ஜோசெலின் பெல் பர்னல்

டேம் (சுசான்) ஜோசெலின் பெல் பர்னல் (dame (susan) Jocelyn Bell Burnell, (பிறப்பு 15 ஜூலை 1943) ஒரு வட அயர்லாந்து வானியலாளர்


டேம் (சுசான்) சோசெலின் பெல் பரனல் (dame (susan) Jocelyn Bell Burnell, (பிறப்பு 15 சூலை 1943) ஒரு வட அயர்லாந்து வானியலாளர்.முத்வர் பட்ட்த்துக்குப் படிக்கும்போதே இவர் தனது ஆய்வின் வழிகாட்டி அந்தோனி ஃஎவிசின் உதவியுடன் கதிர்வீச்சுத் துடிவிண்மீன்களைக் கண்டுபிடித்தார்,[3][4] இதற்காக எவிசு இயற்பியலுக்கான நோபல் பரிசை மார்ட்டின் இரைலுடன் இணைந்து பெற்றார். ஆனால் பெல் பர்னல் தான் முதன்முதலாக துடிவிண்மீன்களை நோக்கியது மட்டுமன்றி, பகுப்பாய்வும் செய்திருந்தும் தவிர்க்கப்பட்டார்.[6] இவர் 2002 முதல் 2004 வரை அரசு வானியல் கழகத் தலைவராக இருந்தார்; மேலும் 2008 அக்தோபர் முதல் 2010 அக்தோபர் வரை இயற்பியல்க் கழகத் தலைவராக இருந்தார். இவரது பின்ன்னவராகிய மார்சல் சுட்டோன்காம் இறந்ததும் 2011 வரை இடைநிலைத் தலிவராக இருந்துள்ளார். இவருக்குப் பின்னால் இப்பதவியை சர் பீட்டர் நைட் ஏற்றார்.[7] இவர் 2014 அக்தோபரில் எடிபர்கு அரசு வானியல் கழகத் தலைமையை சர் ஜான் ஆர்புத்நாட்டுக்குப் பின்னால் தெர்வு செய்யப்பட்டார். இவர் 2013 மார்ச்சில் டப்லின் பல்கலைக்கழகத்தின் வேந்தராகத் தேர்வானார்.

சோசெலின் பெல் பரனல்
Dame Jocelyn Bell Burnell
பெல் பரனல், 2009
பிறப்புசுசான் சோசெலின் பெல்
15 சூலை 1943 (1943-07-15) (அகவை 81)[1]
பெல்பாசுட்டு, வட அயர்லாந்து
தேசியம்பிரித்தானியர்
துறைவானியற்பியல்
பணியிடங்கள்
கல்வி கற்ற இடங்கள்
  • கிளாசுகோ பல்கலைக்கழகம்
  • முரே எட்வார்ட்சு கல்லூரி, கேம்பிரிட்சு
ஆய்வேடுஒளிக்கோட்ட முறையால் கதிர்வீச்சு வாயில்களின் விட்டத்தை அளத்தல். (1968)
ஆய்வு நெறியாளர்அந்தோனி எவிசு[2][3][4]
அறியப்படுவதுமுதல் 4 துடிவிண்மீன்களைக் கண்டுபிடித்தமைக்காக
தாக்கம் 
செலுத்தியோர்
பிரெட் ஓயில் Frontiers of Astronomy (1955)
விருதுகள்எர்ழ்செல் பதக்கம் (1989)
அரசு கழக ஆய்வுறுப்பினர் (2003)
பிரித்தானியப் பேர்ரசுப் பட்டயம் (2007)
இணையதளம்
இணையதளம்

