குருதி மாற்றீடு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
குருதி மாற்றீடு என்பது ஒருவரின் குருதிச் சுற்றோட்டத்தொகுதியினுள் குருதியின் கூறுகள் வெளியிலிருந்து சிரைவழி (intravenously) மாற்றீடு செய்யப்படல். பல்வேறுபட்ட மருத்துவ நிலைமைகளில் ஒருவரில் இழக்கப்பட்ட குருதிக் கூறுகளை ஈடு செய்வதற்காக இவ்வகையான குருதி மாற்றீடு என்னும் மருத்துவ செயல்முறை நடைமுறைப்படுத்தப்படும். முன்னைய நாட்களில் பொதுவாக முழுமையான குருதியே இவ்வகையான மாற்றீட்டில் பயன்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது, செங்குருதியணு, வெண்குருதியணு, குருதிச் சிறுதட்டுக்கள், குருதி நீர்மம் (Blood plasma), குருதி உறைதலிற்கான காரணிகள் (clotting factors) போன்ற குருதிக் கூறுகள் தனித்தனியாகவும் பயன்படுத்தப்படும்.
குருதி மாற்றீடு | |
---|---|
இடையீடு | |
![]() | |
ICD-9-CM | 99.0 |
MeSH | D001803 |
ஒவ்வாமை சோதனை தொகு
மனிதரில் குருதி மாற்றீடு செய்யப்படும்போது, மாற்றீடு செய்யப்படும் குருதி ஒவ்வாமை அற்றதாக இருக்க வேண்டுமென்பதனால், முதலிலேயே சோதனைக்கு உட்படுத்தப்படும். இங்கே குருதிக் குழு முறைமைகள் கருத்தில் கொள்ளப்படும்.