வியட்நாம் போர்
வியட்நாம் போர் (Vietnam War), (வியட்நாமியம்: Chiến tranh Việt Nam) அல்லது இரண்டாவது இந்தோ சீனப் போர்,[4] வியட்நாம் பகுதிகளில் அமெரிக்க எதிர்ப்புப் போர் (வியட்நாமியம்: Kháng chiến chống Mỹ) அல்லது சுருக்கமாக அமெரிக்கப் போர், வியட்நாம், லாவோசு மற்றும் கம்போடியாவில் 1965 இலிருந்து ஏப்ரல் 30, 1975ல் சைகானின் வீழ்ச்சி வரை நடைபெற்ற போரைக் குறிக்கும். சிலவேளைகளில் 1959 முதல் 1975 வரை இடம்பெற்ற நிகழ்வுகளை வியட்நாம் பிரச்சினை (Vietnam Conflict) என்று குறிப்பிடுவர். இப்போரானது அதிகாரப்பூர்வமாக வியட்நாம் சனநாயகக் குடியரசு (வட வியட்நாம்) க்கும் ஐக்கிய அமெரிக்காவின் ஆதரவுடன் வியட்நாம் குடியரசு (தென் வியட்நாம்) கும் இடையில் இடம்பெற்றது. வட வியட்நாம் படை சோவியத் ஒன்றியம், சீனா மற்றும் பிற கம்யூனிச நாடுகளால் ஆதரிக்கப்பட்டது, தெற்கு வியட்நாமியப் படை அமெரிக்கா, தென்கொரியா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து மற்றும் பிற கம்யூனிச எதிர்ப்பு அணியால்[5] ஆதரிக்கப்பட்டது. எனவே இப்போர் பனிப்போர் காலத்திய பதிலிப்போர் என்று கருதப்படுகிறது.[6]
வியட்நாம் போர் Vietnam War |
|||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
போரின் முடிவு: வியட் கொங் T-54 தாங்கி ஏப்ரல் 30, 1975 இல் அதிபர் மாளிகையின் வாயிலை உடைத்தெறிந்து முன்னேறுகிறது. |
|||||||||
|
|||||||||
பிரிவினர் | |||||||||
முதலாளித்துவப் படைகள்:
தென் வியட்நாம் ஆதரவளித்த நாடுகள்: | கம்யூனிசப் படைகள்
வட வியட்நாம் ஆதரவளித்த நாடுகள்: |
||||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||||
நியூவென் வான் தியூ நியோ டின் டியெம் ஜோன் கென்னடி லிண்டன் ஜோன்சன் ரொபேர்ட் மாக்னமாரா வில்லியம் வெஸ்ட்மோர்லாண்ட் ரிச்சார்ட் நிக்சன் ஜெரால்ட் ஃபோர்ட் கிரெய்ட்டன் ஆப்ராம்ஸ் | ஹோ ஷி மின் லெ டுவான் நியூவென் ஷி தான் வோ நியூவென் கியாப் டிரோங் நூ டாங் வான் டியென் டூங் டிரான் வான் டிரா டுவோங் வான் நூட் டோங் சி நியூவென் லெ டூக் ஆன் |
||||||||
பலம் | |||||||||
~1,200,000 (1968) ஐக்கிய அமெரிக்கா: 553,000 (1969) | ~520,000 (1968) | ||||||||
இழப்புகள் | |||||||||
தென் வியட்நாம் இறந்தோர்: ~250,000; காயமடைந்தோர்: ~1,170,000 ஐக்கிய அமெரிக்கா இறந்தோர்: 58,209; காணாமற்போனோர்: 2,000; காயமடைந்தோர்: 305,000 [1] தென் கொரியா இறந்தோர்: 4,900; காயமடைந்ந்தோர்: 11,000 ஆஸ்திரேலியா இறந்தோர்: 520; காயமடைந்தோர்: 2,400 நியூசிலாந்து இறந்தோர்: 37; காயமடைந்தோர்: 187 மொத்தமாக இறந்தோர்: ~314,000 மொத்தமாக காயமடைந்தோர்: ~1,490,000 | வட வியட்நாம் & NLF இறந்தோர்/காணாமற்போனோர்: ~1,100,000;[2] காயமடைந்தோர்: 600,000+[3] சீனா இறந்தோர்: 1,446; காயமடைந்தோர்: 4,200 மொத்தமாக இறந்தோர்: ~1,101,000 மொத்தமாக காயமடைந்தோர்: ~604,000+ |