துடிமீன்களின் கண்டுபிடிப்புக்கான ஆய்வுக் கட்டுரையின் ஆசிரியர்கள் ஐவர் ஆவர். இவரில் முதலில் எவிழ்சின் பெயரும் இரண்டாவதாக பெல் பர்னலின் பெயரும் அமைந்திருந்தது. எவிழ்சுக்கு மார்ட்டின் இரைலுடன் இணைந்து நோபல் பரிசு வழங்கப்பட்டது. பெல் பர்னலின் பெயர் இணைக் கண்டுபிடிப்பாளராக நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்படாமல் விடுபட்டது. பல பெயர்பெற்ற வானியலாளர்கள் இவரது பெயர் விடுபட்டதற்காகவும் சர் பிரெடு ஆயிலின் பெயரைச் சேர்த்ததற்காகவும் எதிர்ப்பு தெரிவித்தனர்.[8][9] சுவீடிய அரசு அறிவியல் கல்விக்கழகம் தனது 1974 ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசுக்கான ஊடக வெளியீட்டில்,[10] இரைலுக்கு அவரது கதிர்வானியல் முன்னோடிப் பணிக்காகமும் எவிழ்சுக்கு துடிவிண்மீன் கண்டுப்புபிடிப்புக்காகவும் இஅயற்பியல் நோபல் பரிசு வழங்கியதாக குறிப்பிட்டது.[10] ஆனால், முன்னமே 1972 ஆம் ஆண்டில் புரூசு பதக்கம் பெற்ற முனைவர் அயோசிப் சுக்லோவ்சுகி, 1970 ஆம் ஆண்டு பன்னாட்டு வானியல் ஒன்றிய ப் பொதுமன்றத்தில் "செல்வி பெல்! தாங்கள் இந்த இருபதாம் நூற்றாண்டின் அரிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளீர்கள்" எனப் பாராட்டியுள்ளார்[11]

பின்னணியும் குடும்ப வாழ்க்கையும்

தொகு
 
சுசான் ஜோசெலின் பெல், ஜூன் 1967

இவர் வடக்கு அயர்லாந்தில் உள்ள பெல்பாசுட்டில் பிறந்தார்ரிவரது தந்தையார் கட்டிடக்கவி அறிஞர் ஆவார். இவர் ஆர்மாகு கோளரங்கத்தை வடிவமைக்க உதவியுள்ளார்.[12] இளமையிலேயே விரைவில் பெல் வானியல் நூல்களைப் படிக்க தொடங்கியுள்ளார். இவர் உலுர்கானில் வளர்ந்தார்; உலுர்கான் கல்லூரியில் படித்தார். மற்ற பெண்களைப் போலவே இவரையும் அறிவியல் பாடம் எடுத்து படிக்க விடவில்லை. எனவே இவர்து பெற்றோரும் பிறரும் கல்லூரி அட்சியதிகார அமைப்பின் கொள்கையை எதிர்த்தனர். அதற்கு முன்பு பெண்கள் சமையலும் தையலும் மட்டுமே கற்பிக்கப்பட்டனர். இவர் 11+ தேர்வில் தேர்வு பெறாமையால், இவரை பெற்றோர் யார்க் நகர மவுண்ட் பள்ளியில் சேர்த்தனர்,[1] இது குவேக்கர் நட்த்திய தங்கி வசிக்கும் பள்ளிக்கூடம் ஆகும்.[13] இங்கு இவர் தன் இயற்பியல் ஆசிரியரான தில்லோத்துவால் மிக்வும் கவரப்பட்டுள்ளார். இவர் பெல்லுக்கு நீ பேரளவு தகவல்களைப் படிப்பதில் பயனில்லை; ஆனால் சில கோட்பாடுகளைக் கற்றாலே போதும்; அவற்றைப் பயன்படுத்தி மற்ரவற்ரைக் கொணரலாம் என அறிவுறுத்தியுள்ளார். பெல் கூறுகிறார்: இவர் சிறந்த இயற்பியல் ஆசிரியர்; உண்மையிலேயே இவர் இயற்பியலில் எனக்கு நல்லதொரு வழிகாட்டியானார். [சான்று தேவை]}} யாக்குவி பார்ன்காம் இயக்கிய அழகிய உள்ளங்கள் எனும் பிரித்தானிய ஒலிபரப்பு அலைவரிசை-4 இல் வெளியிடப்பட்ட முப்பகுதித் தொடரின் முதல் பகுதி பெல்லின் வானியல் வாழ்க்கையையும் பங்களிப்பையும் விரிவாக அறிய முயல்கிறது.[14]

