களும் நோயாலும் ஊட்டச்சத்துக் குறைபாட்டாலும் உயிரிழந்தனர். வதைமுகாம்களில் இழிநிலை குறித்த விமரிசனங்கள் அரசுக்குத் தலைவலியாக மாறின. பூர்கள் இறுதியாக சனிக்கிழமை, 31 மே 1902 அன்று சரண்டைந்து டிரான்சுவால், ஆரஞ்சு விடுதலை இராச்சியத்தின் 60 பிரதிநிதிகளில் 54 பேர் அமைதி உடன்பாட்டிற்கு வாக்களித்தனர்.[9] இந்த உடன்பாடு வெரீனிகிங் உடன்பாடு என்று அறியப்படுகின்றது. இந்த உடன்பாட்டின்படிஇரு குடியரசுகளும் பிரித்தானியப் பேரரசுடன் இணைந்தன; வருங்காலத்தில் இவ்விரு குடியரசுகளுக்கும் தன்னாட்சி வழங்கப்படும் என உறுதியளித்தது. இந்த உறுதிமொழியின்படியே 1910இல் தென்னாபிரிக்க ஒன்றியம் உருவானது.

பிரித்தானிய உள்நாட்டு அரசியலிலும் தென்னாப்பிரிக்காவிலும் இந்தப் போர் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பிரித்தானியாவின் மிகவும் செலவுமிக்க, நீண்ட போராகவும் (2015 ஆண்டு மதிப்பில் £200 மில்லியன், கிட்டத்தட்ட £22 பில்லியன்), 1815க்கும் 1914க்கும் இடையே மிக்க குருதி சிந்தியப் போராகவும் [10] இருந்தது.

மேற்சான்றுகளும் குறிப்புகளும் தொகு

  1. நெதர்லாந்து, செருமனி, சுவீடன்-நோர்வே நாடுகளிலிருந்து பெரும் எண்ணிக்கையிலும் அயர்லாந்து, ஆத்திரேலியா, இத்தாலி, போலந்து, பிரான்சு, பெல்ஜியம், உருசியப் பேரரசு, ஐக்கிய அமெரிக்கா மற்றும் டென்மார்க்கிலிருந்து சிறிய எண்ணிக்கைகளிலும் தன்னார்வலர்கள் போரில் பங்கேற்றனர்.

மேற்சான்றுகள் தொகு

உசாத்துணைகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_பூவர்_போர்&oldid=3533136" இருந்து மீள்விக்கப்பட்டது