||||||||
வியட்நாம் பொதுமக்களின் இழப்பு: 2,000,000–5,100,000* கம்போடியப் பொதுமக்களின் இழப்பு: ~700,000* லாவோஸ் பொதுமக்களின் இழப்பு: ~50,000* மொத்த பொது மக்கள் இழப்பு : 465,000–2,500,௦௦ மொத்த இழப்பு :1,102,000–3,886,026 |
வியட்டு காங் (தேசிய விடுதலை முன்னணி என்றும் அறியப்படுகிறது), வடக்கினால் ஆதரிக்கப்பட்ட ஒரு தெற்கு வியட்நாமிய கம்யூனிச முன்னணி, அப்பகுதியில் இருந்த கம்யூனிச எதிர்ப்பாளர்களுக்கு எதிராக கொரில்லா போர் முறையில் சண்டையிட்டது, அதேவேளையில், வியட்நாமின் மக்கள் படை, வடக்கு வியட்நாமிய இராணுவம் என்றும் அழைக்கப்படுகிறது, பெரும் படைகளுடன் வழக்கமான போர்முறையில் சண்டையிட்டது. போர் தொடர்ந்த போது வியட்டு காங்கின் இராணுவ நடவடிக்கைகள் குறைந்தது ஏனெனில் வடக்கு வியட்நாமிய இராணுவத்தின் பங்கு மற்றும் செயல்பாடுகளின் அதிகமாகின. அமெரிக்கா மற்றும் தெற்கு வியட்நாமிய படைகள், தேடி அழிக்கும் செயல்பாடுகளுக்கு, வான் வலிமை மற்றும் தரைப்படைகள், ஆட்டிலரி, வான்வழித் தாக்குதல்கள் போன்றவற்றைச் சார்ந்திருந்தன. போரின் போக்கில், அமெரிக்கா வட வியட்நாமின் மீது மிகப் பெரிய அளவில் திட்டமிட்ட வெடிகுண்டுத் தாக்குதல்களை நடத்தியது.
வட வியட்நாமிய படைகள் மற்றும் வியட்டு காங், வியட்நாமை மீண்டும் ஒருங்கிணைக்கப் போரிட்டன. அவர்கள் இப்பிரச்சினையை ஒரு காலனியாதிக்க போராகவும் பிரஞ்சு மற்றும் அமெரிக்கப் படைகளுக்கு எதிராக நடைபெற்ற முதலாவது இந்தோசீனா போரின் தொடர்ச்சியாகவும் பார்த்தனர். அமெரிக்கா அரசு இப்போரில் தங்களின் பங்கெடுப்பை தெற்கு வியட்நாமை கம்யூனிச அரசு கைப்பற்றுவதைத் தடுக்கும் ஒரு வழியாகப் பார்த்தது. மேலும் இது உலகம் முழுவதும் கம்யூனிசப் பரவலைத் தடுக்கும் ஒரு ஒடுக்குதல் கொள்கையாகும்.[7]
1950 களின் தொடக்கத்தில் அமெரிக்க இராணுவ ஆலோசகர்கள் அப்போதைய பிரஞ்சு இந்தோசீனாவிற்கு[8] வந்தனர். 1960களில் அமெரிக்க படைகளில் பங்கு, 1961 மற்றும் 1962இல் படைகளை மும்மடங்காக்கியதுடன் அதிகமாகியது. அமெரிக்கா படைகளில் பங்கு 1964இல் டோகின் வளைகுடாவில் வடக்கு வியட்நாமியப் படையின் விரைவுப் படகுடன் அமெரிக்காவின் அழிப்பு போர்க்கப்பல் மோதிய நிழ்வுக்குப் பின் இன்னும் அதிகமாகியது. அதைத் தொடர்ந்து வியட்நாமில் அமெரிக்கப் படைகளின் இருப்பை அதிகப்படுத்தும் அதிகாரத்தை