கல்விப்பணி

தொகு
 
நண்டு வளிம ஒண்முகிலின் ஒளியியல்/X-கதிர் கூட்டுப் படிமம். துடிமீன் காற்று வளிம ஒண்முகிலைச் சூழ்ந்துள்ள ஒத்தியங்குமுடுக்கி உமிழ்வைக் காட்டுகிறது. இது மைய துடிமீன் உட்செலுத்தும் துகள்களாலும் காந்தப் புலங்களாலும் ஆற்றல் ஊட்டப்படுகிறது.

பெல் 1965 இல் கிளாசுகோ பல்கலைக்கழகத்தில் தன் இளம் அறிவியல் பட்டத்தை இயற்கை மெய்யியல் (இயற்பியல்) துறையில் பெற்றார். இவர் தன் முனைவர் பட்டத்தை 1969 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பெற்றார். கேம்பிரிட்ஜில் இவர் முரே எட்வார்ட்சு கல்லூரியில் எவிழ்சுவுடனும் பிறருடனும் பணிபுரிந்து கதிர்த் தொலைநோக்கி கட்டுமானத்தில் ஈடுபட்டார்.[15] இது பகுதி உடுக்கண இடைவெளி கதிர்வாயில்களைக் கண்டறிய கோளிடை மினுக்கங்களைப் பயன்படுத்தியது. இந்த கதிர்வீச்சு வாயில்கள் அண்மையில் கோளிடை மினுக்கங்களைப் பயன்படுத்தி விரிவான ஒளிர்பவற்றில் இருந்து குறுவாயில்களை தனித்துப் பிரித்துக் கண்டறியப்பட்டனவாகும். இவர் 1967 ஜூலையில் வானத்தில் விண்மீன்களைப் பின்பற்றிய தனது அட்டவணைப் பதிவுத் தாள்களில் ஒளித்துடிப்புக் குறிகைத் துணுக்கைக் கண்டார்.[16] இந்தக் குறிகை நொடிக்கொரு முறை ஒழுங்காகத் துடிப்பதைக் கண்ணுற்றார். தற்காலிகமாக இதற்குச் "சின்னப் பச்சை மாந்தன் 1" " (LGM-1) " எனப் பெயரிட்டார். இந்த வாயில் இப்போது PSR B1919+21 என வழங்கப்படுகிறது. இது ஒரு வேகமாகச் சுழலும் நொதுமி விண்மீனமென இனங்காணப் பட்டுள்ளது. இந்தத் தகவல் பின்னர் பிரித்தானிய ஒலிபரப்பின் தொடுவானம் தொடரில் ஆவணப்படுத்தப்பட்டது (தொகுப்பு http://www.bbc.co.uk/programmes/p009s61s).

பெல் 1968 முதல் 1973 வரை சவுதாம்ப்டன் பல்கலைக்கழகத்திலும் 1974 முதல் 1982 வரை இலண்டன் பல்கலைக்கழக்க் கல்லூரியிலும் 1982 முதல் 1991 வரை எடின்பர்கு அரசு வான்காணகத்திலும் பணிபுரிந்தார். மேலும் இவர் 1973 முதல் 1987 வரை, பயிற்றுந்ராகவும் அறிவுரைஞராகவும் தேர்வாளராகவும் விரிவுரையாளராகவும் திறந்தவெளிப் பல்கலைக்கழகத்திலும் பணிபுரிந்துள்ளார்.[17] இவர் 1991 முதல் 2001 வரை திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக இருந்துள்ளார். இவர் அமெரிக்கப் பிரின்சுடன் பல்கலைக்கழக வருகைதரு பேராசிரியரும் ஆவார். இவர் 2001முதல் 2004 வரை பாத் பல்கலைக்கழக அறிவியல் துறைப் புலமுதல்வராகவும் இருந்தார்,[18] இவர் 2002 முதல் 2004 வரை அரசு வானியல் கழகத்தின் தலைவர்ரக இருந்தார். இவர் இப்போது ஆக்சுபோர்டு பல்கலைக்கழக வருகைதரு வானியற்பியல் பேராசிரியராகவும் மேன்சுபீல்டு கல்லூரி ஆய்வுறுப்பினராகவும் உள்ளார்.[19] இவர் 2008 முதல் 2010 வரை இயற்பியல் நிறுவனத்தின் தலைவ்ராகவும் இருந்துள்ளார்.[20]

