வியட்நாமிய மொழி
(வியட்நாமியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வியட்நாமிய மொழி வியட்நாமின் ஏற்பு பெற்ற அரசு மொழி. இந் நாட்டில் வாழும் 86% மக்கள் வியட்நாமிய மொழியையே பேசுகிறார்கள். உலகளாவிய பரப்பில் ஏறத்தாழ 73 மில்லியன் மக்கள் வியட்நாமிய மொழியைப் பேசுகிறார்கள். வியட்நாமுக்கு வெளியே வாழும் இம்மொழி பேசுபவர்களில் பெரும்பான்மையோர் அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள்.
வியட்நாமிய மொழி | |
---|---|
டியெங் வியெட் (tiếng Việt) | |
உச்சரிப்பு | tiɜŋ₃₅ vḭɜt₃₁ (வட) tiɜŋ₃₅ jḭɜk₃₁ (தென்) |
நாடு(கள்) | வியட்நாம் அமெரிக்கா கம்போடியா பிரான்ஸ் ஆத்திரேலியா கனடா |
பிராந்தியம் | தென்கிழக்கு ஆசியா |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 70-73 மில்லியன் தாய்மொழியாக (3 மில்லியன் வெளிநாடுகளில் சேர்த்து) 80 மில்லியன் மொத்தம் (date missing) |
இலத்தீன் அகரவரிசை (quốc ngữ) | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | வியட்நாம் |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | vi |
ISO 639-2 | vie |
ISO 639-3 | vie |
வியட்நாமிய மொழி, ஆஸ்திரோ-ஆசிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. இக்குடும்பத்திலுள்ள மொழிகளுள் மிகப் பெரியது. இக்குடும்பத்தின் ஏனைய மொழிகள் பேசுவோரின் மொத்த அளவிலும் பல மடங்கு மக்கள் தொகை கொண்டது இம் மொழி.
இம்மொழியின் பெருமளவு சொற்கள் சீன மொழியில் இருந்து பெறப்பட்டவை. ஆரம்பத்தில் சீன எழுத்துமுறை மூலம் எழுதப்பட்டது. இப்போது இலத்தீன் எழுத்துமுறை மூலம் எழுதப் பயன்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Debated, but still generally accepted.