அமெரிக்க அதிபருக்கு வழங்கும் டோகின் வளைகுடாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1965இன் தொடக்கத்தில் அமெரிக்க தாக்குதல் படைகள் தொடர்ந்து வியட்நாமில் நிலைநிறுத்தப்பட்டன. அவற்றின் தாக்குதல்கள் பன்னாட்டு எல்லைக்கோட்டையும் தாண்டியது: 1968 இல் அமெரிக்காவின் பங்கெடுப்பு உச்சத்தில் இருந்தபோது லாவோசு மற்றும் கம்போடியாவின் எல்லைப் பகுதிகளிலும் கடுமையாக வெடிகுண்டுகள் வீசப்பட்டன. அதேவேளையில் வியட்நாமிய கம்யூனிசப் படை எதிர் தாக்குதல்களைத் (Tet Offensive) தொடங்கியது. இந்த எதிர்தாக்குதல்கள் அதன் இலக்கான தெற்கு வியட்நாம் அரசை பதவியிலிருந்து விலக்குவதில் தோல்வியுற்றது, ஆனால் இது போரின் மிக முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. தெற்கு வியட்நாமிற்கு பல ஆண்டுகள் இராணுவ உதவி செய்திருந்தாலும், இந்தப் போரில் அமெரிக்க அரசு வெற்றியை நோக்கி நகர்கிறது என்ற அரசின் வாதம் கற்பனையானது என்பதை இந்த எதிர்தாக்குதல் பெரும்பான்மையான அமெரிக்க மக்களுக்கு உணர்த்தின.
வடக்கு வியட்நாமின் கம்யூனிசிப் படையினை எதிர்த்துப் போர் புரிவதை தெற்கு வியட்நாமிடமே ஒப்படைக்கும், "வியட்நாமியமாக்கல்" கொள்கையின் ஒரு பகுதியாக அமெரிக்கப் படைகள் படிப்படியாக பின்வாங்கின. 1973இல் அனைத்து தரப்பினரும் கையெழுத்த பாரிசு அமைதி ஒப்பந்தத்திற்குப் பின்னும் போர் தொடர்ந்தது. அமெரிக்கா மற்றும் மேற்கத்திய உலகில் ஒரு எதிர்ப்புக் கலாச்சாரமாக வியட்நாம் போர் எதிர்ப்பு இயக்கம் பெருமளவில் தோன்றியது.
1973, ஆகஸ்ட் 15 அமெரிக்கப்படைகள் முழுமையாகப் பின்வாங்கின.[9] 1975 வடக்கு வியட்நாம் படை சைகானைக் கைப்பற்றயதுடன் போர் முடிவுக்கு வந்தது. அதை அடுத்த ஆண்டில் வடக்கு மற்றும் தெற்கு வியட்நாம் ஒன்றிணைந்தது.
இப்போர் பெருமளவும மனித உயிர்களைப் பலிவாங்கியது. இப்போரின் போது இறந்த வியட்நாமிய வீரர்கள் மற்றும் மக்களின் தோராயமான எண்ணிக்கை 966,000[10] இலிருந்து 3.8 மில்லியன்கள்[11] வரை இருக்கும். 240,000 - 300,000 கம்போடியர்களும்,[12][13] 20000 - 62,000 லாவோசு மக்கள்,[11] 58,220 அமெரிக்க வீரர்களும் இப்பிரச்சினைகளில் கொல்லப்பட்டனர், மேலும் காணாமல் போன 1626 நபர்கள் இன்றும் கிடைக்கவில்லை.
போரின் பெயர்
தொகுஇந்தப் போருக்குப் பல பெயர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இப் போர் பொதுவாக வியட்நாம் போர் என்றே ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்றது. சிலவேளைகளில் இரண்டாம் இந்தோசீனப் போர் மற்றும் வியட்நாம் முரண்பாடு எனவும் அழைக்கப்படுகின்றது.