கல்விசாரா வாழ்க்கை

தொகு

பெல் பல்லிமேனாவில் உள்ள கெம்பிரிட்ஜ் இல்ல இலக்கணப் பள்ளியின் புரவலர் ஆவார். இவர் இயற்பியலிலும் வானியலிலும் மகளிர் மேம்பாட்டுக்காகவும் இத்துறைகளின் மகளிர் எண்ணிக்கை உயரவும் தொடர்ந்த முனைவானச் செய்ல்பாட்டில் உள்ளவர்.[21][22]


சமயச் செயல்பாடுகளும் நம்பிக்கைகளும்

தொகு

இவர் பள்ளிக் காலத்தில் இருந்தே நண்பர் சமயக் கழகத்தின் (குவேக்கர் அமைப்பின்) முனைவுமிக்க செயல்பஆலராக இருந்து வந்துள்ளார். இவர் 1995, 1996, 1997 ஆம் ஆண்டுகளில் பிரித்தானியாவில் நிகழ்ந்த ஆண்டுக் கூட்டங்களில் எழுத்தராகச் செயல்பட்டார். இவர் வாழ்க்கைக்கான முறிவு எனும் தலைப்பில் சுவர்த்மோர் விரிவுரை ஆற்றியுள்ளர்;[23] இந்த உரை 1989 ஆகத்து 1 இல் அபர்தீனில் நடந்த பிரித்தானிய ஆண்டுக் கூட்ட்த்தில் ஆற்றப்பட்டது. இவர் அமெரிக்காவில் 2000 இல் நடந்த நண்பர் பொதுக் கருத்தரங்கின் முதன்மைப் பேச்சாளர் ஆவார்.

இவர் 2006 இல் யோவான் பேக்வெல் எடுத்த நேர்காணலில் தன் சொந்த சமய நம்பிக்க்கைகளின் வரலாற்றைப் புலப்படுத்தினார்.[24] இவர் குவேக்கர் அமைதி சமூகச் சாட்சி குழுக்களில் செயல்பட்டுள்ளார்; இது குவேக்கர் சாட்சியங்களில் ஈடுபடுதல்: ஒரு கருவியேடு எனும் ஆவணத்தை 2007 பிப்ரவரியில் வெளியிட்டது.[25] இவர் 2013 இல் ஜேம்சு பேக்கவுசு விரிவுரை ஆற்றினார். இது A Quaker Astronomer Reflects: Can a Scientist Also Be Religious? எனும் நூலில் வெளியைடப்பட்டுள்ளது. இதில் இவர் அண்டவியல் அறிவை விவிலிய்ம், குவேக்கரியம், கிறித்தவ நம்பிக்கை நிலைகளில் இருந்து விளக்கலாம் என விளக்கியுள்ளார்.[26]

