அரிவாள்செல் சோகை
அரிவாள்செல் சோகை அல்லது அரிவாள் உயிரணுச் சோகை அல்லது சிக்கில் நோய் (Sickle cell disease (SCD) என்பது ஒரு மரபணுவால் வந்த ஒரு இரத்தக் கோளாறு நோயாகும்.[2] இதில் மிகவும் பொதுவான கோளாறின் வகையாக அரிவாள்செல் சோகை என அறியப்படுகிறது. இந்தச் கோளாறு உள்ளவர்களுக்கு செங்குருதியணுக்களில் இயல்பான எண்ணிக்கையில் இருக்க வேண்டிய ஹீமோகுளோபின் அளவு தென்படுவதில்லை. அதனால், சீரான ரத்த ஓட்டமில்லாமல், போதுமான ஆக்சிசன் கிடைக்காமல் உடலில் உள்ள பல்வேறு உறுப்புகள் தங்களின் செயல்திறனை இழக்கும் நிலை ஏற்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவரின் இரத்தச் சிவப்பணுக்கள் முழுமையாக வளர்ச்சி அடையாமல் அரை வட்டமாக, அரிவாள் போன்று இருக்கும். அரிவாள்செல் சோகையின் சிக்கல்கள் பொதுவாக 5 முதல் 6 மாதங்கள் வரையிலான காலகட்டத்தில் தொடங்குகின்றன. இதனால் வலி ஏற்படுதல் ("அரிவாள் செல் நெருக்கடி"), அனீமியா, கைகள் மற்றும் கால்களில் வீக்கம், பாக்டீரியா தொற்றுக்கள் மற்றும் பக்கவாதம் போன்ற பல உடல்நலப் பிரச்சினைகள் உருவாகலாம்.[1] நோயிக்கு ஆளானவர்களுக்கு வயது ஏறும்போது நாட்பட்ட வலி ஏற்படலாம். வளர்ந்த நாடுகளில் இவர்களின் சராசரி ஆயுட்காலம் 40 முதல் 60 ஆண்டுகள் ஆகும்.
அரிவாள்செல் சோகை Sickle cell disease | |
---|---|
ஒத்தசொற்கள் | அரிவாள்செல் சோகை |
படம் (A) சாதாரண சிவப்பு இரத்த அணுக்கள் இரத்தக் குழாய்களில் எளிதாக பாய்வதைக் காட்டுகிறது. சாதாரண ஹீமோகுளோபினின் சாதாரண இரத்த சிவப்பு அணுவின் குறுக்குவெட்டுத் தோற்றத்த்தைக் காட்டுகிறது. படம் (B) அசாதாரண, அரிவாள் சிவப்பு இரத்த அணுக்கள் இரத்துக் குழாய்களின் கிளைக் குழாய்களில் சிக்கிக்கொண்டுள்ளதைத் காட்டுகிறது. அரிவாள்செல் சிவப்பணுவின் சாதாரண இரத்த சிவப்பு அணுவின் குறுக்குவெட்டுத் தோற்றத்த்தைக் காட்டுகிறது. | |
சிறப்பு | இரத்தவியல் |
அறிகுறிகள் | வலி ஏற்படுதல், அனீமியா, கைகள் மற்றும் கால்களில் வீக்கம், பாக்டீரியா தொற்றுக்கள் மற்றும் பக்கவாதம்[1] |
சிக்கல்கள் | நாட்பட்ட வலி[2] |
வழமையான தொடக்கம் | 5–6 மாத வயது[1] |
காரணங்கள் | மரபியல்[3] |
நோயறிதல் | குருதிப் பரிசோதனை[4] |
சிகிச்சை | தடுப்பு மருந்தேற்றம், நுண்ணுயிர் எதிர்ப்பிகள், high fluid intake, இலைக்காடி supplementation. வலிநீக்கி, குருதி மாற்றீடுகள்[5][6] |
முன்கணிப்பு | ஆயுள் எதிர்பார்ப்பு 40–60 ஆண்டுகள் (வளர்ந்த நாடுகள்)[2] |
நிகழும் வீதம் | 4.4 மில்லியன் (2015)[7] |
இறப்புகள் | 114,800 (2015)[8] |
அரிவாள்செல் சோகை பாதிப்புக்கு உள்ளான தந்தை தாய்க்குப் பிறக்கும் குழந்தைகள் இந்த மாறுதலுக்கு உள்ளான இரண்டு மரபணுப் பிரதிகளைப் பெறுகின்றன.[3] இது நிறப்புரி 11 இல் நிகழ்கிறது.[9] ஒவ்வொரு ஹீமோகுளோபின் மரபணுவிலும் ஏற்படும் மரபணு திடீர்மாற்றத்தை பொறுத்து, பல துணைப் பிரிவு பாதிப்புகள் உள்ளன. [4]