இந்தோசீனப் பிராந்தியத்தில் பல முரண்பாடுகள் நடைபெற்றுள்ளதால் வேறு போர்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக இப்போரின் தலைமை எதிர்ப்பாளர்களான வியட்நாமின் பெயரை இப்போருக்குப் பெயரிட்டனர்.[14] வியட்நாமிய மொழியில் இப்போர் பரவலாக 'காங் செயின் சோங் மை' (அமெரிக்காவிற்கு எதிரான எதிர்ப்பு போர்) என்று அறியப்படுகிறது, சுருக்கமாக 'சூ சென் டிரான் மை' (அமெரிக்கப்போர்) என்றும் அழைக்கப்படுகிறது. சில வேளைகளில் 'சென் திரான் வியட்நாம்' (வியட்நாம் போர்) என்றும் அழைக்கப்படுகிறது.[15]
1949 ஆம் ஆண்டு பின்னணி
தொகுபிரான்சு 1850 களின் இறுதியில் இந்தோசீனத்தைக் கைப்பற்றத் தொடங்கியதுடன், 1893 ஆம் ஆண்டளவில் சமாதானத்தை நிறைவு செய்தது. 1884 ஆம் ஆண்டில் சாயல் உடன்படிக்கையின் அடிப்படையில் வியட்நாமில் ஏழு தசாப்தங்களுக்கு பிரெஞ்சுக் காலனித்துவ ஆட்சியை மேற்கொண்டது. தற்போது கம்போடியா மற்றும் வியட்நாம் நாடுகளை உள்ளடக்கிய பிரதேசம் 1888 இல் பிரெஞ்சு இந்தோ சீனக் குடியேற்றமாக்கப்பட்டது. பின்னர் இக்குடியேற்றத்தில் லாவோசும் இணைக்கப்பட்டது.
போர்க்குற்றங்கள்
தொகுவியட்நாம் போரின் போது பாரிய எண்ணிக்கையான போர்க்குற்றங்கள் நடைபெற்றன. இப் போரின்போது இருதரப்பினராலும் கற்பழிப்பு, குடிமக்கள் படுகொலை, பொதுமக்களை குறிவைத்து குண்டு வீச்சுகள், பயங்கரவாதம், சித்திரவதை மற்றும் போர்க் கைதிகள் கொலை போன்ற பரவலான போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டன. அத்துடன் மேலதிக பொதுக் குற்றங்களான திருட்டு, தீ வைப்பு, மற்றும் சொத்துக்களை அழித்தல் போன்றவையும் இடம்பெற்றன.
இப்போரில் காடுகளில் மறைந்து வந்து தாக்கிய வியட்காங் கொரில்லா போராளிகளின் மறைவிடங்களை அழிக்க, அமெரிக்க இராணுவம் வியட்நாம் காடுகளை அழிக்க ஏஜன்ட் ஆரஞ்ச் எனும் நச்சு அமிலத்தை வான் வழியாக காடுகளின் மீது பெய்து, வேதித் தாக்குதல் நடத்தினர். இந்த நச்சு அமிலத்தால் வியட்நாம் காடுகள் அழிந்தததுடன், வியட்நாம் மக்கள் உடல் அளவில் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். அமெரிக்காவின் இந்த நச்சு வேதித் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட வியட்நாமியர், பிரான்சு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து நட்ட ஈடு கோரி வருகின்றனர்.[16]
குறிப்புகள்
தொகு- ↑ "சம்மர்ஸ் Jr, ஹரி ஜி.; வியட்நாம் போர் பஞ்சாங்கம் (1985: நியூ யோர்க்: Facts on File Publications, 1985) ப. 113, cited in Record, Jeffrey & Terrill, Andrew W.; Iraq and Vietnam: Differences, Similarities and Insights, (2004: Strategic Studies Institute)" (PDF). Archived from the original (PDF) on 2016-02-13. பார்க்கப்பட்ட நாள் 2008-01-25.