நோபல் பரிசு

தொகு

பெல் 1974 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசுக்குக் கருதப்படாமை அப்போதிலிருந்தே கருத்துப் பூசலில் இருந்துவருகிறது. இவர்[27] tநான்கு ஏக்கர் கதிர்த்தொலைநோக்கியின் கட்டுமானத்துக்கு இரண்டாண்டுகள் உதவியுள்ளார். இவர் தான் ஒவ்வொரு இரவிலும் 96 அடி நீளத் தரவுத்தாளைப் பார்வையிட்டு அதில் உள்ள பிறழ்வை முதலில் சுட்டிக்காட்டியவர் ஆவார். இவர் பின்னர் தான் எவிழ்சுவின் ஐயுறவுக்கு எதிராகப் போராடி உண்மையை வற்புறுத்தியிருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். எவிழ்சு முதலில் இந்தப் பிறழ்வை மாந்த்ப் பிழைதான் எனக் கருதியும் கூறியும் உள்ளார். இவர் அழைக்கப்படாத எவிழ்சு, இரைல் கூட்டங்களிலும் இதைப் பெல் விளக்கிப் பேசியுள்ளார்.[28] சர் பிரெடு அயில் நோபல் குழுமத்தை இவருக்கு நோபல் பரிசு வழங்காதமைக்காக வைதுள்ளார்; எவிழ்சு பெல்லின் தரவுகளைத் திருடிவிட்டதாகவும் பழிசுமத்தியுள்ளார். ( இதனால் தான் போலும் இவருக்கு 1983 நோபல் பரிசு வழங்கப்படவில்லை. அதில் இருந்து ஆயிலும் விலக்கப்பட்டுள்ளார்).[29]

என்றாலும், பெல்லும் தன்பெயர் விடுபட்டதையும் தனக்கிழைக்கப்பட்ட அவமானத்தையும் கேட்கத் தயங்கினார். இவர் 1977 ஒருநாள் மதிய் உணவின்போது பின்வருமாறு நோபல் பரிசு பற்றிய தன் கருத்தை வெளிப்படையாக்க் கூறியுள்ளார்::

இதைப் பற்றி பல கருத்துகளை தெரிவிக்க நான் விரும்புகிறேன்: முதலாவதாக, மேற்பார்வையாளருக்கும் மாணவருக்கும் இடையிலான ஆய்வுச் சச்சரவுகளைப் பிரித்துணர்வதும் தீர்ப்பதும் அரிது அல்லது பலவேளைகளில் அவற்றைத் தீர்க்கவே முடியாது. இரண்டாவதாக, திட்டத்தின் வெற்றி அல்லது தோல்விக்கு மேற்பார்வையாளரே பொறுப்பேற்கவேண்டும். ஆனால், மாணரைக் குறைச்சொல்லும் அல்லது மாணவர்பால் பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் பல நேர்வுகளை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்; உண்மையில் தோல்வி பெரும்பாலும் மேற்பார்வையாளரது தவறாகவே இருத்தலையும் நாம் அறிந்துள்ளோம். திட்ட வெற்றிகளில் அவர் கட்டாயமாகப் பலனடையவேண்டும் என்பதும் நேரியதே எனலாம். மூன்றாவதாக, சில விதிவிலக்குகளைத் தவிர, ஆய்வு மாணவருக்கு நோபல் பரிசு வழங்குவது நோபல் பரிசுகளின் தகுதிக்கே இழுக்காகிவிடும் என்பதையும் நான் நம்புகிறேன். ஆனால், இயல்பான பொது நேர்வுகளில் எனதும் ஒன்று என நான் நம்பவில்லை. இறுதியாக, இதற்கு நானே வருத்தப்படவில்லையே. அதனாலென்ன, நான் நல்ல நட்புறவில் இருக்கிறேன் இல்லையா! [30]

விருதுகள்

தொகு

இவர் தனது கண்டுபிடிப்புக்காக எவிழ்சுவுடன் இணைந்து 1974 ஆம் ஆண்டின் இயற்பியல் நோபல் பரிசு வழங்கப்படவில்லையே தவிர, பல பிற நிறுவனங்கள் இவர் தகைமையைப் போற்றிப் பாராட்டியுள்ளன:

  • ஆல்பெர்ட் ஏ. மைக்கேல்சன் பதக்கம், பிராங்ளின் நிறுவனம், பிலடெல்பியா (1973, முனைவர் எவிழ்சுவுடன் இணைந்து).[31][32]
  • ஜே. இராபர்ட் ஓப்பன்கீமர் நினைவுப் பரிசு, கோட்பாட்டு ஆய்வுகள் மையம், (1978).[33][34]
  • பியேத்ரிசு எம். தின்சுலே பரிசு, அமெரிக்க வானியல் கழகம் (1986).[35]
  • எர்ழ்செல் பதக்கம், அரசு வானியல் கழகம் (1989).[சான்று தேவை]


