பவுண்டு (pound, lb, இறாத்தல்) என்பது எடையைக் குறிக்கும் ஒரு அலகு ஆகும். இது ஒரு பிரித்தானியப் பேரரசிய (இம்பீரியல்) அலகு என்றாலும், இன்றைய காலத்தில் ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் இன்னும் புழக்கத்தில் இருக்கிறது. முந்தைய காலத்தில் பல வகையான பவுண்டுகள் இருந்தாலும், ஒரு பவுண்டு என்பது பொதுவாக 0.453 592 37 கிலோகிராம் என்று தரப்படுத்தப் பட்டுள்ளது. ஆங்கிலத்தில் சுருக்கமாக lb என்று வழங்கப்படும். இது எடையைக் குறிக்கும் உரோம, இலத்தீனிய சொல்லாகிய libra pondo என்பதன் சுருக்கமாகும்.[1][2][3]

எடையைக் குறிக்க மட்டுமல்லாமல், இது நிறையையும் (mass) குறிக்க உதவும். அதனைப் பவுண்டு நிறை என்று வழங்குவர்.

மேற்கோள்கள்

தொகு
  1. IEEE Std 260.1-2004, IEEE Standard Letter Symbols for Units of Measurement (SI Units, Customary Inch-Pound Units, and Certain Other Units)
  2. Fletcher, Leroy S.; Shoup, Terry E. (1978), Introduction to Engineering, Prentice-Hall, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0135018583, LCCN 77024142.:257
  3. "pound sign". ஆக்சுபோர்டு ஆங்கில அகராதி. Archived from the original on 3 April 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இறாத்தல்&oldid=4133272" இலிருந்து மீள்விக்கப்பட்டது