முதன்மை பட்டியைத் திறக்கவும்

ஜேம்ஸ் ஆலன்

"ஜேம்ஸ் ஆலன்"தொகு

ஜேம்ஸ் ஆலன் (28 நவம்பர் 1864 - 24 சனவரி 1912) ஆங்கில தத்துவ எழுத்தாளர், சுய முன்னேற்றம் மற்றும் உத்வேகம் அளிக்கும் புத்தகங்கள் எழுதுவதில் வல்லவராக அறியப்படுபவர். 1903 ஆண்டு வெளிவந்து பெருமளவில் விற்றகப்பட்ட "ஒரு மனிதனின் சிந்தனையில்" என்ற சிந்தனையில் என்ற புத்தகம் இவருக்கு பெருமையை தேடித் தந்தது. இப்புத்தகம் சுய முன்னேற்றம் சார்ந்து உத்வேகம் அளித்து பல எழுத்தாளர்களை ஊக்குவித்தது.

இங்கிலாந்தின் லீசெஸ்டர் பகுதியில் ஏழ்மை குடும்பத்தில் பிறந்தார். தனது 15 ஆம் வயதில் தந்தையை இழந்ததனால் பள்ளிப் படிப்பை துறந்து வேலைக்கு சென்றார்.1893 ல் லண்டன் சென்று பத்திரிகை துறையில் பணியாற்றுகையில், எழுதுவதில் ஆர்வம் ஏற்பட்டது. 1902 ல் "வறுமையிலிருந்து பலத்திற்கு" என்ற முதல் படைப்பை வெளியிட்டு அது முதற்கொண்டு பல நூல்களை எழுதினார், அதிலும் 1903 ல் எழுதிய "ஒரு மனிதனின் சிந்தனையில்" என்ற சிந்தனையில் என்ற புத்தகத்தில் உத்வேக கருத்திகளினால் அப்புத்தகம் உலகம் முழுவதும் பிரபலமானது.

அவர் தனது வாழ்க்கை அனுபவித்திலிருந்தே மனிதன் வாழத் தேவையான உண்மைகளை எழுதினார். 1912 ல் இறக்கும் வரை தொடர்ந்து எழுதி வந்தார்.

மேற்கோள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேம்ஸ்_ஆலன்&oldid=2375324" இருந்து மீள்விக்கப்பட்டது