  • தேசிய கதிர்வானியல் நோக்கீட்டகத்தில் ஜான்சி விரிவுரையாற்றுந் தகைமை (1995).[36]
  • மெகல்லனிக பிரீமியம் பட்டம், அமெரிக்க மெய்யியல் கழகம் (2000).[37]
  • அரசு கழக ஆய்வுநல்கை (FRS) (மார்ச்சு 2003).[38]
  • 2006 ஜூன் 27 இல் அரெசிபோ வான்காணக வில்லியம் ஈ. கோர்டான், எல்வா கோர்டான் விரிவுரைத் தகைமை வழங்கப்பட்டது.[39]
  • இசுத்தான்புல் பன்னாட்டு வானொலி அறிவியல் ஒன்றிய பொது மன்றம் குரோட்டு இரெபெர் பதக்கம் வழங்கியது (19 ஆகத்து 2011)[40]
  • அரசு கழகத்தின் அரசுப் பதக்கம் (2015).[41]

இவருக்குப் பின்வரும் தகைமைப் பட்டம் பல பல்கலைக்கழகங்களால் வழங்கப்பட்டுள்ளன:

  • முதுமுனைவர் பட்டம் (Doctor of Science): எரியோட் வாட் பல்கலைக்கழகம் (1993),[42] வார்விக் பல்கலைக்கழகம் (1995),[42][43] நியூகேசில் பல்கலைக்கழகம் (1995),[42] கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் (1996),[42] கிளாசுகோ பல்கலைக்கழகம் (1997),[42] செசக்சு பல்கலைக்கழகம் (1997),[42] புனித ஆந்திரூசு பல்கலைக்கழகம் (1999),[42] இலண்டன் பல்கலைக்கழகம் (1999),[42] ஏவர்போர்டு கல்லூரி (2000),[42] இலீடுசு பல்கலைக்கழகம் (2000),[42] வில்லியம்சு கல்லூரி (2000),[42][44] போர்ட்சுமவுத் பல்கலைக்கழகம் (2002),[42] பெல்பசுட்டு குயின் பல்கலைக்கழகம் (2002),[42] எடின்பர்கு பல்கலைக்கழகம் (2003),[42] கீலே பல்கலைக்கழகம் (2005),[42] ஆர்வார்டு பல்கலைக்கழகம் (2007),[42][45] தர்காம் பல்கலைக்கழகம் (2007),[42][46] மிச்சிகன் பல்கலைக்கழகம் (2008),[42] சவுதாம்ப்டன் பல்கலைக்கழகம் (2008),[42] டப்ளின் டிரினிட்டி கல்லூரி (2008).[42]
  • பல்கலைக்கழக முனைவர்: யார்க் பல்கலைக்கழகம் (1994).[42]

தகைமைகள்

தொகு

வானியல் பணிகளுக்காக இவரை பிரித்தானிய அரசு இவருக்குப் பிரித்தானியப் பேரரசின் ஆணையர் ஆணை வழங்கியது. பின்னர், 2007 இல் பிரித்தானியப் பேரரசின் சீமாட்டி (மங்கை) ஆணையர் ஆணை வழங்கி மேலும் உயர்வு நல்கிப் பாராட்டியது.[47]

பிரித்தானிய ஒலிபரப்புக் கழக வானொலி அலைவரிசை-4 மகளிர் நேரம் நிகழ்ச்சியில் 2013 பிப்ரவரியில் இவரை பிரித்தானிய நாட்டின் முதல் நூறு திறன்மிக்க பெண்களில் ஒருவராக அறிவித்துள்ளது.[48]

