நாரோ-1 (Naro-1[2], என்பது தென்கொரியாவினால் ஏவப்பட்டா முதலாவது ஏவுகலன் ஆகும். இது முன்னர் "கே.எஸ்.எல்.வி" (கொரியா விண்வெளி ஏவுகலன், Korea Space Launch Vehicle, KSLV) என அழைக்கப்பட்டது. இது 2009, ஆகஸ்ட் 25 இல்விண்ணுக்கு ஏவப்பட்டது. கொரிய மண்ணில் இருந்து ஏவப்பட்ட முதலாவது விண்கலம் ஆகும். இவ்விண்கலத்தை தென்கொரிய தேசிய விண்வெளி ஆய்வகமான "கொரிய விண்வெளி ஆய்வுக் கழகம்" (KARI) தயாரித்து, நாரோ ஏவு மையத்தில் இருந்து ஏவியிருந்தது.

நாரோ-1
Naro-1
நாரோ-1 ஏவுகலன்
நாரோ-1 ஏவுகலன்
தரவுகள்
இயக்கம் ஏவுகலன்
அமைப்பு காரி, குரூனிச்சோவ்
நாடு  தென் கொரியா
 உருசியா
அளவு
உயரம் 30 மீ (98 அடி)
விட்டம் 3.9 மீ (12.7 அடி)
நிறை 140,000 கிகி (300,000 இறா)
படிகள் 2
கொள்திறன்
Payload to LEO 100 கிகி (220 இறா)
ஏவு வரலாறு
நிலை பாவிப்பில்
ஏவல் பகுதி நாரோ விண்வெளி மையம்
மொத்த ஏவல்கள் 1
பகுதி தோல்விகள் 1[1]
முதல் பயணம் ஆகஸ்ட் 25, 2009, 8:00 UTC
First Stage
Engines 1 அங்காரா UM RD-191
Thrust 2,094.7 கிநி
குறித்த உந்தம் 338 செவ்
எரிநேரம் 300 செக்
எரிபொருள் LOX/மண்ணெண்ணெய்
Second Stage
Engines 1 KSR-1
Thrust 86.2 கிநி
குறித்த உந்தம் 250 செக்
எரிநேரம் 25 செக்
எரிபொருள்


திட்டப்படி 100 கிரோகிராம் எடை கொண்ட செயற்கை கோளான அறிவியல் தொழில் நுட்ப செயற்கை கோள்-2ஐ புவியின் தாழந்த சுற்று வட்டப் பாதையில் இந்த விண்கலன் கொண்டு சென்றது[3]. செயற்கைக் கோள் அடுத்த 2 ஆண்டுகளில் புவியை சுற்றிப் பறக்கும் வண்ணம் அனுப்பப்பட்டது. இந்த செய்மதி வெற்றிகரமாக ஏவப்பட்டாலும், அதற்கென உரிய சுற்றுப்பாதைக்கு வரமுடியவில்லை. இந்த ரொக்கட் வெற்றிகரமாக இயக்கப்பட்டிருந்தால் உலகின் ரொக்கட் வளத்தைக் கொண்டுள்ள நாடுகளில் தென்கொரியா பத்தாவது இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கும்[4][5][6].

மேற்கோள்கள்

தொகு
  1. S. Korea's first space rocket launch fails to send satellite into orbit
  2. Korea Times – S. Korea Completes Work on Naro Space Center
  3. "வெற்றிகரமான ஏவுகலன் செலுத்தல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2009-08-26.
  4. http://media.daum.net/foreign/englishnews/view.html?cateid=1047&newsid=20090612033010010&p=koreaherald
  5. "தென்கொரியா ரொக்கட் ஏவுவதற்கான சகல தயாரிப்புகளையும் பூர்த்தி செய்தது". Archived from the original on 2012-03-09. பார்க்கப்பட்ட நாள் 2009-08-26.
  6. S Korean launch 'partial success', பிபிசி

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாரோ-1&oldid=3560579" இலிருந்து மீள்விக்கப்பட்டது