- ↑ [1] [2] பரணிடப்பட்டது 2015-01-30 at the வந்தவழி இயந்திரம் [3] பரணிடப்பட்டது 2010-01-05 at the வந்தவழி இயந்திரம் [4] பரணிடப்பட்டது 2016-02-13 at the வந்தவழி இயந்திரம்
- ↑ [5]
- ↑ Factasy. "The Vietnam War or Second Indochina War". PRLog. பார்க்கப்பட்ட நாள் 29 June 2013.
- ↑ "Vietnam War". Encyclopædia Britannica. பார்க்கப்பட்ட நாள் 5 March 2008.
Meanwhile, the United States, its military demoralized and its civilian electorate deeply divided, began a process of coming to terms with defeat in its longest and most controversial war
- ↑ Lind, Michael (1999). "Vietnam, The Necessary War: A Reinterpretation of America's Most Disastrous Military Conflict". New York Times. பார்க்கப்பட்ட நாள் 17 January 2014.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ Digital History; Steven Mintz. "The Vietnam War". Digitalhistory.uh.edu. Archived from the original on 30 October 2011. பார்க்கப்பட்ட நாள் 31 October 2011.
- ↑ Major General George S. Eckhardt, Vietnam Studies Command and Control 1950–1969 பரணிடப்பட்டது 2017-10-19 at the வந்தவழி இயந்திரம், Department of the Army, Washington, D.C. (1991), p. 6
- ↑ Kolko 1985, ப. 457, 461ff.
- ↑ Charles Hirschman et al., "Vietnamese Casualties During the American War: A New Estimate," Population and Development Review, December 1995.
- ↑ 11.0 11.1 Obermeyer, Murray & Gakidou 2008.
- ↑ Heuveline, Patrick (2001). "The Demographic Analysis of Mortality in Cambodia". Forced Migration and Mortality. National Academy Press. pp. 102–104, 120, 124. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780309073349.
As best as can now be estimated, over two million Cambodians died during the 1970s because of the political events of the decade, the vast majority of them during the mere four years of the 'Khmer Rouge' regime. ... Subsequent reevaluations of the demographic data situated the death toll for the [civil war] in the order of 300,000 or less.
- ↑ Banister, Judith; Johnson, E. Paige (1993). "After the Nightmare: The Population of Cambodia". Genocide and Democracy in Cambodia: The Khmer Rouge, the United Nations and the International Community. Yale University Southeast Asia Studies. p. 87. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780938692492.
An estimated 275,000 excess deaths. We have modeled the highest mortality we can justify for the early 1970s.
- ↑ Moore, Harold. G and Joseph L. Galloway We Are Soldiers Still: A Journey Back to the Battlefields of Vietnam (p. 57).
- ↑ "Asian-Nation: Asian American History, Demographics, & Issues:: The American / Viet Nam War". பார்க்கப்பட்ட நாள் 18 August 2008.
The Viet Nam War is also called 'The American War' by the Vietnamese
- ↑ வியட்நாம் போரில் அமெரிக்கா பயன்படுத்திய ஏஜென்ட் ஆரெஞ்ச் வேதி தாக்குதல்: பிரான்ஸ் நீதிமன்றம் விசாரணை
வெளி இணைப்புகள்
தொகு- வியட்நாம் போர் கையேடு பரணிடப்பட்டது 2018-04-01 at the வந்தவழி இயந்திரம்
- வியட்நாமில் அமெரிக்க இராணுவம்
- வியட்நாம் போர் காலக்கோடு பரணிடப்பட்டது 2005-04-03 at the வந்தவழி இயந்திரம்
- வியட்நாம் போர் முடிந்து 40 ஆண்டுகள்
- வியட்நாம் போர் விட்டுச் சென்ற வடுக்கள் – காணொளி
- யுத்த கொடூரத்தை உலகுக்கு உணர்த்திய வலிக்கு நாற்பது ஆண்டுக்குப் பின் சிகிச்சை