இவர் 2014 இல் எடின்பர்கு அரசௌ வானியல் கழகத்தின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். இப்பதவியை வகித்த முதல் பெண்மணி இவரே.[49]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "BELL BURNELL, Dame (Susan) Jocelyn" (Who's Who 2013, A & C Black, an imprint of Bloomsbury Publishing plc, 2013; online edn, Oxford University Press).
  2. Bell, Susan Jocelyn (1968). The Measurement of radio source diameters using a diffraction method (PhD thesis). University of Cambridge. {{cite thesis}}: Cite has empty unknown parameter: |1= (help)
  3. 3.0 3.1 எஆசு:10.1038/217709a0
    This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
  4. 4.0 4.1 Pilkington, J. D. H.; Hewish, A.; Bell, S. J.; Cole, T. W. (1968). "Observations of some further Pulsed Radio Sources". Nature 218 (5137): 126. doi:10.1038/218126a0. 
  5. "Dame Jocelyn Bell Burnell". The Life Scientific. அணுகப்பட்டது 18 January 2014.
  6. Hargittai, István (2003). The road to Stockholm : Nobel Prizes, science, and scientists. Oxford: Oxford University Press. p. 240. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0198607857.
  7. வார்ப்புரு:AcademicSearch
  8. Erica Westly (6 October 2008). "No Nobel for You: Top 10 Nobel Snubs". Scientific American.
  9. Horace Freeland Judson (20 October 2003). "No Nobel Prize for Whining". New York Times. http://query.nytimes.com/gst/fullpage.html?sec=health&res=9C02E4DE123EF933A15753C1A9659C8B63. பார்த்த நாள்: 3 August 2007. 
  10. 10.0 10.1 1974 Nobel Physics Prize committee press release
  11. Longair, Malcolm (2006). The Cosmic Century: A History of Astrophysics and Cosmology. Cambridge University Press. p. 196. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-47436-1.
  12. Johnston, Colin (March 2007). "Pulsar Pioneer visits us" (PDF). Astronotes (Armagh Planetarium): pp. 2–3 இம் மூலத்தில் இருந்து 2012-02-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120225121109/http://armaghplanet.com/pdf/Astronotes/Astronotes2007/Astronotes_Mar_2007.pdf. பார்த்த நாள்: 2009-07-10. 
  13. At Mount School 1956–61. She is the 2007 President of the Old Scholars' Association. பரணிடப்பட்டது 2007-04-03 at the வந்தவழி இயந்திரம்
  14. Beautiful Minds Jocelyn Bell Burnell
  15. "...upon entering the faculty, each student was issued a set of tools: a pair of pliers, a pair of long-nose pliers, a wire cutter, and a screwdriver...", said during a public lecture in Montreal during the 40 Years of Pulsars conference, 14 August 2007
  16. "The Restless Universe: Some Highlights of Physics". OpenLearn. The Open University. Archived from the original on 23 ஜூன் 2015. பார்க்கப்பட்ட நாள் 27 January 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  17. "Jocelyn Bell Burnell". Contributions of 20th Century Women to Physics (CWP). பார்க்கப்பட்ட நாள் 2007-07-07.
  18. "University of Bath Press Release, announcing Bell Burnell's retirement". Archived from the original on 2007-05-29. பார்க்கப்பட்ட நாள் 2018-08-24.
  19. "Queen's Birthday Honours 2007". University of Oxford. 18 June 2007. Archived from the original on 2014-04-25. பார்க்கப்பட்ட நாள் 2007-07-10.
  20. "IoP website>Governance>Council (accessed 1 May 2008)". Archived from the original on 9 மார்ச் 2011. பார்க்கப்பட்ட நாள் 24 ஆகஸ்ட் 2018. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  21. Bell Burnell, S. J. (2004). "So Few Pulsars, So Few Females". Science 304 (5670): 489–426. doi:10.1126/science.304.5670.489. பப்மெட்:15105461. மேலும் காண்க பெல்பாசுட்டுத் தொலைவரி நேர்காணல்
