ஜான் பார்டீன்

ஜான் பார்டீன் (John Bardeen, மே 23, 1908 – சனவரி 30, 1991) அமெரிக்க இயற்பியலாளரும், மின்பொறியியலாளரும் ஆவார். கணித இயற்பியலில் ஆய்வு மேற்கொண்டு பிறின்சுடன பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். அமெரிக்கக் கடல் போர் ஆய்வகத்தில், இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் பணியாற்றினார். அதன் பின் பெல் தொலைபேசி ஆய்வகத்திலும் பணியில் இருந்தார்.

ஜான் பார்டீன்
John Bardeen
Bardeen.jpg
பிறப்புமே 23, 1908(1908-05-23)
மேடிசன், ஐக்கிய அமெரிக்கா
இறப்புசனவரி 30, 1991(1991-01-30) (அகவை 82)
பாஸ்டன், ஐக்கிய அமெரிக்கா
வாழிடம்ஐக்கிய அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
துறைஇயற்பியல்
பணியிடங்கள்பெல் ஆய்வுக்கூடங்கள்
இலினொய் பல்கலைக்கழகம் (அர்பானா சாம்பேன்)
கல்வி கற்ற இடங்கள்விஸ்கொன்சின் பல்கலைக்கழகம் (மேடிசன்)
பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்யூஜின் விக்னர்
அறியப்படுவதுதிரிதடையம்
மீக்கடத்துத்திறன்
விருதுகள்இயற்பியலுக்கான நோபல் பரிசு (1956)
இயற்பியலுக்கான நோபல் பரிசு (1972)
துணைவர்ஜேன் (1907–1997)

இயற்பியலுக்கான நோபல் பரிசை இரு தடவைகள் வென்ற ஒரே ஒருவர் இவராவார். முதலில் 1956 ஆம் ஆண்டில் திரிதடையத்தைக் கண்டுபிடித்தமைக்காக வில்லியம் ஷாக்லி, வால்ட்டர் பிராட்டன் ஆகியோருடனும், 1972 ஆம் ஆண்டில் மீக்கடத்துதிறன் கோட்பாட்டினை சீர்செய்தமைக்காக லியோன் கூப்பர், ஜான் சிறீபர் ஆகியோருடனும் இணைந்து இரு தடவைகள் நோபல் பரிசுகளை வென்றார். பின்நாளைய மீகடத்தல் ஆய்வுகளுக்கு இவர்கள் கண்டுபிடிப்பே அடிப்படையாகும். குறைகடத்திகளின் பண்புகளைப் பற்றி விரிவாக ஆய்ந்துள்ளார்.

1990 ஆம் ஆண்டில், ஜான் பார்டீன் லைஃப்' இதழின் "நூற்றாண்டின் புகழ்பெற்ற 100 அமெரிக்கர்கள்" பட்டியலில் இடம்பெற்றார்.[1]

மேற்கோள்கள்தொகு

  1. "John Bardeen, Nobelist, Inventor of Transistor, Dies". Washington Post. 1991-01-31. Archived from the original on 2012-11-02. https://web.archive.org/web/20121102062647/http://www.highbeam.com/doc/1P2-1047095.html. பார்த்த நாள்: 2007-08-03. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_பார்டீன்&oldid=3213739" இருந்து மீள்விக்கப்பட்டது