தென்னாபிரிக்க ஒன்றியம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தென்னாபிரிக்க ஒன்றியம் (Union of South Africa) என்பது தற்போதைய தென்னாபிரிக்கக் குடியரசின் முன்னாளைய அமைப்பாகும். இவ்வொன்றியம் மே 31, 1910 இல் முன்னர் பிரித்தானியக் குடியேற்ற நாடுகளாயிருந்த கேப், நட்டால், டிரான்ஸ்வால், ஒரேஞ்சு தனி மாநிலம் ஆகியவற்றை இணைத்து இவ்வொன்றியத்தின் மாகாணங்களாக உருவாக்கப்பட்டது.
தென்னாபிரிக்க ஒன்றியம் Union of South Africa Unie van Suid-/Zuid-Afrika | ||||||
பொதுநலவாய அமைப்பு | ||||||
| ||||||
| ||||||
குறிக்கோள் Ex Unitate Vires (இலத்தீன்: ஒற்றுமையில் இருந்து, வலிமை} | ||||||
நாட்டுப்பண் Die Stem van Suid-Afrika | ||||||
தலைநகரம் | கேப் டவுன் (சட்டப்படி) பிரிட்டோரியா (நிர்வாக) Bloemfontein (நீதி) | |||||
மொழி(கள்) | ஆபிரிக்கான்ஸ், டச்சு, ஆங்கிலம் | |||||
அரசாங்கம் | அரச்சியலமைப்பு முடியாட்சி | |||||
அரசி | ||||||
- | 1952-1961 | இரண்டாம் எலிசபெத் | ||||
ஆளுநர் | ||||||
- | 1959-1961 | சார்ல்ஸ் ரொபேர்ட்ஸ் சுவார்ட் | ||||
பிரதமர் | ||||||
- | 1958-1961 | ஹெண்ட்ரிக் வேர்வோர்ட் | ||||
சட்டசபை | நாடாளுமன்றம் | |||||
- | Upper house | செனட் | ||||
- | Lower house | அசெம்பிளி | ||||
வரலாறு | ||||||
- | இணைப்பு | மே 31 1910 | ||||
- | வெஸ்ட்மின்ஸ்டர் சட்டம் | டிசம்பர் 11, 1931 | ||||
- | குடியரசு | மே 31 1961 | ||||
பரப்பளவு | ||||||
- | 1961 | 20,45,320 km² (7,89,702 sq mi) | ||||
மக்கள்தொகை | ||||||
- | 1961 est. | 1,82,16,000 | ||||
அடர்த்தி | 8.9 /km² (23.1 /sq mi) | |||||
நாணயம் | தென்னாபிரிக்க பவுன் |
இது முதலில் ஒரு தன்னாட்சி உரிமையுள்ள நாடாக (dominion) அமைக்கப்பட்டு பின்னர் பொதுநலவாயத்தில் இணைக்கப்பட்டது. இவ்வொன்றியம் மே 31, 1961 இல் கலைக்கப்பட்டு தென்னாபிரிக்கக் குடியரசு என்ற பெயரில் குடியரசானது.
சிறப்புகள்தொகு
கனடா, அவுஸ்திரேலியா போன்ற கூட்டமைப்புகள் போலல்லாமல் தென்னாபிரிக்க ஒன்றியம் ஒரு தனிநாடாக விளங்கியது. நான்கு குடியேற்ற நாடுகளினதும் நாடாளுமன்றங்கள் கலைக்கப்பட்டு அவை மாகாண அமைப்பாக மாற்றப்பட்டன. அசெம்பிளி, செனட் என இரு அவைகள் அமைக்கப்பட்டன. இவற்றின் உறுப்பினர்களை பொதுவாக நாட்டின் சிறுபான்மையினராக இருந்த வெள்ளையினத்தவர்களே தெரிவு செய்தனர்.