அரிவாள்செல் சோகை குறித்துப் போதுமான ஆய்வுகள் முன்னெடுக்கப்படாத காரணத்தால் இந்தக் குறைபாட்டுக்கு நிரந்தரமான தீர்வோ மருந்தோ இல்லை. பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைப் பொறுத்து, மருத்துவமனைகளில் சில முதலுதவிகள், அடிப்படையான சில சிகிச்சைகள் அளிக்கப்பட்டு இந்த நோய் நிர்வகிக்கப்படுகிறது. இந்த நோய் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குப் பரவுவதற்கு, அகமண முறை காரணமாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டில், குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் இந்த நோய் பரவலாகக் காணப்படுகிறது.[10]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "What Are the Signs and Symptoms of Sickle Cell Disease?". 12 June 2015. Archived from the original on 9 March 2016. பார்க்கப்பட்ட நாள் 8 March 2016.
- ↑ 2.0 2.1 2.2 "What Is Sickle Cell Disease?". 12 June 2015. Archived from the original on 6 March 2016. பார்க்கப்பட்ட நாள் 8 March 2016.
- ↑ 3.0 3.1 "What Causes Sickle Cell Disease?". 12 June 2015. Archived from the original on 24 March 2016. பார்க்கப்பட்ட நாள் 8 March 2016.
- ↑ 4.0 4.1 "How Is Sickle Cell Disease Diagnosed?". 12 June 2015. Archived from the original on 9 March 2016. பார்க்கப்பட்ட நாள் 8 March 2016.
- ↑ "Sickle-cell disease and other haemoglobin disorders Fact sheet N°308". January 2011. Archived from the original on 9 March 2016. பார்க்கப்பட்ட நாள் 8 March 2016.
- ↑ "How Is Sickle Cell Disease Treated?". National Heart, Lung, and Blood Institute. 12 June 2015. Archived from the original on 9 March 2016. பார்க்கப்பட்ட நாள் 8 March 2016.
- ↑ GBD 2015 Disease and Injury Incidence and Prevalence, Collaborators. (8 October 2016). "Global, regional, and national incidence, prevalence, and years lived with disability for 310 diseases and injuries, 1990–2015: a systematic analysis for the Global Burden of Disease Study 2015.". Lancet 388 (10053): 1545–1602. doi:10.1016/S0140-6736(16)31678-6. பப்மெட்:27733282.
- ↑ GBD 2015 Mortality and Causes of Death, Collaborators. (8 October 2016). "Global, regional, and national life expectancy, all-cause mortality, and cause-specific mortality for 249 causes of death, 1980–2015: a systematic analysis for the Global Burden of Disease Study 2015.". Lancet 388 (10053): 1459–1544. doi:10.1016/S0140-6736(16)31012-1. பப்மெட்:27733281.
- ↑ "Learning About Sickle Cell Disease". National Human Genome Research Institute. 9 May 2016. Archived from the original on 4 January 2017. பார்க்கப்பட்ட நாள் 23 January 2017.
- ↑ ந.வினோத் குமார் (19 சூன் 2018). "சிக்கில் நோய் மீது எப்போது கவனம் திருப்பப்போகிறது தமிழக அரசு?". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 27 சூன் 2018.