  22. "Face to Face: science star who went under the radar of Nobel Prize judges"(interview) by Vicky Allan in The Herald Scotland 5-01-2015
  23. Details of the print version of the lecture are given in the Bibliography
  24. Transcript of interview by Joan Bakewell for the BBC Radio 3 series "Belief" (2 January 2006)
  25. Engaging with the Quaker Testimonies: a Toolkit, 2007 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-901689-59-9
  26. Burnell, Jocelyn Bell. 2013. [books.google.com.mx/books?id=4wg2uCA-x64C&source=gbs_navlinks_s A Quaker Astronomer Reflects: Can a Scientist Also Be Religious?]. Interactive Publications, p. 11
  27. BBC Radio 4 interview 25 October 2011
  28. http://www.bbc.co.uk/programmes/b00s0ggv
  29. Fred Hoyle: the scientist whose rudeness cost him a Nobel prize
  30. "Quote by Bell Burnell regarding not sharing in the Nobel Prize". Archived from the original on 2012-07-13. பார்க்கப்பட்ட நாள் 2016-02-15.
  31. "Franklin Laureate Database - Albert A. Michelson Medal Laureates". Franklin Institute. Archived from the original on 8 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 15 June 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  32. "Franklin Institute citation". Archived from the original on 2012-02-05. பார்க்கப்பட்ட நாள் 2018-08-24.
  33. Walter, Claire (1982). Winners, the blue ribbon encyclopedia of awards. Facts on File Inc. p. 438. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780871963864.
  34. "J. Bell-Burnell, received the 1978 J. Robert Oppenheimer Memorial Prize". Physics Today (American Institute of Physics): 68. April 1978. doi:10.1063/1.2995004. Bibcode: 1978PhT....31d..68.. http://scitation.aip.org/content/aip/magazine/physicstoday/article/31/4/10.1063/1.2995004. பார்த்த நாள்: 1 March 2015. 
  35. American Astronomical Society பரணிடப்பட்டது 2018-08-09 at the வந்தவழி இயந்திரம் Beatrice M. Tinsley Prize
  36. "Jansky Home Page". பார்க்கப்பட்ட நாள் 2009-05-14.
  37. "Official list of Premium winners". Archived from the original on 2009-04-17. பார்க்கப்பட்ட நாள் 2018-08-24.
  38. Royal Society article about Bell Burnell, with portrait
  39. Gold, Lauren (July 6, 2006). "Discoverer of pulsars (aka Little Green Men) reflects on the process of discovery and being a female pioneer". Cornell Chronicle. http://www.news.cornell.edu/stories/2006/07/jocelyn-bell-burnell-reflects-discovery-pulsars. 
  40. http://www.qvmag.tas.gov.au/qvmag/?c=89
  41. "Royal Medal". Royal Society. பார்க்கப்பட்ட நாள் 20 July 2015.
  42. 42.00 42.01 42.02 42.03 42.04 42.05 42.06 42.07 42.08 42.09 42.10 42.11 42.12 42.13 42.14 42.15 42.16 42.17 42.18 42.19 42.20 "Prof Dame Jocelyn Bell Burnell, DBE". Debrett's People of Today. பார்க்கப்பட்ட நாள் 2013-03-24.
  43. "Honorary Graduates and Chancellor's Medallists". University of Warwick. பார்க்கப்பட்ட நாள் 2013-03-24.
  44. "Williams College to honor eight renowned scientists and dedicate new science center, Sept. 23". Williams College Office of Public Affairs. 2000-08-02. பார்க்கப்பட்ட நாள் 2013-03-24.
  45. "Honorary degree recipients and citations, 2007". Harvard Gazette. 2007-06-07. பார்க்கப்பட்ட நாள் 2013-03-24.
  46. "Honorary degree ceremony". Durham University. பார்க்கப்பட்ட நாள் 2013-03-24.
  47. The Guardian Commentary on the Birthday Honours, 16 June 2007
  48. BBC Radio 4, Woman's Hour Power list
  49. "Dame Jocelyn Bell Burnell to be Royal Society's first female president" BBC News (web) 5 February 2014

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோசெலின்_பெல்_பர்னல்&oldid=3792220" இலிருந்து மீள்விக்கப்பட்டது